Thursday, September 17, 2026

 மாவு அரைக்க நேரமில்ல... ரீல்ஸ் போட நேரமிருக்கு!  
 ஒரு ‘இன்ஸ்டன்ட்’ பக்திப் பரிதாபம்!

     

தமிழ் நையாண்டி கட்டுரை  சமூக ஊடக மோகம்  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் நையாண்டி  ரெடிமேட் பக்தி  பண்டிகை கால சமூக மாற்றம்  விநாயகர் சதுர்த்தி நையாண்டி  கிருஷ்ண ஜெயந்தி நைவேத்தியம்  ஸ்விக்கி நைவேத்தியம்  தமிழ் சமூக விமர்சனம்  மதுரைத்தமிழன் கட்டுரை  Tamil satire article  Instagram reels addiction Tamil  Tamil festival satire  Social media addiction Tamil


ஒரு காலத்தில் பண்டிகை என்றாலே வீட்டில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே பரபரப்பு தொடங்கிவிடும். கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது என்றால் அரிசி ஊற வைப்பது, மாவு அரைப்பது, சீடை சுடுவது, அவல் தயாரிப்பது, வெண்ணெய் வைப்பது என்று வீடே ஒரு சிறு தொழிற்சாலை போலவே மாறிவிடும்

விநாயகர் சதுர்த்தி என்றால் இன்னும் கேட்கவே வேண்டாம். கொழுக்கட்டைக்கு மாவு பிசைவது, பூரணம் செய்வது, எந்தக் கொழுக்கட்டை உடையாமல் வேகும் என்று கவலைப்படுவது, பூஜைச் சாமான் வாங்குவது என்று அம்மாக்களும் பாட்டிகளும் ஓடிக்கொண்டிருப்பார்கள்.

அந்தக் காலத்தில் பண்டிகை என்பது ஒரு நாள் பூஜை மட்டும் இல்லை. வீட்டில் அனைவரும் சேர்ந்து செய்த ஒரு சிறிய கொண்டாட்டம்.

நான் மதுரையில் இருந்தபோது இதையெல்லாம் பார்த்திருக்கிறேன். மாவு அரைக்கும் சத்தம், அடுப்பில் சீடை பொரியும் வாசனை, பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கு இதெல்லாம் சேர்ந்து தான் பண்டிகை வந்துவிட்டது என்று மனசுக்குத் தோன்றும்.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

கிருஷ்ணருக்கு சீடை செய்வதற்கு முன், கிருஷ்ணர் பிறந்தார் என்று ஒரு ரீல்ஸ் போட வேண்டும். அதற்கும் சாதாரண மியூசிக் போதாது. பக்தி பாடலா, சினிமா பாடலா, டிரெண்டிங் பீட்டா என்று  மணடையை போட்டு உடைத்து  ஒரு ரிசர்ச்சே நடத்த வேண்டும்.

விநாயகருக்கு கொழுக்கட்டை உருட்டுவதற்கு முன், Happy Vinayagar Chaturthi என்று ஸ்டேட்டஸ் போட எந்தப் படம் நல்லா வரும் என்று முடிவு செய்ய வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது அடுத்த வேலை. ஆனால் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கு எமோஜி போடுவது மட்டும் முதல் வேலை!

முன்பெல்லாம் வீட்டில், நைவேத்தியம் தயாரா என்று கேட்பார்கள். இப்போது, ஸ்விக்கியில் ஆர்டர் போட்டாச்சா என்பதுதான் முக்கியமான கேள்வி.

கிருஷ்ண ஜெயந்திக்கு சீடை, முறுக்கு, அவல் எல்லாம் ஹோட்டல் பார்சலில் வருகிறது. விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டையும் பூரணமும் கடையிலிருந்து அழகாகப் பேக் செய்யப்பட்டு வருகிறது. வீட்டில் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று பார்சலைத் திறந்து தட்டில் அடுக்குவது மட்டும்தான்!

சாமியும் ரெடிமேட்.   நைவேத்தியமும் ரெடிமேட்.   பக்திக்கு மட்டும் Wi-Fi இருந்தால் போதும்!

பூஜை நேரத்தில் ஐந்து நிமிடம் மனதை அமைதியாக வைத்திருக்க முடியாது. ஆனால் யாரோ ஒருவர்  வடை சாம்பாருக்கு சாம்பார் ஊற்றும் ரீல்ஸையோ அல்லது இஸ்லாமியர் வீட்டு பிரியாணி என்ற ரீல்ஸை 2 நாற்பது நிமிடம் பார்த்துக்கொண்டே இருக்க முடியும். கோவிலுக்குச் சென்று இறைவனை மனதார வணங்க நேரமில்லை ஆனால் கோவில் தரிசனம் என்ற பெயரில் யூடியூப் வீடியோ பார்க்க நேரமிருக்கிறது.

கையில் ஜபமாலை இல்லை. அதற்கு பதிலாக செல்போன் இருக்கிறது. அதில் தினமும் ஆயிரம் முறை ஸ்கிரோல் செய்கிறோம்.

அதுவும் ஒரு வகை ஜபம்தான் போல!

இந்தக் காலத்திலாவது கடைகளில் வாங்கியாவது சாமிக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். வருங்கலாத்தில் இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் போட்டாலே பக்தனாகிவிடலாம் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

கொழுக்கட்டை ஆர்டர் செய்தாச்சு.    ஸ்டோரி போட்டாச்சு.  ரீல்ஸுக்கும் நல்ல views வந்தாச்சு. அப்புறம் பூஜை எதுக்கு?

நைவேத்தியம் பார்சல்.  
பக்தி ஸ்டோரி.  
மனசாட்சி மட்டும் இன்னும் “லோடிங்…”ல இருக்கிறது!

டிஸ்கி : 

நம்ம மனசுல இருக்கிற சுயநலத்தையும், இந்த இன்ஸ்டன்ட் உலகத்தோட ஓட்டத்தையும் கொஞ்சம் நிறுத்திட்டு யோசிச்சாலே போதும்... மனுஷனும் உயர்ந்த நிலைக்குப் போகலாம். ஆனா, எல்லாத்தையுமே ரெடிமேடா மாத்திக்கிட்டே போனா, கடைசில மனுஷனும் ஒரு மிஷினாத்தான் மாறிப்போவான்!

தமிழக அரசியல்: மாநகராட்சிப் பொதுக் கழிப்பறையை மிஞ்சும் நாற்றம்!  https://avargal-unmaigal.blogspot.com/2026/09/tamil-nadu-politics-political-satire.html



—ன்புடன்
மதுரைத்தமிழன்


#மாவுஅரைக்கநேரமில்ல #ரீல்ஸ்போடநேரமிருக்கு #இன்ஸ்டன்ட்பக்தி #தமிழ்நையாண்டி #சமூகநையாண்டி #தமிழ்கட்டுரை #தமிழ்பதிவு #விநாயகர்சதுர்த்தி #கிருஷ்ணஜெயந்தி #TamilSatire #TamilContent #InstagramAddiction #ReelsAddiction #மதுரைத்தமிழன் #AvargalUnmaigal


Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.