Friday, July 24, 2026

 ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய்யின் தாறுமாறு பதில்கள்
   

#Vijay #MKStalin #TVK #DMK #AvargalUnmaigal #Satire


CM விஜய்க்கு மு.க. ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளும் அதற்கு விஜய் அளித்த பதில்களும்

1. தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில், இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
 
   “சார், இப்போ என் முழு கவனமும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்லதான். படம் ஓடுறதா இல்லையா என்பதே எனக்கு பெரிய பிரச்சனை.

2. தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்
 
   அவர் மட்டும் இல்ல சார், தமிழ்நாடே இன்னும் தண்ணீருக்காக இல்ல, கண்ணீருக்காக போராடிட்டு இருக்கு. அதுதான் புது மாற்றம்னு சொல்லிக்கலாம்.

3. தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்? 
    
    கர்நாடகவை ஆள்வது எங்களது தோழமை கட்சி . அதனால் பயமில்லை .மேலும் ஜனநாயகம் படம் ரிலீஸ் ஆகும் போது   ஏதாவது பேசினால் படத்திற்கு பிரச்சனை ஏற்படுத்தும் . அது தமிழக சினி உலகை பாதிக்கும் என்பதை உங்கள் பிள்ளையிடம் கேட்டாலே சொல்லுவாரே.

4. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?  

   “கூட்டவில்லைன்னு யார் சொன்னது? ‘ஜனநாயகன்’ ஓடும் தியேட்டர்லவே எல்லாக் கட்சியும் கூட்டமா இருக்கு. அங்கேயே கூட்டம் முடிஞ்சிடுச்சு.”

5. மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது? 

   “பிரதமர் கையால விருது வாங்குறப்போ அங்கேயே கொடுத்துடலாம் சார். ஒரே நிகழ்ச்சிலே எல்லாம் செட்டிலாகிடும்.”

6. தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணம் எங்கே?  

   “ தவிக்கதானே செய்கிறார்கள் சாகவில்லையே.. செத்தால்  நிச்சயம் அவர்கள் குடும்பத்தை எனது பனையூர் அலுவலகத்திற்கே அழைத்து கொடுப்பேன் . அதில் எந்தவித மாற்றமும் இல்லை

ஸ்டாலின் சார், கேள்விகள் இவ்வளவுதானா அல்லது இன்னும் இருக்கா?  இந்த தளபதி உங்க கேள்விகளையெல்லாம் கேலியா எடுத்துக்கிட்டு, நகைச்சுவையா கடந்து போயிடுவான்.




அன்புடன்
மதுரைத்தமிழன்

#TamilNadu #MKStalin #ThalapathyVijay #Vijay #TTVijay #TNPolitics #DMK #TamilCinema #PoliticalSatire #TamilMeme #MaduraiThamizhan #TrendingTamil #VijayFans #TamilNews


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.