சனிப்பிரதோஷமும்... சர்க்கரை வியாதி சங்கமமும்!
இன்று என் மனைவியின் தோழிக்குக் கல்யாணம் ஆகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். அதைக் கொண்டாடுவதற்காக எங்களையும் கூப்பிட்டிருக்கிறார்கள்.
30 ஆண்டுகள் அவர்கள் கஷ்டப்பட்டால் அது அவர்களின் தலையெழுத்து! அதற்கு என்னை ஏன் போய் இழுக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அவர்கள் செய்த பாவத்திற்கு எனக்கு ஏன்ய்யா தண்டனை?
சரி, ஏதோ கூப்பிட்டுட்டாங்களேன்னு போனா... அங்க அதுக்கும் மேல ஒரு கூத்து! விருந்துன்னு சொல்லி, நாங்க ரொம்ப ஹெல்த்தியா சமைப்போம்னு சொல்லி டயபடிக் உணவுகளைத் தயாரித்து உயிரை எடுக்குறாங்க.
சரி போனாப் போகுது... ஏதாவது ஜாலியா பேசுவானுங்கன்னு பார்த்தா
உனக்கு எவ்வளவு சுகர் இருக்கு? நீ என்ன மாத்திரை சாப்பிடுற? நீ என்ன மாதிரியான உணவு கட்டுப்பாடு வச்சுக்கிற?
அப்படியே வாட்ஸப்பில் படித்த அரைகுறை ஹெல்த் டிப்ஸ்களை மாற்றி மாற்றி ஷேர் பண்ணி உயிரை வாங்குறாங்க. இதுல இவங்க எல்லோரும் மிக நன்றாக படித்த ஐடி வொர்க்கர்கள் ஆனால் பாருங்க இவங்கிட்ட இந்த வாட்ஸ்ப்படுகிற பாடு இருக்குதே.. ஹும்ம் என்னத்த சொல்ல
இது போதாதுன்னு அடுத்த கட்டமா, ரிட்டையர்மென்ட் ப்ளான் என்னனு சீரியஸா விவாதிக்கிறானுங்க. அடேய்... நீங்க இருக்கிறது இன்னும் ஐந்தோ அல்லது பத்து வருடங்கள்தான்டா! இருக்குற காலத்துல இருக்குறதை வச்சு சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்கடா! அதை விட்டுட்டு, 'ப்ளான்... ப்ளான்...'னு சாவுற வரைக்கும் ப்ளான் போட்டே செத்துப் போயிடாதீங்கடா!
கடைசியாக நம்மை கூப்பிட்டு கஷ்டப்படுத்தியதை ஞாபகத்திற்கு வைத்துக் கொள்ளனும் என்பதற்காக ஒரு குருப் போட்டோ எடுத்து அதை வேற வாட்ஸ்ப் குருப்பில் போட்டு சந்தோஷப்படுவாங்க என்ன குருர மனப்பான்மை பாருங்க
அடேய்... சனிக்கிழமை அதுவுமா என்னை ஏண்டா இப்படி கூப்பிட்டு டார்ச்சர் பண்ணுறீங்க?!
அன்புடன்
மதுரைத்தமிழன்
#சனிப்பிரதோஷம் #சர்க்கரைவியாதி #வாட்ஸ்அப்வைத்தியம் #ITLife #DiabeticFood #MarriageAnniversary #TamilSatire #வாழ்க்கைதத்துவம் #மதுரைத்தமிழன் #TamilBlog #FunnyTamilPost #TamilHumor #HealthTipsSarcasm #WeekendVibes #MiddleClassLife

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.