Friday, September 11, 2026

லண்டன் பயணம்: “முதலீடு” பெயரில்  வகுக்கும் திட்டங்கள்என்னென்ன ?

 

இது நையாண்டி மட்டுமே . கோபப்படுவோர் கமெண்ட் பாக்ஸில்  வந்து கோபப்படலாம்!

   

#மதுரைத்தமிழன் #அவர்கள்உண்மைகள் #TamilPoliticalSatire #LondonVisit #TNPolitics #PoliticalPR #Naiyaandi #InvestmentPR #ReelPolitics #TamilNaduPolitics #PoliticalSatire


தமிழ்நாட்டில் மின்சார பஸ் கட்டணம் ஏறட்டும் . வேலை இல்லாமல் இளைஞன் அலையட்டும் .சாலைக் குழிகளில் வண்டி உடையட்டும். பப்ளிக் கொலைகள் அரங்கேறட்டும்.. ஆனால் லண்டன் பயணம் மட்டும் தவறக்கூடாது!

இதோ, லண்டன் பயணம் மேற் கொள்ளும் கட்சித் தலைவர் அவர்களின் “ரகசியத் திட்டம்”

அஜித் கார் ரேஸ்ஸிற்குக் கொடி அசைக்க வேண்டும். அஜித்  பதிலுக்கு ஒரு முறை கை அசைத்தால் போதும், அதை ஸ்லோ மோஷனில் வீடியோ எடுத்து , பேக் க்ரெளண்டில் மாஸ் பின்னணி இசை அமைத்து , விளையாட்டுக்கு எல்லை இல்லை நட்புக்கு அரசியல் இல்லை  என்று ரீல்ஸ் வர வேண்டும்  .  இப்படி க்ரீன் கொடி அசைத்து அஜித் ரசிகர்களின்  வோட்டைக் கவர் செய்து இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும்.

முதலீட்டாளர்களைச் சந்திக்கப் போகிறோம் என்று அறிவிப்பவர்கள்  லண்டனில் இருக்கிற அந்த நல விரும்பி தோழி சந்திப்பு மட்டும் அஜண்டாவிலேயே வராது மிக கவனமாக பார்த்துக் கொள்வார்கள்!  அதிகாரப்பூர்வ சந்திப்பா அல்லது உணர்ச்சிபூர்வ சந்திப்பா ஆண்டவன் மட்டுமே அதை அறிவான். ஒருவேளை வீரபாண்டிய கட்டபொம்மனாகத் தமிழகத்தில் கர்ஜித்துத் துவண்டு போயிருக்கும் தலைவருக்கு, அந்த நலவிரும்பி தோழி கொடுக்கும் விருந்தின் காரணமாகப் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் களமாடத் தெம்பு கிடைக்கலாம்!

 முதலீட்டு  ரீல்ஸ் படப்பிடிப்பு  நடத்தி  நாலு பேரோடு கை குலுக்க வேண்டும். முன்னாடி பைல்கள் வைக்க வேண்டும். பின்னாடி தமிழக அரசின் சின்னம் இருக்க வேண்டும். அப்புறம் உலக முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நோக்கி  என்று  ரீல்ஸ்போட வேண்டும். முதலீடு எப்போ வரும்னு தெரியாது, புகைப்படம் மட்டும் உடனே வரும்! ஒருவேளை முதலீடு தமிழகம் நோக்கி வந்தால், ஆந்திர ரெட்டி நண்பர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம், முதலீடு என்ற பெயரில் வெள்ளைப் பணமாக மாறி வரலாம்!

லண்டன் பயணத்தில் முதலீட்டு அஜெண்டாவோடு, மனசுக்குள்ள இருக்கிற சில தனிப்பட்ட (சங்கீதா )அஜெண்டாக்களும் இருக்குமோ என்னவோ!

  லண்டனில்  இருக்கும்  சமயத்தில் தமிழ்நாட்டில் ஏதாவது பிரச்சினை வெடித்தால், லண்டன் நட்சத்திர ஓட்டல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு, இந்த விஷயத்தை அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது  என்று அறிக்கை விட வேண்டும்.  அறிக்கை எழுதப்படுவது தமிழகத்தில் உள்ள ஸ்க்ரிப்ட் ரைட்டர்ஸ் மூலம் ஆனால் அது வாசிக்கப்படுவதோ லண்டனில் .

  லண்டன் அருங்காட்சியகத்தில் பழைய சைக்கிள் கண்ணில்பட்டால் போதும். நானும் இப்படித்தான் சைக்கிளில் போனவன் என்று கண் கலங்க வேண்டும். அடுத்த நிமிடம் காணொளி  #எளிமையின்_அரசியல் , லண்டனிலும்_நம்மமண்வாசனைகள் ,லண்டன்  அருங்காட்சி சைக்கிளும் தமிழகத்து பாசத்தில் ஒரு நடிப்பும்

  தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் நின்று இதய வடிவத்தைக் கைவிரல்களில் காட்டி  ,என் உடம்பு லண்டனில் இருக்கலாம், என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது நண்பா நன்பிகளே  என்று சொல்லி  நேரலைக்கு வர வேண்டும். 

  லண்டனில் இருந்து திரும்பியதும் வரலாறு காணாத முதலீடு என்று அறிக்கை விட வேண்டும்.

அப்படி அறிக்கைவிட்டால் அறிவுள்ள மக்கள் மக்கள் கேட்க வேண்டியது  இதுமட்டுமே:

சார் முதலீடு எத்தனை? வேலைவாய்ப்பு எத்தனை? எப்போ? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்

லண்டனில் கொடி அசைப்பது எளிது. 

தமிழ்நாட்டில் மக்களின் வாழ்க்கைக்குப் பச்சை விளக்கு காட்டுவதுதான்  நல்லாட்சி.  அதை  இந்த லண்டன் பயணம் செய்து முடித்தால் பாராட்டத்தான் வேண்டும் . ஆனால் அப்படி எல்லாம் நடக்குமா என்பதுதான் தலையாய கேள்வி


நாற்காலி நாடகங்களும்... நடுத்தர வர்க்கத்தின் கண்ணீரும்!


 

ஸ்டாலின் ஜெயிலா, விஜய் லண்டனா?  பேருந்து கட்டணக் கொள்ளையும் நடுத்தர வர்க்கத்தின் கண்ணீரும் https://avargal-unmaigal.blogspot.com/2026/09/blog-post.html


—ன்புடன்
மதுரைத்தமிழன்

#மதுரைத்தமிழன் #அவர்கள்உண்மைகள் #TamilPoliticalSatire #LondonVisit #TNPolitics #PoliticalPR #Naiyaandi #InvestmentPR #ReelPolitics #TamilNaduPolitics #PoliticalSatire

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.