Saturday, September 19, 2026

 தியேட்டர் வாசல் டூ மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருவறை வாசல் வரை ( கறுப்புச் சந்தைக் காவியம் )
       

#MaduraiMeenakshi #Kumbabishekam #TamilSatire #TamilNaduPolitics #MaduraiThamizhan


தியேட்டர் வாசல் ஓரமா இருட்டுல நின்னு, டிக்கெட் வேணுமா டிக்கெட்ன்னு ரகசியமா விற்றுப் பழகிய கைகள், இன்று மதுரை கும்பாபிஷேகப் பாஸ் விஷயத்திலும் கறுப்புச் சந்தை வாசனை அடிக்க வைப்பது காலத்தின் விசித்திர நாடகம் தான் (ஒரு பாஸ் ஒரு லட்சம் வரை போனதாம் என்ற பேச்சு வேறு!)

சினிமா டிக்கெட்டை ப்ளாக்கில் விற்றவங்க எல்லாம் ஆட்சியில் இருந்தா, மதுரை கும்பாபிஷேக பாஸை ப்ளாக்கில் விற்காமல் வேற என்ன செய்வார்களாம்?

அவனவனுக்குத் தெரிஞ்சதை அவன் பண்ணுறான்!

புதுசா ஆட்சிக்கு வந்திருக்காங்க. உடனே விஞ்ஞானபூர்வ ஊழல் பண்ணத் தெரியுமா அதுக்கெல்லாம் கொஞ்சம் காலம் வேணும்!

அதுவரைக்கும் தெரிஞ்ச தொழிலைத் தானே செய்வார்கள்.

சரி.... கும்பாபிஷேக பாஸை ப்ளாக்கில் வாங்கியவன் மட்டும் என்ன நேர்மையாகச் சம்பாதிச்ச பணத்தில்தான் வாங்கியிருப்பானா?

அவனுக்கு அம்மன் தரிசனம் முக்கியமில்லை. நான் முன்னாடி நின்னேன்ன்னு சோசியல் மீடியாவில் போய் பெருமை பேசுறதுதான் முக்கியம்!

மீனாட்சி அம்மன் எல்லாருக்கும் பொதுதான். அருகில் நின்னு தரிசிக்க மட்டும் பிரீமியம் பிளான்!



மாவு அரைக்க நேரமில்ல... ரீல்ஸ் போட நேரமிருக்கு!    ஒரு ‘இன்ஸ்டன்ட்’ பக்திப் பரிதாபம்!  https://avargal-unmaigal.blogspot.com/2026/09/tamil-satire-article-instagram-reels.html

 அன்புடன்,
மதுரைத்தமிழன்

#MaduraiMeenakshi #Kumbabishekam #TamilSatire #TamilNaduPolitics #MaduraiThamizhan #மதுரைமீனாட்சி #கும்பாபிஷேகம் #தமிழ்நையாண்டி 
  #சமூகநையாண்டி #மதுரைத்தமிழன் #AvargalUnmaigal  

#மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் #மதுரை கும்பாபிஷேக பாஸ் விவகாரம் #கும்பாபிஷேக பாஸ் விநியோகம் #தமிழ் அரசியல் நையாண்டி #தமிழ் சமூக நையாண்டி கட்டுரை # மதுரைத்தமிழன் #Madurai Meenakshi Temple Kumbabishekam # Madurai Kumbabishekam pass controversy #Tamil political satire #Tamil social commentary # 

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.