திருச்செந்தூர் சூரசம்ஹார மேடையையே ஆட்சியாளர்களின் பிரச்சார மேடையாக மாற்றிவிட்டு, மக்கள் பொங்கி எழுந்தவுடன் வீடியோ வெளியிட்டு இலக்கணப் பாடம் எடுக்கும் புஷ்பவனம் குப்புசாமியின் போக்கு வேடிக்கையின் உச்சம்! என்னமோ இவர் மட்டும்தான் புத்திசாலி மாதிரியும், மற்றவர்கள் எல்லாம் தவெகவில் உள்ள தற்குறிகள் போலவும் விளக்கம் வேறு கொடுக்கிறார்!
பக்திப் பாடல்கள் பாடச் சென்ற இடத்தில், கையில் மைக்கைப் பிடித்துக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு அரோகரா கோஷம் போடுவது எந்த வகையில் நியாயம்? கந்த சஷ்டி விழாவில் முருகனைப் பாடாமல் ஆட்சியாளர்களைப் பாடினால், எதிரில் நிற்பவர்கள் காதுபொத்தி முகம் சுழிக்கத்தான் செய்வார்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். ஆன்மிக மேடையை ஆளுங்கட்சி மாநாடாக மாற்ற முயன்றதுதான் முதல் அநாகரிகம். அநாகரிகத்தை அரங்கேற்றிவிட்டு, இப்போது மற்றவர்கள் நாகரிகமில்லாமல் திட்டுகிறார்கள் என்று புலம்புவது என்ன நியாயம் புஷ்பவனம் அவர்களே?
பாடிய வரிகள் சமூக வலைதளங்களில் சாயம் வெளுத்தவுடன், இப்போது வந்து முதல்வர் போல் அங்கே ஒரு கமா போட்டேன், அப்புறம்தான் முருகனைப் பாடினேன் என்று இலக்கண வியாக்கியானம் பேசுகிறார். கச்சேரியில் பாடும்போது கேட்பவர்களுக்குப் பாடலின் வரிகள் கேட்குமா அல்லது இவர் மனதில் போட்டுக்கொண்ட நிறுத்தக்குறி தெரியுமா? தவறை மறைக்க இவ்வளவு அப்பட்டமான சப்பக்கட்டா? ஏதோ ஆர்வக் கோளாறினால் தவறு செய்துவிட்டேன் என்று பெருந் தன்மையாகச் சொல்லி இருந்தால் மக்கள் மன்னித்திருப்பார்கள். ஆனால் அப்படியில்லாமல், மக்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்பதுபோலத் தன் குற்றத்தை மறைக்க விளக்கம் சொல்ல வெட்கமாக இல்லையா?
பதவிகள் நிரந்தரமல்ல ஆனால் ஒரு கலைஞனின் குரலும் மரியாதையும் காலத்தால் அழியாதது. இத்தனை காலம் நாட்டுப் பாடல்களாலும் பக்திப் பாடல்களாலும் சேர்த்த நன்மதிப்பை, ஒரேயொரு அரசியல் துதிபாடலால் தூக்கி எறிந்துவிட்டாரே என்ற ஆதங்கமே எஞ்சுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் மேடைகளில் இப்படி வளைந்து நெளிந்தால் வரலாறு ஒரு கலைஞனை எப்படிப் பதிவு செய்யும்?
என்னைத் திட்ட உங்களுக்கு உரிமை உண்டு என்று முகத்தில் போலிப் பெருந்தன்மையை வைத்துக்கொண்டு, உள்ளுக்குள் தனது தவறை நியாயப்படுத்தப் பார்ப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வீடியோ போட்டு வக்காலத்து வாங்குவதை நிறுத்திவிட்டு, பக்தி மேடையில் அரசியல் பேசியது தவறுதான் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்வதே கலைக்கு அவர் செய்யும் மரியாதையாக இருக்கும்.
தவறு செய்யாத மனிதர்களே இல்லை ஆனால் தவறு என்று தெரிந்தபின் மன்னிப்புக் கேட்பதுதான் நல்ல மனிதனுக்கு அடையாளம். அப்படி உண்மையை ஒப்புக்கொள்ளத் துணிவு இல்லை என்றால், அன்று சேகர்பாபு உங்களை கூத்தாடி என்று இழிவுபடுத்திப் பேசியதில் எந்தத் தவறுமே இல்லை!

--------------------------------------------------------------------------------------------
இசைக்கு ராஜாவாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் அல்ல! https://avargal-unmaigal.blogspot.com/2026/11/ilaiyaraaja-gondhal-oscars-cuesheet.html
#Ilaiyaraaja, #இளையராஜா, #Gondhal, #கோந்தல், #Oscars, #ஆஸ்கர், #CueSheet, #கியூஷீட், #TamilBlog, #மதுரைத்தமிழன்
--------------------------------------------------------------------------------------------
அன்புடன்
மதுரைத்தமிழன்
#PushpavanamKuppusamy, #TiruchendurControversy, #Soorasamharam, #CMVijay, #TamilNaduPolitics, #ArogaraControversy, #MaduraiThamizhan,

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.