விகடனின் தீபாவளி வெடி “அறிவாளிகளுக்கு” வைச்ச சோதனை!
விகடனாரே வாழ்த்துச் சொல்றீங்களா, வம்புக்கு இழுக்கிறீங்களா?
ஒரே கார்ட்டூனைப் போட்டுட்டு, யாருக்குக் கைதட்டுறது, யாருக்காகக் கோபப்படுறதுன்னே தெரியாமல் “அறிவாளிகளை” இப்படிக் குழப்பத்தில் ஆழ்த்துறீங்களே இது நியாயமா?
அமெரிக்காவுக்கு ட்ரம்ப், இந்தியாவுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு விஜய். இதைத்தான் சொல்ல வர்றீங்களா? அதோடு நிறுத்தாமல், மூணு பேரையும் ஒரே துப்பாக்கிக்குள்ள வைத்திருக்கிறீர்களே! இடம் வேறு ரகம் ஒண்ணுதான்னு சொல்ல வர்றீங்களா நான் கூட மோடியையும் விஜய்யையும் இப்படி இன்சல்ட் பண்ணியது கிடையாது! இதில் எனக்கொரு சந்தேகம்.
ட்ரம்ப்பைக் கலாய்த்திருக்காங்கன்னு சந்தோஷப்படுறதா இல்ல மோடியையும் சேர்த்திருக்காங்கன்னு கைதட்டுறதா இல்ல விஜய்யும் இருக்காரேன்னு கோபப்படுறதா? மூணு பேரில் ஒருத்தரை மட்டும் ஆதரிக்கிறவங்க நிலைமைதான் கஷ்டம்! படத்தைப் பாராட்டவும் முடியாது. முழுசாகத் திட்டவும் முடியாது. தங்களுக்குப் பிடித்தவரை மட்டும் படத்திலிருந்து வெட்டி எடுத்துட்டுத்தான் கருத்துச் சொல்லணும் போல!
சரி தமிழக அறிவாளிகளும் "அமெரிக்க அறிவாளிகளும்" என்ன விளக்கம் சொல்றாங்கன்னு பார்ப்போம். படம் என்ன சொல்லுதுங்கிறதைவிட, அவரவர் ஆதரிக்கிற ஆளை இதிலிருந்து எப்படிக் காப்பாத்தப் போறாங்கன்னு பார்க்கத்தான் எனக்கு ஆர்வம்!
ஆனால் "அறிவாளிங்க" ஒரு டெம்ளேட் பதில் வைச்சிருப்பாங்க அது வேறு ஒன்றுமில்லை எல்லாவற்றிற்கும் திராவிடமும் திராவிட தலைவர்கள்தான் இதற்கு காரணம் என்று. என்னென்றால் அறிவாளிங்க, சூழ்நிலை யாருக்கு சாதகமாக இருக்கிறதோ அவர்களுக்குதான் அறிவாளிங்க சொம்பு தூக்குவாங்க
விகடனாரே “ஹேப்பி தீபாவளின்னு" போட்டுட்டு, “அறிவாளிகளை” இப்படிச் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டீர்களே!
பதிலுக்கு வெடிப்பாங்களா இல்லை, தங்களுக்குப் பிடித்தவரும் படத்தில் இருக்கிறதால், நமத்துப்போன பட்டாசு மாதிரி அமைதியாகப் பொத்திக்கிட்டு இருப்பாங்களா?
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#விகடன், #தீபாவளி, #ட்ரம்ப், #மோடி, #விஜய், #அரசியல்நையாண்டி, #கருத்துப்படம், #அரசியல்கார்ட்டூன், #தமிழகஅரசியல், #திராவிடம், #அரசியல்விமர்சனம், #மதுரைத்தமிழன்,

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.