Friday, October 16, 2026

 சமூக வலைத்தளப் போலிப் பிம்பம்  (The Highlight Reel Illusion)
     

#சமூகவலைத்தளம் #போலிப்பிம்பம் #வாழ்க்கையின்உண்மை #ஒப்பிடாதே #மனதின்குரல் #HighlightReelIllusion #SocialMediaReality #அவர்கள்உண்மைகள் #மதுரைத்தமிழன்


தினமும் காலையில்  நாம்  கண் விழித்ததும் முதலில் பார்ப்பது  என்ன தெரியுமா? செல்போனைத்தான். அதில்   நமக்கு வந்த அழைப்புகள்,   நோட்டிஃபிகேஷன்ஸ் , அன்றைய செய்திகள். அதை தொடர்ந்து  நமது இணைய தள நண்பர்களில் ஒருவர் சுற்றுலா  தலங்களில் இருந்து எடுத்த போட்டோக்களை ஷேர் பண்ணி இருப்பார்கள் ,  யாரோ புது வீடு வாங்கி இருக்கும் செய்திகளை பகிர்ந்து இருப்பார்கள்   யாரோ  ஒருவர் குடும்பத்தோடு  ஹோட்டலில் சிரித்துக்  சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள். யாரோ  தங்கள் வேலையில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுகிறார்கள். இப்படி பலர் தங்களின் பெருமைகளை சமுக இணையதளங்களில் பதிவிட்டுக் கொண்டு இருப்பார்கள்.

நாம் அதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.  கொஞ்சம் மகிழ்ச்சி.  கொஞ்சம் பொறாமை.   கொஞ்சம் அவர்கள் வாழ்க்கை நல்லா போகுது என்ற எண்ணம்.

பிறகு திடீரென்று நம் வாழ்க்கையைப் பார்க்கிறோம்.   கடன் இருக்கிறது.   வேலைப் பாரம் இருக்கிறது.  வீட்டில் சில பிரச்சினைகள் இருக்கின்றன.  உடல் சோர்ந்திருக்கிறது.  மனசு குழப்பத்தில் இருக்கிறது. அப்போது மனதுக்குள் ஒரு கேள்வி வருகிறது. எல்லோரும் நல்லா இருக்கிறார்கள் நான் மட்டும்தான் இப்படி கஷ்டப்படுகிறேனோ என்று.....ஆனால் உண்மை என்ன தெரியுமா?

நாம் பார்ப்பது பிறர்  வாழ்க்கையின்  ஹைலைட் ரீல்ஸ் மட்டுமே .  ஆனால் நமக்குத் தெரிவது நம்முடைய முழு வாழ்க்கை மட்டுமே

அவர் சுற்றுலாக்கு சென்ற  படத்தைப் போட்டிருப்பார்.   ஆனால் அந்தப் பயணத்துக்காக எத்தனை மாதங்கள் சேமித்தார் என்பது நமக்கு தெரியாது.  அவள் குடும்பத்தோடு சிரிக்கும் படத்தைப் போட்டிருப்பாள்.   ஆனால் அந்தச் சிரிப்புக்குப் பின்னால் எத்தனை சண்டைகள், எத்தனை கண்ணீர்கள் இருந்தன என்பது தெரியாது. அவன் புது கார் வாங்கிய படத்தைப் போட்டிருப்பான்.  ஆனால் அந்தக் காருக்காக வாங்கிய கடன், இரவு முழுதும் தூங்காமல் யோசித்த மனசு அதை யாரும் பார்க்கவில்லை. அவர்  பிஸினெஸ்ஸில் வெற்றிப்  செய்தி படத்தைப் போட்டிருப்பார்.   ஆனால் அந்த வெற்றிக்கு முன் அவர் சந்தித்த தோல்விகள், நிராகரிப்புகள், அவமானங்கள்அவை எல்லாம் feed-ல் வராது.

சமூகவலைதளங்கள் ஒரு கண்ணாடி அல்ல. அது அப்படியே நமது வாழ்க்கையை பிரதிபலிக்க   அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிக் கூடம்.  அதில் நாம் எல்லாவற்றையும் போடுவதில்லை.   நல்ல படம் போடுகிறோம். நல்ல நாளைப்  பற்றிய தகவலை போடுகிறோம்.   நல்ல சிரிப்பைப் போடுகிறோம்.   .நல்ல வெற்றியைப் போடுகிறோம்.

