வேலைக்குப் போய்விட்டு வந்து பேஸ்புக்கைத் திறந்தால், பெரியார் அறிவுலகம் புத்தக ஊழல் குற்றச்சாட்டு பற்றிய பேச்சுதான் எங்கும்.
திமுகதான் காரணம் என்று ஒரு கோஷ்டி கரகாட்டம் ஆடுது. தவெகதான் காரணம் என்று இன்னொரு கோஷ்டி குத்தாட்டம் ஆடுது. எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க என்று நடுவில் சிலர் பரதநாட்டியம் ஆடுறாங்க.
ஆளாளுக்குத் தெரிந்ததை, தெரியாததை, தெரிந்ததுபோல் தோன்றுவதை எல்லாம் எழுதிக்கிட்டிருக்காங்க. பேஸ்புக்கிலேயே CBI விசாரணை நடத்தி, தீர்ப்பு எழுதி, தண்டனையும் கொடுத்தாச்சு. என்ன நடந்ததுங்கிறதுலதான் இன்னும் ஒருமித்த கருத்து வரலை!
என்ன நடந்தது, யார் காரணம் என்று விசாரித்துச் சொல்ல வேண்டிய அரசோ வாயைத் திறக்கவில்லை. அதற்கும் சேர்த்து மக்களே பேசிக்கிட்டிருக்காங்க. அரசுக்கு அந்த வேலையைக்கூட நாம் விட்டு வைக்கவில்லை!
நானும் இவ்வளவு பதிவுகளைப் படித்த பிறகுதான் புரிந்துகொண்டேன்: சம்பாதிக்கிறவர்கள் சம்பாதிப்பதில் கவனமாக இருக்கிறார்கள். நாம் அவர்கள் எப்படிச் சம்பாதித்தார்கள் என்று விவாதிப்பதில் கவனமாக இருக்கிறோம். அவரவருக்கு அவரவர் வேலை!
அதனால்தான் சொல்கிறேன் மக்களே, நீங்களும் இப்படி ஏதாவது செய்து நாலு காசு சம்பாதிக்க வழி பண்ணுங்க. தினமும் வேலைக்குப் போய், சம்பளம் வந்திருக்கான்னு கணக்கைப் பார்த்துக்கிட்டிருப்பதற்குப் பதிலாக, நம்மைப் பற்றியும் நாலு பேர் பதிவு போடுகிற அளவுக்காவது முன்னேற வேண்டாமா?
அப்புறம் மக்கள் கேள்வி கேட்பாங்களே என்று பயமா?
கேட்கட்டுமே! அதற்குத்தான் கமெண்ட் பாக்ஸ் இருக்கிறதே. ஒரு தரப்பு உங்களைத் திட்டும். இன்னொரு தரப்பு உங்களுக்காக வாதாடும். நீங்கள் விளக்கம் கொடுக்க வேண்டிய வேலையைக்கூட அவர்களே பார்த்துக் கொள்வார்கள்!
நாம மட்டும் நாளெல்லாம் பதிவும் பதிலும் போட்டுக்கொண்டு, இரவு தூங்கப் போகும்போது, இன்னைக்கு அவனுக்குச் சரியான பதிலடி கொடுத்துட்டேன்” என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அவர்கள் கணக்கில் பண வரவு. நம்ம கணக்கில் லைக்ஸ் வரவு மட்டும்.
அந்த லைக்கை வைச்சு ஒரு மயிரும் புடுங்க முடியாது மக்களே. குறைந்தபட்சம் டேட்டா ரீசார்ஜ் பண்ணுகிற காசாவது திரும்ப வருகிற மாதிரி ஏதாவது செய்யுங்க!
சரி, நீங்க தொடர்ந்து விவாதிங்க. நான் இரவு தூங்கிட்டு நாளைக்கு வேலைக்குப் போய்விட்டு வந்து உங்களிடம் பேசுகின்றேன்.
அவ்வளவுதான் சொல்லுவேன் உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஸ் இவ்வளவு சொல்லியும் இந்த தமிழ் சமுகத்திற்கு கொஞ்சாமாவது புரியுமான்னு நினைக்கிறீங்க அதுதான் கிடையாது டாட்
பெரியார் அறிவுலகம் பெயர் பெரியாருடையது நேர்மைக்குப் பொறுப்பு யாருடையது? https://avargal-unmaigal.blogspot.com/2026/11/periyararivulagam-scam-tamilnadu.html
அன்புடன்
மதுரைத்தமிழன்

#பெரியார்அறிவுலகம் #புத்தகஊழல்குற்றச்சாட்டு #அரசியல்நையாண்டி #கட்சிசண்டை #பேஸ்புக்விவாதம் #தமிழ்நாடுஅரசியல் #மதுரைத்தமிழன் #PeriyarArivulagam #TamilSatire #scam

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.