Saturday, July 4, 2026

 பெண்கள் ஏன் அரசியல் பேசுறதில்லை?  ஒரு 'செல்ஃபி' ஆய்வு!
      

#Women #TamilSatire #TamilPolitics #MaduraithThamizhan #SocialMediaReality #TamilComedy #AvargalUnmaigal #TamilNaduPolitics,#Funny


அரசியல் ஒரு சாக்கடைன்னு நினைச்சு பெண்கள் ஒதுங்கி இருக்காங்களான்னு நான் யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா, உண்மையான காரணம் அது இல்ல பாஸ், அதைவிட அவங்களுக்கு இருக்குற வேலைப்பளு அப்படிப்பட்டது!

அவங்களைப் பொருத்தவரை செல்ஃபி தான் தேசிய பணி. காலையில கண்ணாடியை பாக்குறதுல ஆரம்பிக்குது இவங்க தினசரி கடமை. ஒரு பெர்பெக்ட் செல்ஃபி எடுக்கணும், அதுக்கு ஒரு பில்டர் போடணும், அந்த போட்டோவுக்கு வர்ற ஹார்ட்ஸையும் லைக்ஸையும் எண்ணிப் பாக்குறதுக்குள்ளயே பாதி நாள் ஓடிடுது. இதுல எப்போ அரசியல பத்தி யோசிக்கிறது?

அடுத்தப் பணி கதை கவிதை எழுதி லைக்ஸ் வாங்குறது அதுவும் அதிக அளவில் ஆண்களிடம் இருந்து ஹார்ட் வாங்குவது. அப்பறம் அந்த கதை கவிதைகளுக்காக வார இறுதியில் ஏதாவது ஒரு சங்கத்தில் விருது வாங்கிறது என்பதற்கே நேம் பத்தலையாம்

அதுமட்டுமில்லால்  அதைத் தாண்டி, பக்கத்து வீட்டுப் பொண்ணு போட்ட போட்டோவுல என்ன பில்டர்? அவங்க ஏன் இப்படிச் சிரிச்சு போஸ்ட் போட்டுருக்காங்க. அவளுக்கு ஹார்ட் பட்டன் அதிகம் இல்ல  இதையெல்லாம் விவாதிச்சு புறம் பேசுறதுதான் அவங்களுக்கான உண்மையான அரசியல் விவாதம்.

 இதையும் மீறி ஒருவேளை அரசியலைப் பத்திப் பேச ஆரம்பிச்சா, அவங்க இன்ஸ்டா ஃபீட்  கலையாதா? போட்டோவுக்கு வர்ற கமெண்ட்ஸ் குறையாதா? இந்த ஸ்டேட்டஸை காப்பாத்துறதே அவங்களுக்கு பெரிய அரசியல் வேலையா இருக்கு!

சுருக்கமா சொன்னா நாட்டை பத்தி கவலைப்படுறதை விட, அவங்க போஸ்ட்ல வர்ற ரீச்தான் முக்கியம்னு நினைக்கும்போது, அங்க வைகோவோ, ஸ்டாலினோ   என்ன செஞ்சால்தான்  என்ன ? பாவம், அவங்க உலகமே 'லைக்ஸ்' கணக்குல தான் இயங்குது!


அரசியல் சீரழிவு வைகோவின் சமீபத்திய பித்தலாட்டமும், கசப்பான உண்மைகளும்!  https://avargal-unmaigal.blogspot.com/2026/07/blog-post_04.html



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : பெண்களை வம்புக்கிற்கு இழுத்து ரொம்ப நாளுச்சு அதனாலதான் இந்த பதிவு

#TamilSatire #TamilPolitics #MaduraithThamizhan #SocialMediaReality #TamilComedy #AvargalUnmaigal #TamilNaduPolitics

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.