பெரியவனாக ஆசைப்பட்டதுதான் வாழ்க்கையில் செய்த பெரிய தப்பு!
சின்ன வயசுல, சீக்கிரம் பெரியவனாகணும் வேலைக்குப் போகணும் கைநிறையச் சம்பாதிக்கணும் அந்தப் பணத்தை நம்ம இஷ்டத்துக்குச் செலவு பண்ணணும்னு ஆசைப்பட்டேன்.
பெரியவனாகிச் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் புரிஞ்சது, சம்பளம் நம்ம பேருல வருதே தவிர, அதுல நமக்கு இருக்கிற உரிமையைவிட மத்தவங்களுக்குத்தான் அதிக உரிமை இருக்கு!
வீட்டு லோன் ஒரு பக்கம், கார் லோன் இன்னொரு பக்கம். ஹெல்த் இன்சூரன்ஸ், கார் இன்சூரன்ஸ், பிள்ளைகளோட படிப்பு, கரன்ட் பில், மளிகை, வரின்னு எல்லாத்துக்கும் பிரிச்சுக் கொடுத்த பிறகு, சம்பாதிச்ச நாமதான் எனக்கு ஏதாவது மிச்சமிருக்கான்னு கணக்கைப் பார்க்க வேண்டியிருக்கு!
மாசம் முழுக்க உழைக்கிறது நாம. சம்பளம் வந்ததும் அதை எடுத்துக்கிறது ஆளாளுக்கு. நமக்குக் கிடைக்கிறது மட்டும், உங்கள் கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்பட்டதுங்கிற மெசேஜ்தான்!
குடும்பத்துக்குச் செலவு பண்றதுல வருத்தமில்லை. ஆனா நமக்குன்னு ஏதாவது வாங்கலாம்னு நினைக்கும்போதுதான், இது இப்போ அவசியமான்னு நமக்குள்ளேயே ஒரு ஆடிட்டர் வந்து உட்கார்ந்துக்கிறான்.
சின்ன வயசிலே அப்பாகிட்ட கேட்டப்போ, அடுத்த மாசம் பார்க்கலாம்னு சொல்லுவார். இப்போ சம்பாதிக்கிற நானே என்கிட்டயும் அதையே சொல்லிக்கிட்டு இருக்கேன்!
சின்ன வயசுல பாக்கெட்டுல பத்து ரூபாய் இருந்தா, என்ன வாங்கலாம்னு ஆசையா யோசிச்சேன். இப்போ சம்பளம் வந்தா, முதல்ல எதைக் கட்டலாம்னு யோசிக்கிறேன்.
இதுக்குத்தான் இவ்வளவு அவசரமா பெரியவனாக ஆசைப்பட்டேனா?
அப்போ அப்பா பணம் தரலையேன்னு கோபம் வந்தது என்னவோ உண்மைதான் ஆனால் இப்போதான் புரியுது அவரும் சம்பாதிச்சுக்கிட்டுதான் இருந்தாரே தவிர, அவருக்குன்னு எதையும் மிச்சம் வச்சுக்க முடியல!
அன்புடன்,
மதுரைத்தமிழன்
டிஸ்கி : நண்பர் Pirabu Chinnathambi பேஸ்புக்கில் பகிர்ந்த இந்த கிழே உள்ள பதிவிற்கு நான் கொடுத்து சிறிய பதிலை இன்னும் கொஞ்சம் யோசித்து மேலே உள்ள பதிவாக எழுதி இருக்கின்றேன்
What's the dumbest s#1t you have done as a kid?
Wishing to be an adult.

ஒரு பதிவு தேற்றவும் அப்பாவை நினைவு கூறவும் உதவிய அவருக்கு நன்றி. ஆனால் முக்கியமான தகவல் சின்ன வயதில் இருந்து இது வரை நான் எதற்கும் ஆசைப்பட்டது கிடையாது. என்னுடன் நெருங்கி வாழ்பவர்களுக்கு அது தெரியும்
வைகோ அவர்களே விஜய் அரசுக்குக் கொடுக்கும் உறுதியை மதிமுக தொண்டனின் எதிர்காலத்துக்கும் கொடுப்பீர்களா?
வைகோவின் புதிய விசுவாசமும், மதிமுகவின் சுயமரியாதைக் கேள்வியும்!
https://avargal-unmaigal.blogspot.com/2026/11/vaiko-mdmk-tvk-dmk.html
#வைகோ, #மதிமுக, #விஜய், #தவெக, #தமிழகஅரசியல், #Vaiko, #MDMK, #TVK
#Reality humour #RealLife #Middleclass #சம்பளம், #குடும்பச்செலவு, #நடுத்தரவாழ்க்கை, #கடன்சுமை, #தமிழ்நகைச்சுவை,

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.