முதல்வர் விஜயை நோக்கி இதெல்லாம் தேவைதானா என்று எம்.பி. சுப்பராயன் கேட்ட கேள்விகளுக்கு விஜய் சார்பாக மதுரைத்தமிழன் சொன்ன நையாண்டி பதில்கள்
சுப்பராயன் கேள்வி 1:
முதல்வரின் அலுவலகம், தலைமைச் செயலகம் 10வது மாடிக்கு மாறுகிறதாம். மேலும், துணை நகரமாக புதிய தலைமைச் செயலகம் உருவெடுக்கிறதா?
மதுரைத்தமிழன் நையாண்டிப் பதில்:
10 வது மாடியில் இருந்து பார்த்தால் தமிழகத்தில் இருக்கும் குறைகளும் குற்றங்களும் எளிதாக தெரியும் என்று எவனாவது தற்குறி சொல்லி இருப்பான் அல்லது தளபதியின் தலைமை ஜோசியர் உச்சத்துக்கு போகணும்னா 10வது மாடிக்கு ஆபீஸை மாத்தணும்னு சொல்லி இருப்பான்.
சுப்பராயன் கேள்வி 2:
இதற்கெல்லாம் திட்ட மதிப்பீடு எவ்வளவு? பற்றாக்குறை நிதி நிலையில் இவை எல்லாம் தேவைதானா?
மதுரைத்தமிழன் நையாண்டிப் பதில்:
நாங்கள் நிதிப் பற்றாக்குறை என்று பேசியது எங்களின் சொந்த நிதிப்பற்றாக்குறையை பற்றிதானே தவிர அரசின் பற்றாக்குறையை பற்றி அல்ல.
சுப்பராயன் கேள்வி 3:
நிதி வருவாயை அதிகரிக்க திட்டமிட வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், இந்தச் செலவு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத அவசியமா? அல்லது தண்டச் செலவுதானா?
மதுரைத்தமிழன் நையாண்டிப் பதில்:
தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சிக்காரன் செய்த செலவுகளை சமாளிக்க இந்த நடவடிக்கைகள் மிக அவசியம்.
சுப்பராயன் கேள்வி 4:
செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்கத் திட்டமிட வேண்டிய மாநில அரசு, அவசியமற்ற செலவுகளை அதிகரிப்பதிலா குதிரை வேகம் காட்டுவது?
மதுரைத்தமிழன் நையாண்டிப் பதில்:
குதிரை பேரம் செய்யும் நாங்கள் குதிரை வேகத்தில்தான் செல்ல முடியும்.
சுப்பராயன் கேள்வி 5:
இடிப்பாரை இல்லாத மன்னனாகப் பயணிப்பது ஆபத்து! கடிவாளம் இல்லாத குதிரைப் பயணம் பாதுகாப்பற்றது!
மதுரைத்தமிழன் நையாண்டிப் பதில்:
நான் கொடுத்த சோபாவில் உட்கார்ந்து கொண்டே கடைசியில் கூட்டணியே கடிக்க ஆரம்பிச்சதுதான் ஹைலைட்டே எம்.பி. சுப்பராயன்
அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.