நீங்க
வந்தா கூட்டம் அதிகமா கூடிடும், அதனால நீங்க வருவதை தவிர்ப்பது நல்லதுனு
நானே அவர்கிட்ட சொல்லிட்டேன்".. டெல்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு
விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றால் கூட்டம் அதிகம் ஆகிவிடும் என வைகோ
பேட்டி
விழா என்றால் விண்முட்டும் ஆரவாரம் இருக்க வேண்டும். வெடித்துச் சிதறும் மக்கள் வெள்ளம் இருக்க வேண்டும். அப்படித்தான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள் ஆனால், இங்கு என்ன நடக்கிறது?
நீங்க வந்தா கூட்டம் அதிகமா கூடிடும், அதனால நீங்க வருவதை தவிர்ப்பது நல்லதுனு நானே அவர்கிட்ட சொல்லிட்டேன்...
என்னே ஒரு விசித்திர நியாயம்! விழாவிற்கு ஆள் சேர்க்கத்தானே அழைப்பு? ஆனால், கூட்டத்தைக் கண்டே நடுங்கும் இந்தத் தலைமைக்கு என்ன பெயர் வைப்பது? அப்படியானால், ராகுலையும் விஜய்யையும் ஒரு பூட்டிய அறைக்குள், யாருக்கும் தெரியாமல் இருட்டறையில் சந்திக்க வைத்து, அங்கு புத்தகத்தை வெளியிடலாம்தானே? ஒளிந்து வாழ்வதற்கா இந்த ஆர்ப்பாட்டங்கள்?
ஆனால் உண்மையாக நடந்த விஷயம் என்னவென்றால்
மாணவர்களின் கொந்தளிப்பு ஓய்ந்துவிட்டது. 'ஜனநாயகன்' ஓசை அடங்கிவிட்டது. இதோ, தமிழகத்தின் அடுத்த மிகப் பெரிய பிரச்சனை மேகதாது அணைப் பிரச்சனை! டெல்லியில் ராகுலை சந்திச்சா அது பற்றி பேசினாங்களான்னு இந்த உபிங்க கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு படுத்திடுவாங்க.. அந்த அக்னிப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் திராணி இருக்கிறதா?
இல்லை... டெல்லி எஜமான்கள் கோபப்பட்டுவிடுவார்களோ? என்னை மீறி எப்படி இன்னொருவரைச் சந்தித்தாய் என்று அதிகாரக் கயிற்றைக் கொண்டு வந்து கழுத்தை இறுக்கிவிடுவார்களோ என்ற கோழைத்தனமான நடுக்கம்!
ஆம்! நம் ஹீரோ, ஹீரோவிலிருந்து ஜீரோவாகி தன் பிம்பம் உடைந்துபோய்விடுமோ என்று அஞ்சி நடுங்குகிறார். அந்தப் பயத்தை மூடிமறைக்க, கோழைத்தனத்தை நியாயப்படுத்தத் துடிக்கும் மலிவான அரசியல் பில்டப்தான் இந்த டெல்லி நாடகம்! மக்களின் உரிமைக்காகக் கொதித்தெழு வேண்டியவர்கள், பதவிப் பயத்தால் அமைதி காக்கும் இந்த மௌன நாடகத்தின் முகத்திரை ஒருநாள் கிழித்தானே பொகிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.