ஸ்டாலினுக்கு ஒரு ஓப்பன் லெட்டர்: திமுக ஏன் தோற்றது? - அமெரிக்காவிலிருந்து மதுரைத்தமிழன் எழுதும் கடிதம் (இது சிரிக்க அல்ல, சிந்திக்க!)
முக ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம். நீங்கள் சின்ன வயதிலிருந்தே அரசியலில் இருக்கிறீர்கள். எத்தனையோ வெற்றி, தோல்வி எல்லாம் பார்த்தாச்சு. இன்று உங்களை விட அனுபவம் உள்ளவங்க யாரும் இல்லை என்பது உண்மைதான். (அப்படி ஒரு சிலர் இருந்தாலும் அவர்கள் வீணாப் போன வைகோ மற்றும் ராமதாஸ் போன்றவர்கள்தான்)ஒன்று புரிஞ்சுக்கோங்க காலம் மாறிடுச்சு. நாம மாறலைனா, காலம் நம்மை விட்டுட்டு போயிடும். எதையும் சுத்தி வளைக்காம நேரடியாக எளிமையாக சொல்றேன்.
நாம் ஏன் தோற்றோம் என்ற கசப்பான உண்மையை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிரி நம்மை விடப் புத்திசாலி என்பதால் அவர்கள் ஜெயிக்கவில்லை . நாம அதிகாரத்துல இருந்தோம், அவங்க மக்கள் மனசுல இருந்தாங்க.
வெகுநாள் ஆட்சியில் இருந்ததால, நமக்கு அந்த ஜெயிக்கணும்ங்குற பசி குறைஞ்சிடுச்சு. மற்ற கட்சிகள் ஒவ்வொரு ஓட்டையும் பிச்சை எடுக்கிற மாதிரி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டு உழைச்சாங்க. நாமளோ, நல்லது செஞ்சோம் ஓட்டு தானா வரும்ன்னு நினைச்சோம். இதுதான் நம் பெரிய தப்பு.
மக்களுக்கு நம்மிடம் குறை சொல்ல பயம் . சொன்னால் தாங்கள் தாக்கப்படுவோமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது, அல்லது நம் ஆட்களிடம் பேசவே தயங்குகிறார்கள்.. நமக்கு இந்த உண்மையைக் காட்டுற ஒரு கண்ணாடி இல்லை.
எதிரி டிஜிட்டல் ஆயுதத்தை பயன்படுத்தும்போது, நாம இன்னும் பழைய ஊர்வலம், மேடைப் பேச்சையே நம்பிட்டிருந்தோம். நடந்தது நடந்துடுச்சு, அதப் பத்தி இனிமே பேசி பயனில்லை. சிந்திய பாலுக்கு அழுகாதே என்று தமிழில் ஒரு சொலவாடை ஒன்று உண்டு. சிந்திய பாலை திருப்பி எடுக்க முடியாது . அதனால நாம் புதிய பாலைத்தான் தேட வேண்டும். அதுதான் நமது தற்போதைய நிலையும்.
.
இனி களத்தில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்களை மிகத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். முதல்ல, யாருக்கு மக்களோட உறவே இல்லையோ, அவங்களை பயமில்லாம மாத்துங்க. அந்த இடத்துல, மக்களுக்காக உண்மையா உழைக்கிற இளைஞர்களை வையுங்க.
கட்சி பொறுப்பாளர்கள் ஊரூரா போறாங்க, ஆனா எத்தனை வீட்டுக்கு நேரா போய் உட்கார்ந்து பேசுறாங்கன்னு பாருங்க. உறவு வளர்க்காத தொண்டன் தேர்தல் நாளில் உதவமாட்டான். எதிரியப் பார்த்து பயப்படத் தேவையில்லை, ஆனா கவனிக்கணும். அவங்க மாற்றம்ன்னு சொல்றாங்கன்னா, நாம அதை விட பெரிய மகிழ்ச்சியான எதிர்காலத்த வாக்குறுதி கொடுக்கணும்.
அடுத்த தேர்தலில் ஜெயிக்கணும்னா புதுசா யோசிக்கணும். மாநில பிரச்சனைன்னு பெரிசா பேசறதைவிட, ஒரு தொகுதில உள்ள குப்பை, சாலை, தண்ணீர் பள்ளி மருத்து மனை பிரச்சனையச் சரி பண்ணுங்க. இதுதான் "நிஜ அரசியல்". மக்கள் இதைத்தான் பார்க்குறாங்க. நாங்க ஆட்சி செஞ்சவங்கன்னு பெருமையா பேசுறத விட்டுட்டு, உங்க வீட்டு பிள்ளைன்னு உரிமையா பேசுங்க. இந்த சின்ன மாற்றம்தான் பெரிய ஓட்டு வித்தியாசத்தக் கொண்டு வரும். உங்கள சுத்தி புகழ்ந்து பேசுற ஆளுங்களை விட்டுட்டு, உண்மையச் சொல்ற, உங்க காலைப் பிடிக்காம வாழக்கூடிய சில நேர்மையான இளைஞர்களை மட்டும் உங்க பக்கத்துல வையுங்க.
உங்களுக்கு அரசியல் ரத்தத்துல ஊறியிருக்கு. இந்த தோல்வி ஒரு விபத்து, முடிவு இல்ல. நீங்க மாத்தணும்னா அது உங்க கொள்கைகள இல்ல, உங்க வேகத்தத்தான். இப்பவே, ஒரு பெரிய அறுவை சிகிச்சை மாதிரி கட்சியை சரி பண்ண ஆரம்பிங்க. இடிஞ்சு உட்காரணும்ங்குற அவசியமே இல்லை, ஆனா உங்க பழைய ஆவேசத்த திரும்பக் கொண்டு வாங்க. மாற்றம் உங்க கைல தொடங்கட்டும்.
தமிழக முதல்வர் "தெறி"க்கவிட்ட நேர்மை எனும் புதிய ஆயுதம்! https://avargal-unmaigal.blogspot.com/2026/07/corruptionfreetn-governmentoffice.html
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#MKStalin, #DMK, #TNPolitics, #TamilPolitics, #TamilNadu, #DravidianPolitics, #PoliticsOfTamilNadu #PoliticalSatire #OpenLetter #TamilBlogger #SocialCommentary #TamilDiaspora #EditorialCartoon #PoliticalOpinion


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.