Friday, September 11, 2026

 ஸ்டாலின் ஜெயிலா, விஜய் லண்டனா?  பேருந்து கட்டணக் கொள்ளையும் நடுத்தர வர்க்கத்தின் கண்ணீரும்
   

#OmniBusFareHike #BusFareHike #TamilNaduNews #PublicVoice #MiddleClass #மக்கள்குரல் #நடுத்தரவர்க்கம் #ஆம்னிபேருந்து #பஸ்_கட்டண_க்கொள்ளை #AvargalUnmaigal #MaduraiTamizhan #அவர்கள்உண்மைகள் #மதுரைத்தமிழன்


ஸ்டாலின் மிசாவில் உருண்டாரா? 
இல்லை விஜய் லண்டனில் கொடி அசைத்தாரா?
இந்த நாடகத்தால் நம் பாக்கெட்டிலாவது சில்லறை விழுந்ததா என்ன?

ஆளுங்கட்சி என்ன, எதிர்க்கட்சி என்ன?
நமக்குத் தேவை நம் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுதானே தவிர, 
இவர்களின் அரசியல் சண்டைகள் இல்லை
நமக்குத் தேவை அன்றாட நிம்மதி!
ஆனால், இதைப் பற்றி எவன் கவலைப்படுகிறான்?

நேற்றைய செய்தி நம் நெஞ்சில் ஈட்டியாக பாய்கிறது 
பண்டிகைக் காலத்தைக் குறிவைத்து,
வண்டி பழுதடைந்துவிட்டது என்று பச்சைப் பொய் சொல்லி,
ஏழை எளியவன் முன்கூட்டியே ரிசர்வ் செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்கிறார்கள் ஆம்னி பேருந்து முதலாளிகள்!

அதே சீட்டை நான்கு மடங்கு கூடுதல் விலைக்கு விற்று,
மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார்கள்!
சென்னை - மதுரைக்குப் பயணிக்க ₹4,000 முதல் ₹4,900 வரை கட்டணக் கொள்ளை!
நாய் போல உழைத்து, நரம்புத் தளர்ந்து சம்பாதிக்கும் காசு,
கண் முன்னாலேயே இப்படிப் பகற்கொள்ளை அடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டும்,
நீங்கள் மௌனமாக இருந்தால்...
உங்களை விடப் பெரிய மடையர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது

பொங்கல் திருவிழா முடியும் வரை இந்த விலையேற்றத்தின் சுமை தொடரும்.அதற்குள் உங்களை நிரந்தரக் கடனாளி ஆக்கிவிடும் இந்தச்  கொள்ளைக் கூட்டம் 

இதை எதிர்த்துத் தட்டிக் கேட்கத் திராணி இல்லாமல்,
அவர் மிசாவில் போனாரா, இவர் எங்கு போனார் என்று வாதம் பேசி என்ன பயன். இந்த விவாதச் சேறுவினால் நமக்கு என்ன பயன்

மக்களே! இனியும் அடிமைகளாய் முட்டாள்களா கொத்துஸ்களாக சங்கிகளாக தற்குறிகளாக முடங்கிக் கிடவாதீர்கள்!
டெல்லி மாணவர்கள் விழிப்புடன் போராடியது போல,
இந்தக் கொள்ளைக் கட்டண உயர்வை எதிர்த்து நீங்களும் குரல் எழுப்புங்கள்!
இன்றைக்கு நீங்கள் தட்டிக் கேட்காவிட்டால்,
நாளை உங்கள் உழைப்பும் வியர்வையும் இந்த மண்ணில் அடையாளமே இல்லாமல் காணாமல் போய்விடும்!

அன்புடன்
 மதுரைத்தமிழன்
(உங்கள் வியர்வைக்கு விலை கேட்கும் ஒரு குரல்)

 

#OmniBusFareHike #BusFareHike #TamilNaduNews #PublicVoice #MiddleClass #மக்கள்குரல் #நடுத்தரவர்க்கம் #ஆம்னிபேருந்து #பஸ்_கட்டண_க்கொள்ளை #AvargalUnmaigal #MaduraiTamizhan #அவர்கள்உண்மைகள் #மதுரைத்தமிழன் 


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.