பெரியார் அறிவுலகம் தொடர்பாக எழுந்துள்ள புத்தக ஊழல் குற்றச்சாட்டு அது வெறும் பண முறைகேடு அல்ல . அறிவின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குச் செய்யப்படும் துரோகம்! அறிவை வளர்க்க வேண்டிய இடத்திலேயே முறைகேடு நடந்திருந்தால், அது மருத்துவமனையில் உயிரைக் காக்க வேண்டிய ஆக்ஸிஜன் சிலிண்டருக்குப் பதிலாக விஷவாயு சிலிண்டரை வைத்ததற்குச் சமம்!
இந்த விவகாரத்தில் கட்சிச் சாயங்களைப் பூசிக்கொண்டு மக்கள் அடித்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். நம்ம ஆள் செய்திருக்க மாட்டார் என்பதும், எதிர்த்தரப்பு என்பதால் செய்திருப்பார் என்பதும் விசாரணைக்கு மாற்றாகாது. யார் மீது குற்றச்சாட்டு எழுந்தாலும், கேள்வி கேட்கும் நேர்மை நமக்கு இருக்க வேண்டும். ஜல்லிக் கட்டுக்காக ஒன்றாகத் திரண்டதுபோல, இந்த விவகாரத்திலும் வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணை கோரி மக்கள் ஒன்று திரண்டு அமைதியாகவும் உறுதியாகவும் குரல் எழுப்ப வேண்டும்.
எங்களுக்கு தெரியாது கீழ்மட்ட நிர்வாகிகள் செய்த தவறு என்று சொல்லிவிட்டு எந்தக் கட்சித் தலைமையும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளக் கூடாது. தலைமை என்பது தவறுக்கு முட்டுக் கொடுப்பது அல்ல . தவறு செய்தவன் ‘நம்ம ஆள்’ என்றாலும் காப்பாற்றாமல், சட்டத்தின் முன் நிறுத்தத் துணிவதுதான் உண்மையான நேர்மை! அந்த நேர்மை ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்கள் தலைவர்களே அல்ல
அரசு அதிகாரிகள் முதல் அரசியல் புள்ளிகள் வரை, யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை விசாரணை வெளிக்கொண்டு வர வேண்டும். முறைகேடு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இழப்பு ஏற்பட்டிருந்தால் அதையும் மீட்க வேண்டும்.
பெரியார் பெயரைப் பலகையில் எழுதி வைத்தால் மட்டும் போதாது. அந்தப் பெயரைப் பயன்படுத்தித் தவறு செய்தது யாராக இருந்தாலும், அவர்களைக் கேள்வி கேட்கவும் அம்பலப்படுத்தவும் தயங்கக் கூடாது!
பெரியாரின் பெயர் பயன்படுத்தப்பட்டது மக்களை விழிப்புணர்வூட்டவா அல்லது மக்களை ஏமாற்றவா?
இந்தக் கேள்விக்குப் பதில் வேண்டும். கட்சிச் சண்டை அல்ல வெளிப்படையான விசாரணையும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையும் வேண்டும்!
அன்புடன்,
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.