பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், ஆனந்த விகடன் இதழில் எழுதிய ‘மேகங்களின் குரல்!’ தொடரில் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த மருத்துவர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் அவர், டாக்டர்கள் படித்தவர்கள் என்பது ஒரு மாயை அவர்கள் ஒரு தொழிலில் பயிற்சி பெற்றவர்களே தவிர, பெரும்பாலானோருக்கு ஒழுக்கம், அறம் மற்றும் பொது நாகரிகம் பற்றிய புரிதல் இருப்பதில்லை... தாங்கள் ஒரு வகையான மானுட தெய்வங்கள் என்ற பிரமையும் அவர்களுக்கு உண்டு என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ரயில்கள் மற்றும் பொதுவெளிகளில் சக மனிதர்களின் இருப்பைப் பற்றிய பிரக்ஞையின்றி சிலர் நடந்து கொள்வதையும், அதைத் தட்டிக்கேட்டால் பொய்ப் புகார்களுக்கு அஞ்ச வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஜெயமோகனின் இந்தக் குறிப்பிட்ட பார்வையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, அவரின் பொதுமைப்படுத்தும் போக்கையும், மேட்டிமைத்தனமான சிந்தனையையும் நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது
ஜெயமோகன் அவர்களே மருத்துவர்கள் சிலர் ரயிலில் அநாகரிகமாக நடந்துகொண்டால் அவர்களைக் கண்டியுங்கள். நானும் உங்களுடன் சேர்ந்து கண்டிக்கிறேன். மருத்துவர் என்பதற்காக யாருக்கும் தனியாகக் கொம்பு முளைத்துவிடவில்லை. பொதுவெளியில் மற்றவர்களை மதித்து நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால், அவர்கள் செய்த தவறுக்காக மருத்துவர்களில் பெரும்பாலானோருக்கு ஒழுக்கமும் அறமும் பொது நாகரிகமும் இல்லை என்ற முடிவுக்கு எப்படிப் போகிறீர்கள்?
நீங்கள் பார்த்தது ஒரு ரயில் பெட்டியில் இருந்த சில மருத்துவர்களையா, ஒட்டுமொத்த மருத்துவச் சமூகத்தையா? உங்கள் விமர்சனத்தில் எனக்கு இடிக்கும் இடம் இதுதான்.
டாக்டர்கள் படித்தவர்கள் என்பதே ஒரு மாயை என்ற கருத்தை முன் வைக்கும்போது, படித்தவர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் சொல்ல வேண்டாமா. பட்டம் பெற்றுவிட்டால் ஒருவர் பண்பாளராகிவிடுவார் என்று யார் உத்தரவாதம் கொடுத்தது. ஒருவர் பண்பில்லாமல் நடந்துகொண்டால், அவர் படித்த படிப்பே மாயையாகிவிடுமா என்ன?
மருத்துவம் படித்தவர் தவறு செய்தால் மருத்துவப் படிப்பைக் கேள்வி கேட்கிறீர்கள். இலக்கியம் படித்தவர் தவறு செய்தால் இலக்கியத்தையே கேள்வி கேட்பீர்களா சரி, உங்கள் அளவுகோலை மற்றவர்களுக்கும் கொஞ்சம் வைத்துப் பார்ப்போம்.
புதிதாகக் கட்டிய பாலம் இடிந்து விழுகிறது. புதிதாக கட்டப்பட்ட விமானநிலையமும் , பாரளுமன்றமும் , ராமர் கோவிலும் ஒரு மழைக்கே தாங்கவில்லை. அதற்குத் தரமற்ற கட்டுமானமும் பொறியியல் தவறுகளுமே காரணம் என்று தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பொறியாளரிடமும் ஒப்பந்தக்காரரிடமும் அதிகாரிகளிடமும் பொறுப்புக் கேட்க வேண்டும். யாரையும் விட்டுவிடக் கூடாது. ஆனால் அதற்காக, பொறியாளர்களில் பெரும்பாலானோருக்கு அறமில்லை என்று எழுதிவிடலாமா என்ன?
ஒரு நீதிபதி பணத்திற்கோ அதிகாரத்திற்கோ பணிந்து தீர்ப்பளித்ததாக நிரூபிக்கப்பட்டால், அவரது பதவி அவருக்குக் கேடயமாக இருக்கக் கூடாது. அவரிடம் கடுமையாகவே கேள்வி கேட்க வேண்டும். அதற்காக, நீதிபதிகளில் பெரும்பாலானோருக்கு நீதியும் நேர்மையும் தெரியாது என்று முடிவெழுதுவது நியாயமா?
