பேஸ்புக் தளத்தில் எழுதி பதிந்தது
1. சிறு வயதில் நம் பாதுகாப்புக்காக நம் பெற்றோர் நம் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்கள் . நாம் பெரியவர்களான பிறகு, அவர்களின் பாதுகாப்புக்காக நாம் அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறோம். கைகள் அதே கைகள்தான். யார் யாரைப் பிடித்து அழைத்துச் செல்கிறோம் என்பதுதான் மாறுகிறது. வாழ்க்கை ஒரு சிறிய வட்டம். நினைத்துப் பார்த்தால் விசித்திரமாகத்தான் இருக்கிறது.
#சனிக்கிழமை மாலை, கண்டபடி யோசித்துக் கொண்டிருந்தபோது மனதில் தோன்றிய எண்ணங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையைப் பற்றி நிறைய யோசித்தேன். ஒவ்வொரு நினைவாக வரவர மனம் நெகிழ்ந்து போனது. இப்போது எதையோ இழந்ததுபோலத் தோன்றுகிறது. ஆனால் அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை. என்மீதே எனக்கு ஏதோ ஒரு இரக்கம் வருகிறது. ஏனென்றும் தெரியவில்லை. கொஞ்ச நேரம் மனம் விட்டு அழ வேண்டும் போலிருக்கிறது.
2. இளமையில், அமெரிக்கா வந்த பிறகும் சரி, சமூக வலைத்தளங்களில் எழுதத் தொடங்கிய பிறகும் சரி, யாராவது என்னைத் தவறாகப் புரிந்து கொண்டால் கவலைப்படுவேன். அவர்களுக்கு விளக்கம் கொடுத்து, என்னைப் புரியவைக்க முயற்சி செய்வேன்.
ஆனால் இப்போது வயதும் அனுபவமும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.
என்னைப் புரிந்துகொள்ளாத ஒவ்வொருவருக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால், என் வாழ்க்கையை நான் வாழ நேரமிருக்காது.
அதனால் இப்போதெல்லாம், யார் என்னைப் பற்றி என்ன நினைத்தால் எனக்கென்ன என்று நினைத்துக் கொண்டு, என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எல்லோரும் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது இல்லை. அதனால் மனதில் நினைப்பதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன் பதிவிட்டுக் கொண்டு இருக்கின்றேன். பிடித்தவர்கள் தொடரட்டும் பிடிக்காதவர்கள் விலகட்டும். அதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. சரிதானே மக்களே?
#சனிக்கிழமையைத் தொடர்ந்து, #ஞாயிற்றுக்கிழமை காலையிலும் யோசனை தொடர்கிறது!
3. சிறுவயதில் மதுரையில் இருந்தபோது,
சென்னை அதன் பின் வெளிநாடு போனால் எல்லா பிரச்சினைகளும் முடிந்துவிடும் என்று நினைத்தேன்.
சென்னை மற்றும் வெளிநாடு வந்த பிறகு புரிந்தது.
இடம் மாறுகிறது. மொழி மாறுகிறது. காலநிலை மாறுகிறது.
ஆனால் கவலைகள் மட்டும் வடிவம் மாறி தொடர்கின்றன.
உங்களின் அனுபவம் எப்படி மக்களே?????

4. ஆண்களின் மனம் உடைவதில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அது அடிக்கடி உடைகிறது.
வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் உடைந்த துண்டுகளை எடுத்துக்கொண்டு மறுநாள் காலையிலும் வேலைக்குப் போய் விடுகிறார்கள்.
ஞாயிற்றுக் கிழமை இரவு தூங்க போகும் முன் யோசித்தது.... நான் நாளைக் காலையில் வேலைக்கு போக வேண்டும்
சேற்றை வீசிவிட்டு அடுத்த செய்திக்குப் போய்விடலாம் பெயர் அடிபட்டவர் என்ன செய்வார்? https://avargal-unmaigal.blogspot.com/2026/10/blog-post.html

ஜெயமோகனின் அறச் சீற்றம்: மருத்துவர்கள் குறித்த விமர்சனம் நியாயமா?
மருத்துவர்கள் குறித்த ஜெயமோகனின் கருத்துக்கு என் எதிர்வினை
https://avargal-unmaigal.blogspot.com/2026/10/jeyamohan-doctors.html
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#வாழ்க்கை #மனதின்குரல் #ஆண்களின்மனது #சொல்லாதஉணர்வுகள் #நினைவுகள் #பெற்றோர் #தமிழ்பதிவு #மதுரைத்தமிழன் #LifeReflections #UnspokenFeelings #MensEmotions #BehindTheSmile #FamilyLove #LifeAbroad #TamilBlog #MaduraiTamilan

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.