இன்றைய தமிழகத்தில் சாமிக்கு அர்ச்சனை சக மனிதனுக்கு வஞ்சனை
பெரியார் மண் என்று சொல்லப்படும் தமிழகத்தில், இவ்வளவு திடீர் தெய்வபக்தி எங்கிருந்து வந்ததுன்னு தெரியவில்லை. கோவில்களில் கட்டுக்கடங்காத கூட்டம். மாதந்தோறும் ஏதாவது ஒரு ஆன்மிக விழா. விரதம், கூட்டம் கூட்டமாகக் கோவில் பயணம் என்று எங்க பார்த்தாலும் பக்திமயம்!
சஷ்டி, வரலட்சுமி விரதம், சதுர்த்தி, ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி என்று இதையெல்லாம் இவ்வளவு பரவலாகக் கடைப்பிடிப்பதை முன்பு நான் பார்த்ததில்லை. முன்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் இதை எல்லாம் கொண்டாடுவார்கள். ஆனால் இப்ப எல்லாப் பிரிவினரும் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் . மக்களின் பக்தியோ, விலைவாசியைப் போலவே நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போகுது.
25 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இந்த அளவுக்கு இருந்ததாக என் நினைவில் இல்லை. ஆனா இப்ப அதிகரிச்சிருப்பது பக்தியா, பகல் வேஷமான்னுதான் எனக்குக் குழப்பமா இருக்கு.
என் மனசுக்குள் எழுகிற கேள்வி ஒன்றுதான் பக்தி அதிகரித்த அளவுக்கு நற்பண்புகளும் அதிகரிச்சிருக்கா என்பதுதான் காரணம், இவ்வளவு பக்திக்கு நடுவிலும் திருட்டு, மோசடி, பாலியல் குற்றங்கள், கொலை, தவறான வழியில் பணம் சேர்ப்பது என்று செய்திகள் வந்துகிட்டுத்தானே இருக்கு
கோவிலுக்குப் போறதும் விரதம் இருக்கிறதும் அவரவர் விருப்பம். அதை நான் தப்பு சொல்லலை. ஆனா அடுத்தவனை ஏமாத்திட்டு, அவனுக்குக் கெடுதல் பண்ணிட்டு, சாமி முன்னாடி மட்டும் நல்லவனா நின்னா என்ன பயன். எனக்கென்னவோ நம்மில் சிலர் அந்நியன் படத்து விக்ரம் மாதிரி மாறிட்டாரகளோன்னு தோணுது. ஒரு பக்கம் பக்தி இன்னொரு பக்கம் கயமை . மக்கள் பக்தியை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறதைவிட, வெளியே காட்டுற அடையாளமாத்தான் வைத்திருக்கிறார்களோன்னு தோணுது.
இதிலிருந்து எனக்குப் புரிஞ்சது ஒண்ணுதான் நெற்றியில் இருக்கும் திருநீறு மட்டும் மனிதனை நல்லவனாக்காது. மனசாட்சிப்படி நடப்பதுதான் நல்லவனாக்கும். இப்படி மனசாட்சிபடி நடப்பவர்களாலே இவ்வுலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.