ஒரு அரசியல் தலைவரின் வாகனப் பேரணிக்காகச் சாலையை மறித்து, அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவரைக்கூட நிறுத்திவைத்தால், அந்தத் தலைவரிடமும் ஏற்பாடு செய்தவர்களிடமும் கேள்வி கேட்க வேண்டும். உங்கள் பயணத்துக்கு மட்டும் நேரம் முக்கியம் காத்திருப்பவர்களின் நேரமும் உயிரும் முக்கியமில்லையா என்று கேட்க வேண்டும். அதற்காக எல்லாத் தலைவர்களையும் ஒரே மூட்டையாகக் கட்டிவிட முடியுமா?
நான் சொல்லுவது எல்லோருக்கும் ஒரே நியாயம் இருக்கட்டும் ஜெயமோகன் அவர்களே என்பதுதான்
மற்றவர்களும் தவறு செய்கிறார்கள் என்பதால் மருத்துவர்களின் தவறைப் பேசாதீர்கள் என்பது என் வாதமல்ல. தவறு செய்தவரைப் பொறுப்பேற்கச் சொல்லுங்கள். அவர் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் சேர்த்துத் தண்டனைத் தீர்ப்பு எழுதாதீர்கள் என்பதுதான் என் வாதம்.
அடுத்து, அமெரிக்காவுடன் ஒப்பிடும் விஷயத்துக்கும் வருவோம்.
அமெரிக்காவில் உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பாராட்டுங்கள். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒரு நாட்டில் நமக்குக் கிடைக்கும் வசதியான அனுபவத்தை மட்டும் வைத்து அந்த நாட்டையே மதிப்பிட்டுவிட முடியுமா.
அமெரிக்காவில் வாழும் இந்திய வாசகர்களின் பெரிய வீடுகளில் தங்கி, அவர்களுடைய விலையுயர்ந்த கார்களில் பயணம் செய்து, அவர்கள் அன்போடு அழைத்துச் செல்லும் இடங்களைப் பார்த்துவிட்டு வருகிற ஒரு பயணத்தை எடுத்துக் கொள்வோம். அதில் நல்ல உபசரிப்பு கிடைக்கலாம். வசதியாக இருக்கலாம். அந்த அனுபவத்தை ரசிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த வீடும் காரும் காட்டும் அமெரிக்கா மட்டும்தான் முழு அமெரிக்காவா?
விருந்தினராக நமக்குக் கிடைக்கும் கவனிப்புக்கும், அங்கே ஒரு சாதாரண மனிதனாக அன்றாடம் வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. நண்பர் காரில் அழைத்துச் செல்லும் பயணமும், நாமே பேருந்துக்காகவோ ரயிலுக்காகவோ காத்திருந்து செல்லும் பயணமும் ஒரே அனுபவமாக இருக்குமா? உங்கள் அமெரிக்கப் பயணங்கள் எல்லாமே இப்படித்தான் நடந்தன என்று நான் சொல்லவில்லை. ஆனால் எந்த நாட்டைப் பற்றிப் பேசினாலும், நாம் பார்த்த இடங்களையும் நம்மைச் சுற்றியிருந்த மனிதர்களையும் தாண்டி அந்த நாடு இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்றுதான் சொல்கிறேன்.
அங்கே நமக்குக் கிடைத்த நல்ல அனுபவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, இங்கே நமக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்துடன் ஒப்பிட்டால் என்ன முடிவு வரும்? அமெரிக்காவில் ஒரு ரயில் பயணத்தில் யாராவது அநாகரிகமாக நடந்துகொண்டால், அந்த மனிதரைக் கண்டிப்பீர்களா, அமெரிக்கர்களுக்கே பொது நாகரிகம் இல்லை என்பீர்களா? அந்த மனிதரைத்தானே கண்டிப்பீர்கள்? அதே நியாயத்தை இங்கேயும் கடைப்பிடியுங்கள்.
அமெரிக்காவைப் பாராட்ட வேண்டாம் என்பதல்ல என் கருத்து. இந்தியாவைக் குறை சொல்லக்கூடாது என்பதும் அல்ல. அங்கே ஒருவரின் தவறாகப் பார்க்கிற விஷயத்தை, இங்கே மட்டும் ஒரு கூட்டத்தின் குணமாக மாற்றி விடாதீர்கள் என்பதுதான்.
இதைப் புரிந்துகொள்ள இன்னும் எளிதான உதாரணம் இருக்கிறது, ஜெயமோகன். ஒரு எழுத்தாளர் பொதுவெளியில் ஆணவமாக நடந்துகொண்டால், எழுத்தாளர்களில் பெரும்பாலானோருக்கு அறம் பற்றிய புரிதல் இல்லை என்று ஒருவர் எழுதலாமா? அப்படி எழுதினால் அது எவ்வளவு அபத்தமான பொதுமைப்படுத்தல் என்று விளக்குவதற்கு உங்களிடம் வார்த்தைகள் இருக்காதா ஜெயமோகன்?
அந்த நியாயத்தைத்தான் மருத்துவர்களுக்கும் கேட்கிறேன். அவர்களுக்கென்று தனிச் சலுகை ஒன்றும் கேட்கவில்லை.
