Monday, July 6, 2026

 அமெரிக்கா! கனவா, களவா?
     




#AmericanDream  #USImmigration  #USVisa  #RealityCheck  #USStudentVisa  #IndianYouth  #CareerAlert  #Awareness  #Warning  #StudentsAbroad



அமெரிக்கா என்ற ஒரு வார்த்தை போதும்  நம்ம ஊர் இளம் வயதுடையவர்களின் கண்களில் உடனே ஒரு மின்னல் தெரியும்.   அமெரிக்கா போயிடணும், அங்க  ஜாப் கிடைக்கணும், விசா  வந்துடணும்  இதுதான்  இன்றைக்கு பலருக்கான பெரிய கனவு.  ஆனா அந்த கனவுக்குப் பின்னால் இப்போது ஓடுவது திறமை மட்டும் அல்ல.   பணம், போலி ஆவணம், குறுக்கு வழி, ஏமாற்று வலை  இதெல்லாம் கலந்த ஒரு கரும்புகையும் கூட.

சமீபத்தில் அமெரிக்க Fox News சேனலில் வந்த  செய்தி
   

 (வீடியோவை இங்கே  இணைத்துள்ளேன்,) இந்த விஷயத்தை வெறும் செய்தியாக விட்டுவிட முடியாதது.  ஏனெனில் இது ஒரு சிலரின் தவறு மட்டும் இல்லை.   ஒட்டு மொத்த சமூகத்தையே கேள்விக்குள் நிறுத்தக்கூடிய ஒரு பிரச்சினை.

2015-க்கு பிறகு வழங்கப்பட்ட H-1B விசாக்களில் பெரும் பகுதி இந்தியர்களுக்கே கிடைத்ததாக அந்த வீடியோ சொல்கிறது.   அது ஒருபக்கம் பெருமை.  
மற்றொரு பக்கம், “இவ்வளவு demand ஏன்?” என்ற கேள்வியும் கூட.

அதற்குப் பின்னால் இருக்கும் பதில் எல்லோருக்கும் பிடிக்காத ஒன்று.   சிலர் உண்மையிலேயே திறமையுடன் போகிறார்கள்.  ஆனால்  வேறு சிலரோ?  
போலி பட்டம், போலி தகுதி, போலி நம்பிக்கை  இதெல்லாம் வைத்துக்கொண்டு system-ஐ வட்டமடிக்கிறார்கள்.

ஒரு முன்னாள் அதிகாரி சொன்னதாக, இந்தியாவிலிருந்து சென்ற விண்ணப்பங்களில் பெரும் பங்கு fraudulent documents கொண்டதாக அந்த வீடியோ குற்றஞ்சாட்டுகிறது. அதோடு, fake degree உற்பத்தி செய்யும் பல்கலைக்கழகங்களும், அதற்குப் பின்னால் நடக்கும் வியாபாரமும் வெளிச்சத்துக்கு வந்ததாகச் சொல்கிறது.   ஒரு பட்டம் **$1,400**-க்கு கிடைத்ததாகக் கூறப்படுவது, கல்வியின் மதிப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது.  இந்தியர்களை பொறுத்த வரை படிக்காத  ஒருவரே  போலிப் பட்டம்  பெற்று நாட்டை ஆளும் போது நாம் மட்டும் போலி பட்டம் பெற்று அமெரிக்கா செல்வது தப்பா என்று நினைக்கிறார்கள் போல. தலைவன் எவ்வழி குடிமக்கள் அவ்வழிதானே அதில் என்ன மாற்றம் இருந்திடப் போகிறது

இதுதான் வேதனை.   ஒரு சிலர் அமெரிக்க விசா  என்பதைக் கனவாகப் பார்க்கிறார்கள்.  மற்ற சிலர் அதை குறுக்கு வழியாகப் பார்க்கிறார்கள்.  
இரண்டுக்கும் வித்தியாசம் பெரியது.   கனவு உன்னை உயர்த்தும்.   Shortcut உன்னை சிக்க வைக்கும்.

அமெரிக்கா போன பிறகும் கதை முடிவதில்லை.  வீடியோவில் சொல்வதுபோல, பலர் high-skilled jobs-க்காக போனாலும், உண்மையில் entry-level அல்லது junior level வேலைகளில்தான் மாட்டிக் கொள்கிறார்கள்.   அதாவது, paper-ல் ஒரு மாதிரி.   நிஜத்தில் இன்னொரு மாதிரி.

