Sunday, September 20, 2026

 சீன டிராகனுக்கு AI இறக்கை; காலில் கடன் சங்கிலி! இந்திய வேலைகளுக்கு????
    

#ChinaEconomy #ArtificialIntelligence #DeepSeek #SarvamAI #IndianITJobs #TechNewsTamil #GlobalEconomy #TamilEditorial #MaduraiThamizhan


செப்டம்பர் 24-ம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஷி ஜின்பிங் டிரம்ப் சந்திப்பு நடக்குது. கிட்டத்தட்ட பத்து வருஷம் கழிச்சு ஷி ஜின்பிங் வெள்ளை மாளிகைக்குப் போறார்.  ஏ.ஐ, சிப், வர்த்தகம், அரிய கனிமம், தைவான்னு உலக அரசியலோட சூடான விஷயம் எல்லாமே மேசையில இருக்கும். இந்தச் சந்திப்புல சீனா காட்ட விரும்புற படம் ரொம்ப எளிது நாங்க ஏ.ஐ-ல பின்னாடி இல்ல, அமெரிக்காவுக்குச் செம போட்டி தரோம் என்பதாகத்தான் இருக்கும்


இதை வெறும் கெத்துன்னு ஒதுக்க முடியாது. அமெரிக்க அரசோட CAISI அமைப்பே சொல்றது, டீப்சீக் V4 Pro மாடல் அமெரிக்காவோட முன்னணி மாடல்களைவிட சுமார் எட்டு மாசம்தான் பின்னாடி இருக்குன்னு. ஒரு காலத்துல அவங்க ரொம்ப பின்னாடின்னு பேசிட்டிருந்தோம். இப்போ கணக்கு வருஷத்துல இல்ல, மாசத்துல என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டார்கள்


ஆனா அந்த வெளிச்சத்தோட மறுபக்கத்தைப் பாருங்க. ஆகஸ்ட்ல சீனத் தொழிற்சாலைகளோட உற்பத்தி 5.2 சதவீதம் ஏறியிருக்கு. ஆனா மக்கள் கடையில வாங்குறது வெறும் 0.4 சதவீதம்தான் கூடியிருக்கு. தொழிற்சாலை ஓடுது, கடை ஓடல. இளைஞர்களுக்கான வேலையின்மை ஜூன்ல 14.9 சதவீதம். வீடுகள் விக்கல, ஆனா வாங்குனவங்களுக்கு கடன் தவணை மட்டும் நேரத்துக்கு வந்துடுது. இப்படி இருந்தா யாரு தைரியமா செலவு பண்ணுவாங்க ஏ.ஐ ரோபோவை கையில தூக்கி வச்சுக்கிட்டு பந்தா பண்றாங்க, ஆனா வீட்டுக் கணக்கு எப்படி சரி பண்றதுன்னு முழிக்கிறாங்க.


இது நமக்கு என்ன சம்பந்தம்னு கேக்கலாம். சீனாவோட வீட்டு விற்பனை சரிஞ்சதால நம்ம வேலை போகாது. நம்மைத் தொடுறது வேற ஒண்ணு, சீனா உலகம் முழுக்க மலிவா அள்ளித் தெளிக்கிற ஏ.ஐ கருவிகள். சின்னக் கடைக்காரருக்கும் ஆஸ்பத்திரிக்கும் மொழிபெயர்ப்பு, கணக்கு, கஸ்டமர் சர்வீஸ் எல்லாம் குறைஞ்ச செலவுல முடிஞ்சா அது பெரிய உதவிதான். ஆனா அதே கருவி, ஒரு அலுவலகத்துல பத்து பேர் செய்யிற வேலையை ஏழு பேரோட முடிச்சிடும்.

ஒரு உதாரணத்துக்கு, சென்னையில பி.டெக் முடிச்சிட்டு நிக்கிற ஒரு இளைஞனை எடுத்துக்கோங்க.

 ஒரு ஃபோன்ல டிசிஎஸ்ல ஒரே வருஷத்துல 23,460 பேர் குறைஞ்சாங்கன்னு செய்தி வருது. இன்னொரு ஃபோன்ல டிசிஎஸ், இன்ஃபோசிஸ், காக்னிசென்ட் மூணும் சேர்ந்து சுமார் 80,000 புது பட்டதாரிகளை எடுக்கப் போறோம்னு சொல்றாங்க.  ஏ.ஐ நல்லா தெரிஞ்சவங்களுக்கு இன்ஃபோசிஸ் வருஷத்துக்கு 21 லட்சம் ரூபாய் வரைக்கும் தருது. புதிதாக படித்து முடித்து வரும் இளைஞன்  குழம்புவான், வேலை போகுதா வருதான்னு. உண்மை என்னன்னா ரெண்டுமே நடக்குது. டேட்டா எண்ட்ரி, பேசிக் கோடிங் மாதிரி வழக்கமான வேலைகளுக்கு மவுசு குறையுது, சில உயர்திறன் AI வேலைகளுக்கு வருடம் பல லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.


ஷி ஜின்பிங் வெள்ளை மாளிகையில "சிப் தடை போட்டாலும் எங்களை நிறுத்த முடியாதுன்னு காட்டுவாரு. ஆனா அவரு நாட்டு இளைஞர்கள் மனசுல ஓடுறது வேற கேள்வி எனக்கு வேலை எங்க? சீன டிராகனுக்கு ஏ.ஐ இறக்கை இருக்கலாம், ஆனா காலைச் சுத்தி கடன் சங்கிலி கிடக்கு, அது ரொம்ப தூரம் பறக்க விடாது. நமக்கும் இதே கேள்விதான். ஏ.ஐ வளர்ந்துக்கிட்டே போகுது, ஆனா நம்ம பாக்கெட்டுல இருக்கிற காசும் வாழ்க்கையும் நிஜமாவே வளர்ந்துருக்கா?

தியேட்டர் வாசல் டூ மதுரைக் மினாட்சி அம்மன் கோவில் கருவறை வாசல் வரை கறுப்புச் சந்தைக் காவியம்!   https://avargal-unmaigal.blogspot.com/2026/09/maduraimeenakshi-kumbabishekam.html

மாவு அரைக்க நேரமில்ல... ரீல்ஸ் போட நேரமிருக்கு!    ஒரு ‘இன்ஸ்டன்ட்’ பக்திப் பரிதாபம்!   https://avargal-unmaigal.blogspot.com/2026/09/tamil-satire-article-instagram-reels.html

அன்புடன்
மதுரைத்தமிழன்


Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.