காலையில் நெல்லிக்காய் சாறு குடிச்சா சுகர் ஓடிப்போயிடுமா?
சுகர் வந்ததுமே நம்ம வீட்டில் டாக்டரை விட வேகமாக வேலைக்கு இறங்குறது யார் தெரியுமா?
நம்ம வீட்டுப் பூமர் ஆண்டிகளும் அங்கிள்களும்தான்!
நெல்லிக்காய் பயன்படுத்துங்க
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிங்க
அதுல தேன் சேர்த்துக்கோங்க
ஒரு வாரத்துல சுகர் கண்ட்ரோல் ஆயிடும்
மாத்திரை எல்லாம் அப்புறம் தேவையில்லை
இப்படி சொல்லுறவங்க பேசுறதைப் பார்த்தா, சர்க்கரை நோயாளிகளுக்காக மருத்துவமனைகள் வேண்டாம்போல!
முதல்ல ஒரு விஷயம் தெளிவாக இருக்கட்டும். நெல்லிக்காய் நல்லது. அதில் Vitamin C இருக்கு. Antioxidant இருக்கு. புளிப்பு சுவை இருக்கு. சாப்பாட்டுக்கு ஒரு நல்ல சேர்க்கை. ஆனா நெல்லிக்காய் சுகர் மருந்து கிடையாது.
ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டதும் pancreas குஷியாகி, இன்சுலின் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சிடும் என்றெல்லாம் கதை இல்லை.
சில ஆய்வுகளில் amla powder அல்லது extract எடுத்தவர்களுக்கு fasting sugar, cholesterol மாதிரியான அளவுகளில் ஓரளவு மாற்றம் தெரிந்திருக்கிறது. ஆனால் அதை பிடிச்சுட்டு, நெல்லிக்காய் சாப்பிடுங்க மாத்திரையைத் தூக்கி எறிங்கன்னு சொன்னா, அது ஹெல்த் அட்வைஸ் இல்லை ஆபத்தான அட்வைஸ்
நம்ம ஊர்ல ஒரு பழக்கம் இருக்கு. ஒரு காய் நல்லதுன்னு தெரிஞ்சா, அதை அப்படியே எல்லா வியாதிக்கும் மருந்தாக்கிடுவோம்.
முருங்கைக்காய் சாப்பிட்டால் ஆண்மை பெருகுமாம்.
மஞ்சள் சாப்பிட்டா கேன்சர் பிடி உஷாவை போல ஓடிடுமாம்.
இஞ்சி சாப்பிட்டா உடம்புல உள்ள சுகர் கரைஞ்சிடுமாம்.
இப்ப நெல்லிக்காய் வந்தா இன்சுலின் டாக்டர் ராமதாஸ் போல ஓய்வு எடுத்துக்குமாம்!
அட எல்லாமே நல்ல உணவுகள் தான். ஆனா எல்லாத்துக்கும் ஒரு லிமிட்இருக்கு. நெல்லிக்காயை எப்படி சாப்பிடலாம். ஒரு நாளுக்கு ஒரு சிறிய நெல்லிக்காய் போதும். பச்சையாகக் கடித்து சாப்பிடலாம். துவையல் செய்து சாப்பிடலாம். சாறாகக் குடித்தால் சர்க்கரை, தேன், வெல்லம் சேர்க்காதீங்க. ஊறுகாய் என்றால் உப்பும் எண்ணெய்யும் கணக்கில் வரும் என்பதை மறக்காதீங்க.
சுகர் இருக்கிறவங்க நெல்லிக்காய் சாப்பிடலாம். ஆனால் சர்க்கரை மாத்திரை, இன்சுலின் மருத்துவர் சொன்ன உணவு கட்டுப்பாடு, நடப்பு இவற்றுக்குப் பதிலாக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்
நெல்லிக்காய் சப்போர்ட் ப்ளையராக ஆக இருக்கலாம். மருந்து தான் கேப்டன் இந்த இரண்டு பேரையும் மாற்றிப் போட்டால் தான் பிரச்சினை.
புரியும்படி சொல்லனும் என்றால் நெல்லிக்காயை சாப்பிடுங்கள். ஆனா அதைச் சாப்பிட்டு மருந்தை நிறுத்தாதீர்கள். பழத்தை மதியுங்கள் வாட்ஸப் மருத்துவரை நம்பாதீர்கள்.
வாட்ஸப் மருத்துவம் நோயை முழுமையாக குணப்படுத்துவது உண்மைதான் ஆம் அது உங்களை மேல் உலகிற்கு அனுப்புவதன் மூலம் உங்களை நோய் இல்லாதவர்களாக ஆக்கிவிடும்
இல்ல வாட்ஸப்பில் மருத்துவ பட்டம் பெற்ற நம்ம வீட்டில இருக்கிற நமக்கு தெரிந்த இலவச டாக்டர்கள் சொல்வதைத்தான் நான் நம்புவேன் என்றால் சொல்லுங்கள். நான் உங்களுக்கு இப்பவே ஒரு இரங்கல் பதிவு ரெடி பண்ணிவிடுகின்றேன்!
70 லட்சம் பார்வைகளை கடந்த “அவர்கள்...உண்மைகள்” - என் சைலன்ட் ரீடர்ஸ்களுக்கு நன்றி https://avargal-unmaigal.blogspot.com/2026/10/70-70-million-views.html
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#நெல்லிக்காய் #DiabetesAwareness #அவர்கள்உண்மைகள் #HealthBenefit


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.