தமிழக முதல்வர் "தெறி"க்கவிட்ட நேர்மை எனும் புதிய ஆயுதம்!
செய்தி : தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் சமீபத்திய முழக்கம்: "யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க... நான் இருக்கிறேன்!"
ஒரு அரசு அலுவலகம். சுவரில் "ஊழல் இல்லாத நிர்வாகம்" என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.
இந்த பேச்சை கேட்டு, ஒரு சாதாரண தற்குறி மிகுந்த நம்பிக்கையுடன் அரசு அலுவலகத்திற்கு நுழைகிறான்.
தற்குறி: (மனதிற்குள்): "தலைவர் சொல்லிட்டாரு... இனிமே எவனும் லஞ்சம் கேட்க முடியாது. துணிச்சலா போவோம்!"
(அதிகாரியின் டேபிளுக்கு முன்னால் செல்கிறான்)
தற்குறி: சார், வணக்கம். என் நிலம் தொடர்பான பட்டா மாற்றம் செய்யணும். எல்லா டாக்குமெண்டும் ரெடியா இருக்கு. சார்,
அதிகாரி: "பாத்து கவனியுங்க... வேலையை சட்டுபூட்டுன்னு முடிச்சிடலாம்."
தற்குறி: (குழப்பத்துடன்) "சார், முதல்வர் பேச்சை நீங்க கேட்கலிய்யா."
அதிகாரி: "சாரி பழக்க தோஷத்தில் கேட்டுட்டேன் மன்னிச்சுகோங்க"
தற்குறி: "ஏன் தலைவண்டா அவன் பேசுனாலே சட்டம் போட்ட மாதிரி?"
அதிகாரி: (மனதிற்குள் டேய் சட்டம் அவர் போடலாம்டா ஆனால் வேலையை நாங்கதான் செய்யனும்): "சரி உங்க டாகுமென்டை எல்லாம் கொடுங்க சரி பார்த்து உடனே வேலையை இரண்டு நிமிஷத்துல முடிச்சிடலாம்."
(அதன் பிறகு டாக்குமெண்டை வாங்கி சரி பார்த்த பின் அதிகாரி)**
அதிகாரி: "இங்க பாருங்க . இங்க கையெழுத்து போடும்போது ஒரு சின்ன கோடு இழுத்துருக்கு, அடுத்த பேப்பர்ல அது நேரா இருக்கு."
தற்குறி: "சார், அது பெரிய விஷயமே இல்லையே?"
அதிகாரி: "முதல்வர் ரொம்ப ஸ்டிரிக்ட்டா உத்தரவு போட்டு இருக்கிறார்! 'டாக்குமெண்ட் எல்லாம் பக்காவா இருக்கணும், ஒரு சிறு பிழை கூட இருக்கக்கூடாது'னு"
தற்குறி: "சார் பார்த்து பண்ணுங்க"
அதிகாரி: "தம்பி ரூல்ஸ் முக்கியம். முதல்வர் உத்தரவு படி ஒரு புள்ளி மாறினாலும் நான் ரிஜெக்ட்தான். நீங்க புதுசா ஃபார்ம் வாங்கி, கரெக்டா ஃபில் பண்ணிட்டு இரண்டு வாரம் கழிச்சு வாங்க. இன்னைக்கு உங்களுக்கான் நேரம் முடிஞ்சிருச்சு."
தற்குறி: "டேய் விஜய் அண்ணா உன் பேச்சை கேட்டு என் நேரம் வேஸ்டானதுதான் மிச்சம்"
தற்குறி: வெளியே செல்கிறான். அதிகாரி ஒரு கோப்பைப் பருகிக்கொண்டு, பக்கத்து சீட் அதிகாரியிடம் பேசுகிறார்
அதிகாரி: "என்ன தம்பி... ஆளு கிளம்பிட்டாரா? லஞ்சம் இல்லைன்னா, வேலை நடக்காது. இதுதான் 'ஸ்ட்ரிக்ட்' ரூல்ஸ் & எழுதாத சட்டம் . இது புரியமா
தற்குறி நம்மளை யாருன்னு நினைச்சாங்க ... நாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்க... நம்மகிட்டயா வாலை ஆட்டுறாங்க!"
டிஸ்கி : தலைவர்கள் என்ன சட்டம் போட்டாலும் புரையோடிப்போன அரசு அதிகாரிகளின் பழக்க வழக்கங்களை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. சட்டம் போடுவது மட்டுமல்ல, தவறு செய்யும் அதிகாரிகளை உடனே சஸ்பெண்ட் செய்து , ஒரு வாரத்தில் விசாரித்து தப்பு செய்தால் ,அவரை வேலையில் இருந்து நிரந்தரமாக தூக்குவதோடு அவர்களுக்கு அரசு கொடுத்த சலுகைகள் முழுவதையும் நிரந்தமாக நிறுத்திவிட வேண்டும் .அந்த பதவிக்கு ஏற்கனவே அரசு தேர்வுகள் முலம் செலக்ட் செய்து வெயிட்டிங்க் லிஸ்டில் இருக்கும் இளம் வயதினருக்கு, உடனடி வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும். மேலும் தவறுகள் செய்த அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனையும் தர வேண்டும். இப்படி செய்ய ஒரு அரசு முழுமையாக முன் வந்தால்தான். தவறுகள் குறையும்.. அதைவிட்டு விட்டு மேடையில் வாய்ச்சவாடால் விட்டால் ஒரு ______யும் புடுங்க முடியாது.
ரீல்ஸ் அரசியல் vs ரியல் அரசியல்: திமுக தோல்வியிலிருந்து மீளும் வழி என்ன?https://avargal-unmaigal.blogspot.com/2026/07/vs.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
#CorruptionFreeTN #ஊழலற்றதமிழகம் #GovernmentOffice #AdminHumour #PublicService #நேர்மை #Administration #SystemFail #அரசுஅலுவலகம் #ThalapathyVijay #TVK TamilagaVettriKazhagam #தமிழகவெற்றிகழகம் #Vijay #தளபதிவிஜய் #Thalapathy #TNPolitics #TamilNaduPolitics #தமிழகஅரசியல்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.