Monday, July 20, 2026

 முதல்வர் விஜய் மீதான அவதூறு வழக்கில் அதிரடி தீர்ப்பு! படிங்க, சிரியுங்க
     

#மார்க்கண்டேயன்#MaduraiThamizhan #AvargalUnmaigal #PoliticalSatire #KuruviMovie #Vijay #TamilComedy #TrendingMeme #CourtComedy #TamilNaduPolitics #DMK #MLA


வக்கில் : கணம் நீதிபதி அவர்களே, முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள எனது கட்சிக்காரர் குற்றவாளி அல்ல. அவர் விஜய்யை ஒருபோதும் முதலமைச்சராகக் கருதிப் பேசவில்லை; அவரது பார்வையில் விஜய் இப்போதும் ஒரு நடிகர்தான்.

உண்மையைச் சொல்லப் போனால், கூட்டத்தில் பேசுவதற்குச் சற்று முன்புதான் அவர் விஜய் நடித்த "குருவி" படத்தைப் பார்த்திருக்கிறார். இப்படியும் ஒரு படமா? என்ற அதிர்ச்சியிலும் கடுப்பிலும்தான் அவர் கோபமாகப் பேசிவிட்டாரே தவிர, அவதூறு பரப்பும் நோக்கம் அவருக்கு இல்லை.

ஆகையால், இது ஒரு திட்டமிட்ட குற்றம் அல்ல; ஒரு ஏமாற்றமடைந்த சினிமா ரசிகனின் தன்னிச்சையான ஆதங்க வெளிப்பாடு மட்டுமே! உண்மையில் இங்குத் தவறு நடந்திருந்தால், அது ஒரு நடிகர் முதலமைச்சராய் மாறியதில்தான் இருக்கிறது; அதனால்தான் இதுபோன்ற அசாதாரண சம்பவங்கள் நிகழ்கின்றன.

 எனவே, மேற்கண்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, எனது கட்சிக்காரரைக் குற்றமற்றவர் என விடுவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


நீதிபதி :  உங்கள் வாதம் சரியென்றாலும் அவர் முதல்வரை அப்படி பேசி இருக்க கூடாது..  மேலும் குருவி படம் பார்த்த கொடுமையிலேயே இவன் அனுபவிச்ச வேதனை போதும்,  அதனால்  இந்த கேஸை க்ளோஸ் பண்ணி இவ்ரை விடுதலை பண்ணுகின்றேன் .மேலும்  அரசியல் தலைவர்கள், இனிமேலும் விஜய்யின் படங்களை  பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியில்லை என்றால் பார்த்த சிறிது காலத்திற்கு மேடையிலே பேசாமல் இருப்பது நலம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

#MaduraiThamizhan #AvargalUnmaigal #PoliticalSatire #KuruviMovie #Vijay #TamilComedy #TrendingMeme #CourtComedy #TamilNaduPolitics #DMK #MLA #மார்க்கண்டேயன்



0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.