ஈரோட்டுப் பெரியாரை விட, காஞ்சிப் மஹா பெரியவரை அதிகம் கொண்டாடும் அமெரிக்க மாநிலம் எது என்று கேட்டால் என் அனுபவத்தில் பதில் "நியூஜெர்ஸிதான்".
தமிழ்நாட்டில் இந்த இரண்டு பெயர்களைச் சொன்னாலே, ஒரு பக்கம் அரசியல் மேடை தயாராகிவிடும். இன்னொரு பக்கம் விவாதத்தின் நெருப்பு பற்றிக்கொள்ளும். ஆனால் கடல் தாண்டி இங்கே வந்த பிறகு, அந்த விவாதங்களின் சத்தம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது
இந்த மெலிதான் சத்தங்களை தாண்டி எஞ்சுவது என்ன தெரியுமா?
நம் ஊரின் வாசம்.
நம் மொழியின் நினைவு.
நம் வழிபாட்டில் கிடைக்கும் ஒரு விசித்திரமான நிம்மதி.
நியூஜெர்சி ஒரு அமெரிக்க மாநிலம் மட்டுமல்ல புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, தங்கள் வேர்களைத் தொட்டுப் பார்க்கும் ஒரு சிறிய தாயகம்.
வார நாட்களில் வேலை, டிராபிஃக் , டெட்லைன், mortgage, பள்ளி, grocery என்று ஓடும் வாழ்க்கை வார இறுதியில் மட்டும் ஒரு வேறு முகம் காட்டுகிறது. குடும்பம் குடும்பமாகக் கோவிலுக்கு வருகிறார்கள். குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
பிரசாதம் வாங்கிக்கொண்டு, தெரிந்தவர்களிடம் இரண்டு நிமிடம் பேசிக்கொண்டு, அம்மா உணவகம் போல கோவில்களில் இயங்கும் உணவு கூடங்களில் மலிவான விலையில் உணவுகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு நம்ம ஊர் மாதிரி இருக்கு இல்ல என்று மனசுக்குள் சிரித்துக்கொள்கிறார்கள்.
கோவில்களின் நகரம் மதுரை என்றால்,
அமெரிக்காவில் வாழும் பல தமிழர்களுக்கு
நியூஜெர்ஸி ஒரு சிறிய மதுரைதான்.
ராபின்ஸ்வில்லின் பிரம்மாண்டமான அக்சர்தம் ஆகட்டும், ஃப்லெமிங்கடனில் இருக்கும் மகாபெரியவா மணிமண்டபம் ஆகட்டும், ப்ரிஜ்வாட்டரில் இருக்கும் பாலாஜி கோவிலாக ஆகட்டும்
அல்லது புறநகர்ப் பகுதிகளில் அமைதியாக இயங்கும் சிறு வழிபாட்டு மையங்கள் ஆகட்டும் ஒவ்வொன்றும் ஒரு விஷயத்தைச் சொல்கின்றன (*சமீபகாலங்களில் கோவிலுக்கு இணையாக பல மசூதிகள் கட்டப்பட்டு வருகின்றன)
கடல் தாண்டி வந்தாலும், மனிதன் தனது வேர்களைத் தாண்டிவிட முடியாது.
சொந்த ஊரில் நேரமில்லை என்று கோவிலுக்குச் செல்லாத சிலரும்,
வெளிநாட்டில் வார இறுதி வந்ததும் குடும்பத்துடன் வழிபாட்டுத் தலங்களைத் தேடிச் செல்கிறார்கள். அதை முரண்பாடு என்று மட்டும் சொல்ல முடியாது.
அது தனிமையின் மொழி. அது அடையாளத்தைத் தேடும் மனசின் வழி. அது குழந்தைகளுக்கு நாம் யார் என்பதை நினைவூட்ட வேண்டும் என்ற பெற்றோரின் ஆசை.
புலம்பெயர் வாழ்வின் களைப்புக்கு நடுவில், இங்குள்ள கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல. அவை சந்திப்புகள் நடக்கும் இடங்கள். தமிழ் கேட்கும் இடங்கள். பிள்ளைகள் பண்பாட்டைத் தொட்டுப் பார்க்கும் இடங்கள்.
அதனால் நியூஜெர்சி எனக்கு வெறும் மேப்பில் இருக்கும் ஒரு மாநிலமல்ல.
அது கடல் தாண்டியும் கைவிடப்படாத
தமிழ் அடையாளத்தின் ஒரு கலாச்சாரத் தீவு.
அன்புடன்,
மதுரைத்தமிழன்
டிஸ்கி: இந்தப் பதிவை எழுதத் தூண்டியது, முன்னாள் ஊடகவியலாளரும் தற்போது யூடியூப் வழியாக அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து வருபவருமான #செந்தில்வேல் அவர்களின் அமெரிக்கப் பயணம்.
#பெரியார், #திராவிடம் ஆகிய கருத்துகளை மையமாக வைத்து அவர் அமெரிக்காவின் பல மாநிலங்களில் பேசிவருகிறார். நியூஜெர்சியிலும் “திரைகடல் ஓடியும் திராவிடம் தேடு” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றதாக அவர்களின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்களைப் பார்த்தபோது, கூட்டத்தின் அளவை விட என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது
கடல் தாண்டி வந்த தமிழர்களின் அன்றாட வாழ்வில், அரசியல் அடையாளத்தை விட ஆன்மிகம், குடும்பம், மொழி, பண்பாடு ஆகியவை ஏன் அதிகமாகப் பேசப்படுகின்றன?
அந்தக் கேள்வியிலிருந்து பிறந்ததே இந்தப் பதிவு.
இது யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல; நியூஜெர்சியில் வாழும் ஒரு தமிழனாக நான் பார்த்த, உணர்ந்த புலம்பெயர் தமிழ் வாழ்வின் ஒரு சிறிய பதிவு மட்டுமே.
வாழ்க்கை வசந்தமாக இருக்க ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய "அந்த" 30 விநாடி வீடியோ! https://avargal-unmaigal.blogspot.com/2026/09/30.html
#NewJerseyTamil #TamilDiaspora #TamilCulture #TamilSpirituality #MaduraiTamilan #மதுரை நினைவு #NewJersey #immigrantlife #ஆன்மிகஅமைதி #Tamil identity

.jpg)
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.