Saturday, July 18, 2026

 கடவுளுக்குச் சிகிச்சை? இந்திய மருத்துவத்தின் அவமானகரமான 'கோமாளி' நாடகம்!
     

#MaduraiThamizhan #SocialSatire #IndianMedicine #Superstition #ScienceVsFaith #MedicalEthics #AwakenIndia #EditorialPunch #அவரகள்உண்மைகள் #மதுரைத்தமிழன் #அறிவியல் #மூடநம்பிக்கை #மருத்துவத்துறை #சமூகவிமர்சனம்


#ஜான்பூர் மாவட்டத்தின் #ஜெகந்நாதர் கோவில் நிகழ்வு என்பது வெறும் செய்தி அல்ல . அது நவீன இந்தியாவின் அறிவாற்றல் வீழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை. ஒருபுறம் அதிநவீன மருத்துவக் கருவிகள்; மறுபுறம், அந்த அறிவை ஏலத்திற்கு வைத்திருக்கும் மருத்துவர் குழு. கடவுளுக்குச் சிகிச்சை நடக்கும் இந்த அபத்தக் காட்சி, அறிவியலுக்கும் பக்திக்கும் இடையிலான எல்லையைத் தாண்டி, அறிவின் மீதே அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறது.

மருத்துவர் என்பவர் மனித உடல் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொண்ட நிபுணர். ஆனால் அந்த நிபுணத்துவம் பொதுவுணர்வைத் தாண்டி ஒரு சிம்பாலிக் ஷோவாக மாறும்போது, அது முன்னேற்றம் அல்ல .அது அறிவின் நிழலில் ஓடும் மூடநம்பிக்கையின் புதிய வடிவம் என்றுதான் சொல்வேன். ஆபரேஷன் தியேட்டரில் மனித உயிரைக் காக்கத் முடியாதவர்கள், கோவிலில் கடவுளைக் காக்கப் போய் நிற்கிறார்கள்!

இந்தியாவில்  மருத்துவர்கள் அதிகம் இருக்கலாம. ஆனால் அந்தப் பட்டத்தைச் சுமக்கும் தகுதி எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற கேள்வி இப்போது எழுகிறது. படிக்காத பாமரனின் மூடநம்பிக்கையை விட, படித்துவிட்டுச் செய்யும் இந்த மூடநம்பிக்கை அபாயகரமானது. இத்தகைய மேதாவிகள் தங்கள் அறிவை தர்க்கத்திற்குப் பயன்படுத்தாமல், ஒரு Publicity Stunt-க்காகப் பயன்படுத்துவது, சமூகத்தை இழிவு படுத்துவது மாதிரிதான்.


நம்பிக்கைக்கும், அறிவிற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உண்டு. அந்தத் தர்க்கரீதியான கோடு மறையும்போது, பக்தி என்பது ஒரு மெக்கானிக்கல் பிசினஸ் ஆகிவிடுகிறது. அறிவு வளர்ந்தாலும், சிந்தனை வளராத ஒரு சமூகம், இன்னும் எத்தனை காலத்திற்கு இது போன்ற புதிய உடையில் மூடநம்பிக்கைகளை சுமந்து கொண்டிருக்கும்?
   



 என்னைக் கேட்டால் இந்திய மருத்துவ ஆணையம் இந்த டாக்டர்களின் மருத்துவ லைசன்ஸை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பேன். அறிவியலைக் கேலிக்கூத்தாக்கும் இவர்களுக்கு, மருத்துவத் துறையில் இருக்க எந்தத் தகுதியும் இல்லை. அல்லது, இந்த கோமாளித்தனமான செயல்பாடுகளைப் பார்த்து,  இந்தியாவின் ஆளும் வர்க்கம் இவர்களுக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவிக்கப் போகிறதா என்ற எண்ணம்தான் என் மனதில் எழுகிறது . கோமாளி ஆட்சி செய்யும் நாட்டில் இதுவும் நடக்கலாம் அதில் ஆச்சிரியப்படுவதிற்கில்லை.

மற்ற நாடுகள்  இந்த செய்திகளை  அறியும் போது  இவர்களின் இந்தச் செயல் உலகிற்கே இந்தியாவின் மருத்துவத் துறை குறித்த தவறான பிம்பத்தை உண்டாக்கும்.   என்னைக் கேட்டால் , மற்ற நாடுகள் இவர்களை மருத்துவர்கள் என்று அங்கீகரித்துத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிப்பதை விடுத்து, அறிவியலின் பெயரால் மூடநம்பிக்கையை வளர்க்கும் இத்தகைய நபர்களைத் தடை செய்ய வேண்டும்.

கடவுள் நோய்வாய்ப்பட்டாரா என்று கேட்பதை விட,  அறிவு இவ்வளவு நோயாக மாறியது எப்படி என்று கேட்டுக்கொள்ளுங்கள். அதுதான் இந்த காலத்தின் மிக முக்கியமான டயக்னோசிஸ்.

எனக்கும் கடவுள்  நம்பிக்கை உண்டு கடவுள் என்பவர் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவர் மேன்மையானவர் .அப்படிப்பட்ட கடவுளுக்கே இவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள் என்றால் இவர்கள் கடவுளுக்கும் மேல் அப்பாற்பட்டவர்களா அல்லது  கடவுளை இழிவுபடுத்துகிறார்களா?


சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்வோரிடம் ஒரு விசித்திரமான மௌனம் இருக்கிறது. திரையுலகப் பிரபலங்கள் அரசியல் களத்திற்கு வந்தால், கூத்தாடி வந்துவிட்டான் என்று ஏளனம் செய்ய நமக்குத் தயக்கமே இருப்பதில்லை. ஆனால், கோவிலுக்குள்ளேயே புகுந்து, புனிதத்தின் பெயரால் அறிவியலை கேலிக்கூத்தாக்கும் இந்த  வெள்ளைக் கோட் ஆசாமிகளை மட்டும் நாம் ஏன் கேள்வி கேட்பதில்லை அங்கே ஏன் நம் நாவுகள் மௌனமாக இருக்கின்றன?

கலைத்துறையினரை விமர்சிக்கும் அதே துணிச்சலோடு, சமூகத்தின் மீது மூடநம்பிக்கை எனும் விஷத்தை ஊற்றும் இத்தகையவர்களையும் நாம் எதிர்க்க வேண்டும். இவர்களிடம் நாம் காட்டும் இந்த மென்மைதான், நாளைய சமூகத்தை இன்னும் பல அபத்தங்களுக்குத் தயார்படுத்துகிறது. விமர்சனம் என்பது நமக்கு விருப்பமானவர்களை மட்டும் குறி வைப்பதாக இருக்கக்கூடாது; அது சமூகத்தைச் சிதைக்கும் எவரையும் சுட்டிக்காட்ட வேண்டும்



முருகப் பெருமானை புலம்பவிட்ட தவெக கட்சியினர் https://avargal-unmaigal.blogspot.com/2026/07/palanitemple-landfraud-murugan-tvk.html



அன்புடன்
மதுரைத்தமிழன்


#MaduraiThamizhan #SocialSatire #IndianMedicine #Superstition #ScienceVsFaith #MedicalEthics #AwakenIndia #EditorialPunch #அவரகள்உண்மைகள் #மதுரைத்தமிழன் #அறிவியல் #மூடநம்பிக்கை #மருத்துவத்துறை #சமூகவிமர்சனம்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.