English: English and Hindi versions follow the Tamil post below.
हिन्दी: इस तमिल पोस्ट के नीचे अंग्रेज़ी और हिन्दी संस्करण भी उपलब्ध हैं।
டெல்லி உங்களை வரவேற்கிறது மூச்சுக்கு உத்தரவாதமில்லை!
சிகரெட் பெட்டியில் எச்சரிக்கை . சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிக்கும் எச்சரிக்கை. புகைபிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு.
ஆனால், டெல்லியில் சும்மா மூச்சுவிடுவதே ஒரு நாளைக்கு 30 சிகரெட் பிடிப்பதற்குச் சமம் என்கிற செய்தியைப் பார்த்தேன்.
அப்படியானால், டெல்லிக்குள் நுழையும் இடங்களில் டெல்லி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்பதற்குக் கீழே, “இங்கே சுவாசிப்பது உடல் நலத்திற்குக் கேடு என்றும் எழுதி வைப்பார்களா?
வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அனுப்பும் அழைப்பிதழிலும், தங்கள் வருகையை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் தங்கள் வருகையால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளுக்கு வருந்துகிறோம் என்று குறிப்பிடுவார்களா?
சிகரெட் பிடிப்பவரிடம் பிடிக்காதீர்கள் என்று சொல்லலாம் மூச்சுவிடுபவரிடம் மூச்சு விடாதீர்கள் என்றா சொல்லவா முடியும்?
இது வெறும் கிண்டலுக்காகச் சொல்லும் விஷயமில்லைங்க
2008 முதல் 2019 வரையிலான தரவுகளை வைத்து, 2024-ல் வெளியான ஆய்வு ஒன்று என்ன சொல்கிறது தெரியுமா? உலக சுகாதார அமைப்பு சொல்லும் தினசரி PM2.5 நுண்துகள் மாசு அளவை மீறிய காற்றைச் சுவாசிப்பதுடன், டெல்லியில் ஆண்டுக்குச் சுமார் 12,000 மரணங்கள் தொடர்புடையதாக மதிப்பிட்டிருக்கிறது. இது அந்த ஆய்வுக் காலத்துக்கான கணக்கு; இந்த ஆண்டில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று சொல்லும் கணக்கல்ல. அப்படியிருந்தும், இதை ஒவ்வொரு ஆண்டும் வரும் புகைமூட்டச் செய்தியாகப் பார்த்து விட்டுக் கடந்துபோக முடியுமா?
சிகரெட் பெட்டியில் எச்சரிக்கை எழுதுவது சரிதான். ஆனால், ஒரு நகரமே சிகரெட் பெட்டியாக மாறினால் எச்சரிக்கை மட்டும் போதுமா?
மக்கள் நலன் தேச நலன் என்று பேச்சுக்குப் பேச்சு பேசும் தலைவர்களே மக்கள் சுவாசிக்கும் காற்றைக் காப்பாற்ற என்ன செய்தீர்கள்? எடுத்த நடவடிக்கைகளால் என்ன பலன் கிடைத்தது?
நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதுமா? மக்கள் இன்னும் அதே காற்றைத்தானே சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்?
எல்லைக்கு அப்பாலிருந்து வரும் ஆபத்துக்குப் பதிலடி கேட்கிறோம் நம் நுரையீரலுக்குள் நுழையும் ஆபத்துக்குப் பொறுப்பு யாரிடம் கேட்பது?
எதிரியை எதிர்த்துப் பேசுவது மட்டும்தான் தேசப்பற்றா சொந்த மக்களின் உயிரைக் காப்பதும் தேசப்பற்றுதானே மக்களிடம் புகைபிடிக்காதீர்கள் என்று சொல்லும் அரசிடம் நாங்கள் புகைபிடிக்கவில்லை நீங்களாவது புகையில்லாத காற்றைக் கொடுங்கள் என்று கேட்கக்கூடாதா?
தேசத்தைக் காப்போம் என்கிறீர்களே இந்திய மக்கள் சுவாசிக்கும் காற்றை யார் காப்பது?
#மதுரையானந்தாவின் #ஞாயிற்றுக்கிழமைசிந்தனைகள்
அன்புடன்,
மதுரைத்தமிழன்
English
Delhi Welcomes You. No Guarantee You Can Breathe!
A warning on cigarette packets. A warning during smoking scenes in films. Smoking is injurious to health!
But I saw a news report saying that simply breathing in Delhi is equivalent to smoking 30 cigarettes a day.
In that case, at the entry points to Delhi, below Delhi warmly welcomes you, will they also put up a sign saying, Breathing here is injurious to health?
And on invitations sent to foreign leaders, will they mention, We eagerly await your visit. We regret the harm to your health that your visit may cause?
You can tell someone who smokes, “Don’t smoke.” But can you tell someone who is breathing, “Don’t breathe”?
This isn’t something I’m saying just for a laugh.
Do you know what a study published in 2024, using data from 2008 to 2019, says? It estimated that around 12,000 deaths a year in Delhi were associated with exposure to air containing PM2.5 fine-particle pollution above the World Health Organization’s daily guideline level. That is an estimate for the study period; it is not a count saying that this many people died this year. Even so, can we treat this as just another annual smog story and move on?
