Saturday, October 10, 2026

 போராட்டத்தைத் தடுக்க அரசே போக்குவரத்தை முடக்குவதா? என்ன ஒரு விந்தை !
    

#மதுரைத்தமிழன் #அரசியல்நையாண்டி #ஜனநாயகம் #மக்கள்உரிமை #போராட்டஉரிமை #டெல்லிபோராட்டம் #PoliticalSatire #RightToProtest #DelhiProtest #TamilCartoon


போராட்டம் என்றாலே அரசாங்கமும் காவல்துறையும் சொல்லும் வழக்கமான குற்றச்சாட்டு ஒன்று உண்டு. போராட்டக்காரர்கள் ரோட்டை மறிக்கிறார்கள், ரயிலை நிறுத்துகிறார்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்குகிறார்கள்.

ஆனால், இந்தத் தடவை டெல்லியில் என்ன நடந்தது தெரியுமா?

அமைதியாகப் போராட அழைப்பு விடுத்தவர்கள் ஒரு பக்கம். போராட்டக்காரர்கள் போக்குவரத்தை மறிப்பார்கள் என்று சொல்லிவிட்டு, ரயில்களை ரத்து செய்வதும் மெட்ரோ வாயில்களை மூடுவதும் அரசேதான். 250-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து. 45 மெட்ரோ நிலையங்களில் நுழைவு & வெளியேறும் வாயில்கள் மூடல்.

சுருக்கமாகச் சொன்னால், போராட்டக்காரர்கள் செய்வார்கள் என்று குற்றம்சாட்டப்படும் முடக்கல் வேலையை, இந்த முறை அரசே முன்னின்று செய்திருக்கிறது!

இதில் வேடிக்கை என்னவென்றால், ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணிக்க இருந்தவர்கள் எல்லோரும் போராட்டக்காரர்கள் அல்ல. மூடிய மெட்ரோ வாயில்களைப் பயன்படுத்த வேண்டியவர்கள் எல்லோரும் பேரணிக்குச் செல்பவர்களும் அல்ல.

அவர்களும் பொதுமக்கள்தானே?

போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடாது என்று சொல்லிவிட்டு, அந்த இடைஞ்சலை அரசே ஏற்படுத்தினால் அதை என்னவென்று சொல்வது?

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதுகாப்பதுதான் நோக்கமா? அல்லது மக்கள் ஒன்று கூடாமல் பார்த்துக்கொள்வதுதான் நோக்கமா?

இனி போக்குவரத்தை முடக்கியதாகப் போராட்டக்காரர்கள் மீது பழி போடக்கூடத் தேவையில்லை. அந்த வேலையையும் அரசே எடுத்துக்கொண்டுவிட்டது!


என்ன ஒரு விந்தை பாஸ்! இந்த விந்தை எல்லாம் சங்கிகளின் அபிமானத் தலைவர்களால்தான் செய்ய முடியும்,

இதற்கு மேல வேற என்னத்த சொல்லுறது



Stopping transportation yourself to prevent a protest? What a wonder!

Whenever there is a protest, there is a usual accusation made by the government and the police: "Protesters block roads, stop trains, and disrupt the normal life of the public!"

But do you know what happened in Delhi this time?

On one side were those who called for a peaceful protest. Claiming that protesters would block traffic, it is the government itself that cancelled trains and closed metro gates — over 250 trains cancelled; entry & exit gates closed at 45 metro stations.

In short, the "shutdown work" that is usually blamed on protesters has been taken up and done directly by the government this time!

The irony in all this is that not everyone travelling on those cancelled trains was a protester. Not everyone who needed those closed metro gates was going to the rally either.

Aren't they also the public?

Saying "the public should not be inconvenienced by the protest," and then if the government itself creates that very inconvenience, what is that called?

Is the goal to protect the normal life of the people? Or is it to make sure the people don't gather together?

From now on, there's no need to even blame the protesters for disrupting traffic. The government has taken over that job too!

What a wonder, boss! All these wonders can only be done by the favorite leaders of the Sanghis.

What else is there to say beyond this?

With regards,

Madurai Thamizhan

प्रदर्शन को रोकने के लिए खुद सरकार द्वारा परिवहन को ठप करना? क्या अजीब विडंबना है!

जब भी कोई प्रदर्शन होता है, तो सरकार और पुलिस द्वारा एक आम आरोप लगाया जाता है: "प्रदर्शनकारी सड़कें जाम करते हैं, ट्रेनें रोकते हैं, और आम जनता के सामान्य जीवन को बाधित करते हैं!"

लेकिन, इस बार दिल्ली में क्या हुआ, क्या आप जानते हैं?

एक तरफ वे लोग थे जिन्होंने शांतिपूर्ण प्रदर्शन का आह्वान किया था। यह कहते हुए कि प्रदर्शनकारी यातायात बाधित करेंगे, सरकार ने खुद ट्रेनें रद्द कर दीं और मेट्रो के गेट बंद कर दिए — 250 से अधिक ट्रेनें रद्द; 45 मेट्रो स्टेशनों के प्रवेश और निकास द्वार बंद।

संक्षेप में कहें तो, 'शटडाउन का काम' जिसका आमतौर पर प्रदर्शनकारियों पर आरोप लगाया जाता है, इस बार खुद सरकार ने आगे बढ़कर किया है!

इसमें मज़ेदार बात यह है कि उन रद्द की गई ट्रेनों में यात्रा करने वाले सभी लोग प्रदर्शनकारी नहीं थे। बंद किए गए मेट्रो गेटों का उपयोग करने वाले सभी लोग भी रैली में जाने वाले नहीं थे।

क्या वे भी आम जनता नहीं हैं?

"प्रदर्शन से आम जनता को असुविधा नहीं होनी चाहिए" यह कहने के बाद, यदि सरकार खुद वह असुविधा पैदा करती है, तो इसे क्या कहा जाएगा?

क्या उद्देश्य लोगों के सामान्य जीवन की रक्षा करना है? या यह सुनिश्चित करना है कि लोग एकत्र न हों?

अब से, यातायात बाधित करने के लिए प्रदर्शनकारियों पर आरोप लगाने की भी आवश्यकता नहीं है। सरकार ने वह काम भी अपने हाथ में ले लिया है!

क्या अजीब विडंबना है, बॉस! ये सारी विडंबनाएं केवल 'संघियों' के पसंदीदा नेताओं द्वारा ही की जा सकती हैं।

इसके अलावा और क्या कहें?

स्नेह सहित,

मदुरै तमिलन

அன்புடன்
மதுரைத்தமிழன்

 

 

#மதுரைத்தமிழன் #அரசியல்நையாண்டி #ஜனநாயகம் #மக்கள்உரிமை #போராட்டஉரிமை #டெல்லிபோராட்டம் #PoliticalSatire #RightToProtest #DelhiProtest #TamilCartoon 

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.