தீபாவளி புதுசு... ஆனா உங்க பதிவு மட்டும் மாறவே இல்லையே!
அரிசியைக் கழுவி உலர வச்சு, மிஷின்ல கொடுத்து அரைச்சு, முறுக்கு சுட்டு, அதிரசம் செஞ்சு... டெய்லர் கடைக்குப் படையெடுத்து, அண்ணே, என் சட்டைன்னு தினமும் வருகைப் பதிவு போட்டுட்டு, கடைசியில தீபாவளிக்கு முதல் நாள் ராத்திரி துணியை வாங்கிட்டு வந்து...
அதிகாலையில எண்ணெய் தேய்ச்சு, சீயக்காய் வச்சுக் குளிச்சு, அடுத்த வீட்டுக்காரங்க வெடி வெடிக்கிறதுக்கு முன்னாடியே நாம வெடி வெடிச்சு... ரோட்டுல வெடிக்காம கிடக்கிற வெடியெல்லாம் பொறுக்கி வச்சு, மறுபடியும் வெடிச்சு...
அப்பப்பா... என்ன ஒரு தீபாவளி!
அந்த நினைவுகளுக்கு ஈடு இணையே இல்லை. அதை நினைச்சுப் பார்க்கிறதுலயும் பகிர்றதுலயும் தப்பே இல்லை.
சரி இப்போ எப்படி கொண்டாடுறோம்?
ஸ்விக்கியில ஸ்வீட் வருது. அமேசான்ல டிரஸ் வருது. சாஸ்திரத்துக்குத் தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் வச்சிட்டு, ஷாம்பு போட்டுக் குளிக்கிறோம். பட்டாசுச் சத்தம் கேட்டா, கொஞ்சம் அமைதியா இருக்க விடுறாங்களான்னு ஜன்னலைச் சாத்துறோம். கடைசியில சோபாவுல உட்கார்ந்து, மத்தவங்க தீபாவளி கொண்டாடுறதை ரீல்ஸ்ல பார்த்து நம்ம தீபாவளியைக் கொண்டாடுறோம்!
வசதி வந்திருக்கு. வாழ்க்கை மாறியிருக்கு. நாமளும் மாறிட்டோம். அதுலயும் தப்பில்லை!
ஆனா தீபாவளியன்னிக்கு ஃபேஸ்புக்கைத் திறந்தா மட்டும் காலம் பின்னோக்கிப் போயிடுது!
அதே அரிசி... அதே மிஷின்... அதே முறுக்கு... அதே அதிரசம்... அதே டெய்லர் கடை... அதே ரோட்டுல பொறுக்கிய வெடி!
அந்த டெய்லரே இந்நேரம் கடையை மூடிட்டு ஓய்வெடுத்திருப்பாரு. நம்ம பதிவுல மட்டும் இன்னும் சட்டை தைச்சுக்கிட்டே இருக்காரு!
சில பதிவுகளைப் பார்த்தா, இந்த வருஷம் தீபாவளி கொண்டாடுறோமா, இல்ல பழைய தீபாவளி நினைவுகளை ரீ-ரிலீஸ் பண்றோமான்னே தெரியல!
கீழே நம்மளும் போய், பூமர் அங்கிள்/ஆண்டி மாதிரி உண்மைதான் அந்த நாளெல்லாம் திரும்ப வராதான்னு கமெண்ட் போடுறோம்.
அந்த நாள் திரும்ப வருதோ இல்லையோ அந்தப் பதிவு மட்டும் வருஷம் தவறாம வந்துடுது! 😂
நினைவுகளைப் பகிருங்க. பழைய காலத்தைப் பெருமையாப் பேசுங்க. ஆனா இந்த வருஷம் நடந்த ஒரு சந்தோஷத்தையும் கூடவே சேர்த்துக்கோங்க மக்களே!
பலகாரத்தைக் கடையில வாங்கலாம் புதுசா ஒரு நினைவை நாமதானே உருவாக்கணும்!
அடுத்த தீபாவளிக்கு அதையும் சேர்த்து ரீ-ரிலீஸ் பண்ண வசதியா இருக்கும்! 😂
சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன் மனதில் இருப்பதையெல்லாம் சொல்ல முடியுமா?
https://avargal-unmaigal.blogspot.com/2026/11/lifereflections-unspokenfeelings.html
#LifeReflections #UnspokenFeelings #MensEmotions #BehindTheSmile #FamilyLove #LifeAbroad #TamilBlog #MaduraiTamilan
அன்புடன்,
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.