கரப்பான் பூச்சி இயக்கம் நடத்திய மாணவர் போராட்டம் வெற்றி பெற்றது, அமைச்சர் ராஜினாமா செய்தார், வழக்குகளும் தள்ளுபடி ஆனது என்று கேட்கும்போது மனசுக்குள் ஒரு நிம்மதி, ஒரு சந்தோஷம் வருவது நம்மை மாதிரியான எளிய மக்களுக்கு இயல்புதான். பார்த்தீர்களா, மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று சொல்லத் தோன்றும். அந்த நம்பிக்கையே மிகப்பெரிய பலம்.
ஆனால், அந்தச் சந்தோஷத்தைத் தாண்டி, எதார்த்தத்தைப் பார்த்தால் மனது அதிரத்தான் செய்யும். சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அதிகாரமும் பணபலமும் தன் வசமிருப்பவர்கள் தங்களது கட்டுப்பாட்டை அவ்வளவு எளிதாக யாருக்காகவும் விட்டுக் கொடுத்த சரித்திரமே கிடையாது.
இன்று வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதனால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நம்பிவிடக் கூடாது. இது அரசின் கருணையோ அல்லது மனமாற்றமோ கிடையாது; மாறாக, உலகின் முன்பு தங்கள் மீதான அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளும் ஒரு அரசியல் தந்திரம். போராட்டத்தில் முன்னின்ற மாணவர்களின் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டாலும் அவர்களது பெயர்கள், விவரங்கள், பின்னணி, பலவீனங்கள் என எல்லாமே அதிகாரத்தின் ரகசியக் கோப்புகளில் பத்திரம் செய்யப்பட்டிருக்கும்.
இதற்குப் பிறகு என்ன நடக்கும் தெரியுமா அரசு மெதுவாக ஒரு மெளன யுத்தத்தை தொடங்கும். உங்களை வெளிப்படையாக ஒடுக்குவதற்குப் பதிலாக, மிக அமைதியாகவும் தனிப்பட்ட முறையிலும் உங்கள் வாழ்க்கையைச் சிதைக்க முயல்வார்கள் அவர்கள் ஒன்றும் மகாத்தாமாக்கள் அல்ல அமைதியாக செல்ல
அரசால் நீங்கள் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணிக்கப்படுவீர்கள். நீங்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது நீங்கள் செல்லும் இடத்திலோ திடீரென்று ஏதேனும் அசம்பாவிதமோ, திருட்டோ நடந்து, சம்பந்தமே இல்லாமல் உங்களை அதில் பலிகடா ஆக்கி புதிய வழக்குகள் பாயலாம். அதன் பின் நீதிமன்றப் படிகளேறி இறங்குவதிலேயே உங்கள் இளமையும் லட்சியமும் கரைந்துபோகும். பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் முடங்கிப் போய்விடுவீர்கள்.
போராட்டக் களத்தை உற்றுப் பார்த்தால் ஒன்று விளங்கும்; மாணவர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டவர்களில் காவல்துறையினரை விட, அரசு ஆதரவாளர்கள் போலி போலிஸ் போல ஊடுருவி நடத்திய சதிவேலைகள்தான் அதிகம். அவர்கள்தாம் பிற்காலத்தில் உங்களுடைய எதிர்காலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கப் போகிறார்கள்.
நீட் தேர்வு தொடரத்தான் செய்யும் , அதில் நடக்கும் முறைகேடுகளும் ரகசியமாகத் தொடரத்தான் செய்யும். ஒரு அமைச்சர் ராஜினாமா செய்ததாலோ, சில வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டதாலோ அமைப்பு மாறிவிடவில்லை; அது அப்படியேதான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த உண்மையை மாணவர்கள், ஜென்ஸீ தலைமுறையினர் மட்டும் புரிந்துகொண்டால் போதாது, பெற்றோர்களும், பொதுமக்களும் புரிந்துகொள்ள வேண்டும். இன்று வழக்குகளை வாபஸ் வாங்குவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல. நாளை மீண்டும் நீங்கள் தலைதூக்க முடியாதபடி உங்களை ஒடுக்குவதற்கான முன்னெடுப்பு இது.
நாட்டு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விழித்தெழுந்து வீதியில் இறங்கும் போது மட்டுமே உண்மையான மாற்றம் சாத்தியம். அதுவரையில் நடப்பவை அனைத்தும் தற்காலிக நாடகங்களே.
வெற்றியைத் தற்காலிகமாகக் கொண்டாடலாம். ஆனால் விழிப்புணர்வை ஒருபோதும் கைவிட்டுவிடக் கூடாது!

ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய்யின் தாறுமாறு பதில்கள் https://avargal-unmaigal.blogspot.com/2026/07/tamilnadu-mkstalin-thalapathyvijay.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
#CockroachMovement, #SilentWa,r #StudentUprising, #PowerPolitics ,#Awakening,#கரப்பான்பூச்சிஇயக்கம், #மௌனயுத்தம், #மாணவர்எழுச்சி ,#அதிகாரஅரசியல், #விழிப்புணர்வு,

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.