Putting a warning on a cigarette packet is fair enough. But when an entire city turns into a cigarette packet, is a warning alone enough?
Leaders who keep talking about people’s welfare and the nation’s welfare what have you done to protect the air people breathe? What results have your actions produced?
Is it enough to simply say, We are taking action? Aren’t people still breathing the same air?
We demand retaliation against threats coming from across the border. Whom do we hold accountable for the threat entering our lungs?
Is speaking against the enemy the only form of patriotism? Isn’t protecting the lives of our own people also patriotism? When the government tells people, “Don’t smoke,” shouldn’t we be able to ask, “We aren’t smoking. Could you at least give us smoke-free air?”
You say, “Let’s protect the nation.” Who will protect the air the people of India breathe?
#MadhuraiAnandhas #SundayThoughts
With love,
Madhurai Tamilan
Hindi
दिल्ली आपका स्वागत करती है। साँस लेने की कोई गारंटी नहीं!
सिगरेट के पैकेट पर चेतावनी। फ़िल्मों में धूम्रपान के दृश्यों के दौरान भी चेतावनी। “धूम्रपान स्वास्थ्य के लिए हानिकारक है!”
लेकिन मैंने एक ख़बर देखी कि दिल्ली में सिर्फ़ साँस लेना ही एक दिन में 30 सिगरेट पीने के बराबर है।
तो क्या दिल्ली के प्रवेश द्वारों पर “दिल्ली आपका हार्दिक स्वागत करती है” के नीचे यह भी लिखेंगे कि “यहाँ साँस लेना स्वास्थ्य के लिए हानिकारक है”?
विदेशी नेताओं को भेजे जाने वाले निमंत्रण पत्रों में भी क्या लिखेंगे, “हमें आपके आगमन का बेसब्री से इंतज़ार है। आपके यहाँ आने से आपकी सेहत को होने वाले नुकसान के लिए हमें खेद है”?
सिगरेट पीने वाले से कह सकते हैं, “मत पीजिए।” लेकिन साँस लेने वाले से क्या कह सकते हैं, “साँस मत लीजिए”?
यह बात मैं सिर्फ़ मज़ाक के लिए नहीं कह रहा हूँ।
पता है, 2008 से 2019 तक के आँकड़ों के आधार पर 2024 में प्रकाशित एक अध्ययन क्या कहता है? उसके अनुमान के मुताबिक, दिल्ली में हर साल लगभग 12,000 मौतें ऐसी हवा के संपर्क में आने से जुड़ी थीं, जिसमें PM2.5 महीन कणों का प्रदूषण विश्व स्वास्थ्य संगठन के दैनिक दिशानिर्देश स्तर से अधिक था। यह अध्ययन की अवधि का अनुमान है; यह इस साल इतनी मौतें होने का आँकड़ा नहीं है। फिर भी, क्या हम इसे हर साल आने वाली धुंध की एक और ख़बर समझकर आगे बढ़ सकते हैं?
सिगरेट के पैकेट पर चेतावनी लिखना ठीक है। लेकिन जब एक पूरा शहर ही सिगरेट का पैकेट बन जाए, तो क्या सिर्फ़ चेतावनी काफ़ी है?
बात-बात पर जनता की भलाई और देश की भलाई की बात करने वाले नेताओ—लोग जिस हवा में साँस लेते हैं, उसे सुरक्षित रखने के लिए आपने क्या किया?
आपके उठाए गए कदमों का क्या नतीजा निकला?
क्या सिर्फ़ यह कह देना काफ़ी है कि “हम कार्रवाई कर रहे हैं”? लोग अब भी उसी हवा में साँस ले रहे हैं न?
सरहद पार से आने वाले ख़तरे का हम मुँहतोड़ जवाब माँगते हैं। हमारे फेफड़ों में घुस रहे ख़तरे के लिए किससे जवाब माँगें?
क्या दुश्मन के ख़िलाफ़ बोलना ही देशभक्ति है? अपने ही लोगों की जान बचाना भी तो देशभक्ति है न? लोगों से “धूम्रपान मत कीजिए” कहने वाली सरकार से क्या हम यह नहीं पूछ सकते, “हम धूम्रपान नहीं कर रहे हैं। आप कम से कम हमें धुएँ से मुक्त हवा तो दीजिए”?
आप कहते हैं, “देश की रक्षा करेंगे।” भारत के लोग जिस हवा में साँस लेते हैं, उसकी रक्षा कौन करेगा?
#मदुरैआनंदाके #रविवारके_विचार
सप्रेम,
मदुरै तमिलन
#DelhiAirPollution, #DelhiPollution, #DelhiSmog, #DelhiAirQuality, #CleanAir, #RightToBreathe, #AirPollutionAwareness, #PublicHealth, #PoliticalSatire, #டெல்லிகாற்றுமாசு, #காற்றுமாசு, #சுவாசிக்கும்உரிமை, #அரசியல்நையாண்டி, #दिल्लीप्रदूषण, #वायुप्रदूषण, #स्वच्छहवा, #மதுரையானந்தாவின், #ஞாயிற்றுக்கிழமைசிந்தனைகள், #மதுரைத்தமிழன்


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.