இங்குதான் பிரச்சினை.   போலி சான்றிதழ் கொண்டு உயர்ந்த இடத்துக்குப் போனால், அங்கே தக்க வைத்துக்கொள்ள முடியாது.  அமெரிக்க system, எவ்வளவு liberal-ஆ இருந்தாலும், எல்லாரையும் forever fool பண்ண விடாது.   ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் கேட்க ஆரம்பிக்கிறார்கள்:  
“Who are you? What is your real qualification? Why were you selected?”

அதற்கான பதில் சரியில்லை என்றால், கதவு சத்தமில்லாமல் மூடப்படும்.

இதற்கிடையில் Texas-ல் நடந்த நடவடிக்கையும் இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமாக்கியுள்ளது.   விசா fraud தொடர்பாக பல நிறுவனங்கள் விசாரணைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.  சீன nationals-owned நிறுவனம் ஒன்று fake childcare business நடத்தி visa misuse செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அதே நேரத்தில் North Texas-ல் பல businesses மீதும் சந்தேகம் கிளம்பியுள்ளது.

இதெல்லாம் ஏன் முக்கியம்?   ஏனெனில் ஒரு நாட்டின் visa system-ஐ misuse பண்ணுவது, வெறும் சட்டப்பிரச்சினை இல்லை. அது அந்த நாட்டின் நம்பிக்கையையே உடைக்கிறது.   அதே நேரத்தில், நேர்மையாக போக நினைக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.

இந்தியர்களுக்கு இது இன்னும் பெரிய பாடம்.   ஏனெனில் அமெரிக்கா என்ற பெயரிலேயே நம்ம ஊரில் ஒரு மோகம் இருக்கிறது.  “அங்க போனா வாழ்க்கை செட்டாகிடும்”ன்னு ஒரு பொதுவான நம்பிக்கை.  ஆனா அந்த நம்பிக்கையையே சில மோசடிக்காரர்கள் தங்களுக்கான business model-ஆ மாற்றிக்கொள்கிறார்கள்.

போலி degree விற்பவர்கள் criminal மட்டுமல்ல. அவர்கள் ஒரு தலைமுறையின் நம்பிக்கையையே விலை போட்டு விடுகிறார்கள்.  ஒரு இளைஞன் உண்மையா படிச்சு, உழைச்சு, தேர்ச்சி பெற்று போகும் பாதையும்,  பணம் கொடுத்து shortcut தேடும் ஒருத்தனின் பாதையும் ஒரே மாதிரி இருக்க முடியாது.

அதனால்தான் இந்த H-1B story-யை வெறும் visa news-ஆ மட்டும் பார்க்கக் கூடாது.   இது நம்ம சமூகத்தின் கல்வி நம்பகத்தன்மை, தொழில்முறை ஒழுக்கம், மற்றும் உலக அரங்கில் இந்தியன் என்ற அடையாளம் பற்றிய கதை.

ஒரே வரியில் சொன்னால் அமெரிக்கா போவது தவறு இல்லை. ஆனால் ஏமாற்றி போவது, ஒருநாள் நம்மையே ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும்.

 இந்தியர்களே உண்மையான திறமையோடு மேலை நாட்டிற்கு  போகப் போகிறார்களா?   அல்லது போலிசர்டிபிகேட்டுகளோடு சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறார்களா? நன்றாக யோசியுங்கள் தலைவர்கள் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் அப்பாவி பொது ஜனங்களாகிட நீங்கள்தான் மாட்டிக் கொள்வீர்கள்.
  
இவை எல்லாவற்றிக்குமான பதில்  உங்கலின் கையில் தான் இருக்கு.

 


வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி: டிகிரி வாங்க ஒரு 'ஃபார்வர்ட்' போதும்!"
https://avargal-unmaigal.blogspot.com/2026/07/socialsatirewhatsappuniversity.html


அன்புடன்
 மதுரைத்தமிழன்

#AmericanDream  #USImmigration  #USVisa  #RealityCheck  #USStudentVisa  #IndianYouth  #CareerAlert  #Awareness  #Warning, #StudentsAbroad #அமெரிக்காகனவு   #விசாமோசடி #அமெரிக்கா #மாணவர்கள்  #வேலைவாய்ப்புஎச்சரிக்கை #உண்மை #சமூகவிழிப்புணர்வு  





Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.