Sunday, July 19, 2026

 விதிமுறைகள்  மாறுகிறது: அதிகார வர்க்கத்தின் புதிய ஆட்டம்!

  


 

இஸ்ரோவில் இருந்து ஏராளமான விஞ்ஞானிகள் அடுத்தடுத்து வெளியேறுகிறார்கள் : செய்தி.

இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேறுகிறார்கள் என்று சொன்னால் சிலர் அதைக் கேட்டு அதிர்ச்சியாவார்கள். ஆனால் இதில் அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை. இது ஒருஅரசின் புதிய  ஸ்டைல்.

முன்பு அரசு நிறுவனத்தை நேரடியாக தனியாருக்கு விற்றுவிடுவார்கள். ஆனால் இப்போது அதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதானுங்க  அரசு செய்ய வேண்டிய வேலைகளுக்கு  தனியாருக்கு லைசன்ஸ் கொடுத்து செய்ய சொல்லிடுவாங்க.

அப்புறம் அரசு நிறுவனத்தில் இருக்கும் நல்லா படித்த, நல்லா வேலை செய்பவர்கள் அங்கு சம்பளம் அதிகம், AC ரூம், காபி, லஞ்ச் free என்று சொல்லிட்டு தனியாருக்கு போயிடுவார்கள்.

கடைசியில் அரசு நிறுவனம் சின்னதாக பாழடைந்த நிறுவனமாக மாறிடும். அதன் பின் சின்ன அலுவலகம், சின்ன பட்ஜெட் என்று வைத்து பெயருக்கு மட்டும் ஓடும் நிலை. இது விற்றது இல்லை, ஆனால் விற்றதுக்கு சமமான விளைவு. அரசு நிறுவனம் மெதுவாக “பழைய அரசாங்க குடியிருப்பா” மாறிடும். தனியார் நிறுவனம் “புது கேட்டட் கம்யூனிட்டி” மாதிரி வளர்ந்து போயிடும்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேறுவது ஒரு செய்தி இல்லை. அது புதிய இந்தியாவின் புதிய மாடலின் side-effect. அம்புட்டுதானுங்க.

டிஸ்கி:

பல நாடுகளில் தனியார் துறையினரும் இப்படித்தானே செயல்படுகிறார்கள், ஆனால் இங்கு மட்டும் இப்படி குறை சொல்ல வந்துடீங்களே என்று கேட்பவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். பல நாடுகளில் தனியார் துறைக்கு சரிசமமாக அரசு துறையும் களத்தில் போட்டி போடும். ஆனால் இந்தியாவில் ஒரு சிலரின் நன்மைகளுக்காக ஆளும் அரசின் தலைவர்களே தனியார் துறைக்கு மறைமுக உதவி செய்து கொண்டு அரசு துறையை வீழ்ச்சி அடையச் செய்துவிடுவார்கள். இதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். இதற்கு மேலும் நான் சொன்ன விபரங்கள் உங்களுக்கு புரியவில்லை என்றால், ஒன்று நீங்கள் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு தருபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவு வளரவில்லை என்று அர்த்தம். அவ்வளவுதானுங்க.

கொசுறு:

திமுக, தவெக எதிராக ஒரு ஒரு 100 பேர் கொண்ட ஒரு இளம் குழுவை ஏற்படுத்தி ஜென்ஸீ பெயர் வைத்து செயல்படுகிறார்கள். இது டோட்டல் வேஸ்ட். இணையத்தில் இருக்கிற பூமர் உபிகளை இதற்காக பயன்படுத்தி களம் இறங்கினாலே போதும். அவர்களை வைத்து ஒரு செய்தியை வைரலாக்கி அதை பேசுபொருளாக மாற்றிவிடலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல்—இணைய பூமர் உபிக்கள் எல்லாம் தவெக ஜென்ஸீ போடும் ரீல்ஸ்களை பார்த்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதிலிருந்து அவர்களை முதலில் காப்பாற்றினால்தான் கழகம் வளரும். #என்ன நான் சொல்லுறது கரெக்ட்தானே நண்பர்களே




அன்புடன்
மதுரைத்தமிழன்


Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.