கஷ்டங்களை நாம் பெரும்பாலும்  நமக்குள்ளேயே வைத்துக்கொள்கிறோம். சிலர் சொல்வார்கள், எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை என்று.  ஆனால் அவர்கள் அறைக்குள் நுழைந்ததும் முகம் மாறும்.  கைபேசியை மூடிவிட்டு, ஒரு நிமிடம் அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். 
 

அந்த அமைதிதான் அவர்களின் உண்மையான வாழ்க்கை.


சிலர் தினமும் வேலைக்குப் போகிறார்கள்.  முகத்தில் சிரிப்பு இருக்கும்.  ஆனால் மனசுக்குள் ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்.
இன்னும் எத்தனை நாள் இப்படி ஓடணும்  சிலர் இரவில் தூங்க முடியாமல் கைபேசியைப் பார்ப்பார்கள்.   பிறரின் மகிழ்ச்சியைப் பார்த்து, தன் வாழ்க்கையைக் குறைவாக உணர்வார்கள்.  அது அவர்களின் தவறு அல்ல.  நாம் எல்லாம் ஒரே மாதிரியான பிம்பங்களையே பார்க்கிறோம்.

ஆனால் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. ஒருவரின் ஒரு படம், அவரின் முழு வாழ்க்கை அல்ல. ஒருவரின் ஒரு ஸ்டேடஸ், அவரின் மனநிலை அல்ல.   ஒருவரின் ஒரு வெற்றி, அவரின் முழு பயணம் அல்ல. நாம் பார்க்கும் ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் ஒரு கதை இருக்கலாம்.   சில நேரம் அந்தக் கதை அழகாக இருக்கலாம்.   சில நேரம் அந்தக் கதை வலியாக இருக்கலாம்.

எனவே, பிறரின் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிடும்போது, நாம் ஒப்பிடுவது சரியாக இல்லை.

நாம் பார்க்கிறது  அவர்களின் சிறந்த நொடி.  நமக்குத் தெரிவது  நம்முடைய மோசமான நொடிகள். இந்த ஒப்பீட்டில் நாம் எப்போதும் தோற்போம்.

சில நேரம் நமக்கும் நல்ல நாட்கள் இருக்கின்றன. நாமும் சிரிக்கிறோம்.   நாமும் கொண்டாடுகிறோம்.  நாமும் சிறிய வெற்றிகளைப் பெறுகிறோம்.  ஆனால் அதை எல்லோருக்கும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

வாழ்க்கை என்பது லைக்ஸ்க்காக நடப்பதில்லை.  வாழ்க்கை என்பது வ்யூசுக்காக நடப்பதில்லை.   வாழ்க்கை என்பது நமக்குள் நடக்கிறது
அந்த அமைதியான காலையில் அந்தச் சிரிக்கும் குடும்பத்தில், அந்தச் சோர்வான மாலையில், அந்த மறைந்த கண்ணீரில்,  அந்தச் சிறிய வெற்றியில்  வாழ்க்கை இருக்கிறது. எனவே, அடுத்த முறை யாரோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போலப் படம் போட்டால்,   அதைப் பார்த்து நம்மைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

அவருக்கும் அவருடைய போராட்டம் இருக்கலாம்.  அவளுக்கும் அவளுடைய கண்ணீர் இருக்கலாம்.  நமக்கும் நம்முடைய பலம் இருக்கிறது.நாம் ஒருவரின் ஒரு பகுதியைப் பார்த்து,   நம் முழு வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடாது. ஏனென்றால்,  சமூகவலைதளங்கள் நமக்குக் காட்டுவது   மற்றவர்களிப் ஹைலைட்ஸ் ரீல்ஸ் ஆனால் நமக்குத் தெரிவது நம்முடைய முழு வாழ்க்கை.


இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும் இல்லையென்றால் கசந்துதான் போகும்


அன்புடன்
 மதுரைத்தமிழன்  

#சமூகவலைத்தளம் #போலிப்பிம்பம் #வாழ்க்கையின்உண்மை #ஒப்பிடாதே #மனதின்குரல் #HighlightReelIllusion #SocialMediaReality #அவர்கள்உண்மைகள் #மதுரைத்தமிழன் 

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.