அந்த ரயிலில் இருந்தவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்றால், அவர்கள் செய்ததை எழுதுங்கள். அவர்கள் பேசியதைச் சொல்லுங்கள். வாசிப்பவர்களும் கண்டிக்கட்டும். அதற்காக, அந்த ரயிலில் ஏறியே இருக்காத ஒரு மருத்துவரும் உங்கள் அறச் சீற்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டுமா? இது என்ன நியாயம்? மருத்துவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நற்சான்றிதழ் கொடுக்க நான் வரவில்லை. தவறு செய்தவர்களைத் தொழிலின் பெயரால் காப்பாற்ற வேண்டிய அவசியமும் எனக்கில்லை. அதேபோல், தவறு செய்யாதவர்களைத் தொழிலின் பெயரால் குற்றவாளியாக்குவதையும் ஏற்க முடியாது.
பட்டப்படிப்பு நன்னடத்தைக்கான சான்றிதழ் அல்ல. ஒப்புக்கொள்கிறேன். சிலரின் மோசமான நடத்தை ஒரு தொழிலின் ஒட்டுமொத்த ஒழுக்கத்துக்கான சான்றும் அல்ல. இதையும் சேர்த்து ஒப்புக்கொள்வதில் என்ன சிரமம்?
மருத்துவர்கள் தங்களை மானுடத் தெய்வங்களாக நினைத்துக்கொள்கிறார்கள் என்று விமர்சிக்கிறீர்கள். யார் அப்படி நடந்துகொண்டார், எந்தச் செயலில் அந்த ஆணவம் வெளிப்பட்டது என்று சொல்லுங்கள். நானும் கேள்வி கேட்கிறேன். ஆனால் ஒரு தொழிலில் இருப்பவர்களின் மனதுக்குள் நுழைந்து பார்த்ததுபோல, அவர்களின் குணத்தையும் அறத்தையும் மொத்தமாக வரையறுத்துவிடாதீர்கள்.
மற்றவர்களின் ஆணவத்தைச் சுட்டிக்காட்டும்போது, அவர்களின் அறத்தையும் தகுதியையும் அளந்து தீர்ப்பளிக்கும் உயர்ந்த இடத்தில் நம்மை நாமே நிறுத்திக்கொள்ளவும் வேண்டாம். அறம் என்பது மற்றவர்களிடம் மட்டும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றல்ல. நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கும் அது பொருந்த வேண்டும் ஜெயமோகன்
மருத்துவரிடம் போகிற மனிதன் பரிவையும் மரியாதையையும் எதிர்பார்ப்பான். தன் வலியை அலட்சியப்படுத்தக் கூடாது என்று நினைப்பான். அந்த நம்பிக்கையை ஒரு மருத்துவர் உடைத்தால், அவரிடம் கடுமையாகக் கேள்வி கேட்பதில் தவறில்லை. அதேபோல், ஒரு எழுத்தாளரை வாசிக்கிற மனிதனும் அவரிடம் நியாயத்தை எதிர்பார்க்கலாம் அல்லவா? சிலரின் தவறுக்காக, சம்பந்தமே இல்லாதவர்களையும் சேர்த்து இழுத்துப் பேச மாட்டார் என்று எதிர்பார்க்கலாம் அல்லவா?
அந்த எதிர்பார்ப்பு மட்டும் அதிகப்படியானதா உங்கள் எழுத்தை வாசித்துவிட்டு ஒருவர், பொதுவெளியில் இப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்று நினைத்தால், உங்கள் விமர்சனம் அந்தத் தவறைச் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால், டாக்டர்கள் எல்லாம் இப்படித்தான் என்று நினைத்தால் அந்த முடிவுக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட முடியாது.
ஜெயமோகன் அவர்களே, உங்கள் கோபத்தின் காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் கோபம் சென்றடைந்த முடிவைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மருத்துவர்களைத் தெய்வங்களாக்க வேண்டாம். அதற்காகச் சிலரின் நடத்தையை வைத்து மற்றவர்களையும் கீழிறக்க வேண்டாம். தவறு செய்தவர் மருத்துவராக இருந்தாலும், பொறியாளராக இருந்தாலும், நீதிபதியாக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் அவரிடம் பொறுப்புக் கேளுங்கள்.
ஆனால் ஒரு தொழிலில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு அறமில்லை என்று தீர்ப்பு எழுதும்போது, அதை நிறுவும் பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது.
அறத்தைப் பற்றிப் பேசுகிற எழுத்தில், குறைந்தபட்சம் அந்த நியாயமாவது இருக்கட்டுமே!
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#ஜெயமோகன் #Jeyamohan #அறம் #மருத்துவர்கள் #தமிழ்எழுத்தாளர் #சமூகவிமர்சனம் #மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.