இப்போது தமிழகத்தில் நடக்கிற அரசியலைப் பார்க்கும் எவருடைய வாயிலிருந்தும் தானாக வரும் ஒரே வார்த்தை ச்சேய்ய்ய்ய்!
இது வெறும் கோப வார்த்தை இல்லை. நம்மை ஓட்டுப் போடும் இயந்திரங்களாக மட்டும் நினைத்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை வந்து ஏமாற்றிவிட்டுப் போகும் அரசியல்வாதிகள் மீது சாதாரண மக்களுக்கு உள்ள குமுறல்!
பராமரிப்பே இல்லாமல் நாற்றமடித்து, உள்ளே கால் வைக்கவே அருவருப்பாக இருக்கும் மாநகராட்சிப் பொதுக் கழிப்பறையைக் கடக்கும்போது மூக்கைப் பொத்திக்கொண்டு ஓடுவோமே அப்படித்தான் இன்றைய தமிழக அரசியலும் இருக்கிறது.
மக்கள் நலன் ,சேவை ,அறம் ,நேர்மை என்று மேடையில் வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் மக்கள் மின்தடையால் தவிக்கும்போது இவர்களுக்குக் கண் திறக்காது. உடைந்த சாலையில் குழந்தைகள் தடுமாறும்போது காதும் கேட்காது. மருத்துவமனை வாசலில் ஏழை மருந்துக்காகக் காத்திருந்தாலும் கவலையில்லை. பஸ் கட்டண உயர்வால் சாமானியன் சேமிப்பு கணக்கு குலைந்தாலும் இவர்களுக்கு அது செய்தி அல்ல. ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் திடீரென மக்கள் மீது பாசம் பொங்கும்!
பல அரசியல் தலைவர்களுக்கு கொள்கை மீது அக்கறையில்லை. மக்களின் கண்ணீர் மீது அக்கறையில்லை. இருக்கிற ஒரே அக்கறை பதவி, பணம், அதிகாரம்! காலை ஒரு கட்சியின் கொடியைப் பிடித்தவன், மாலை இன்னொரு கட்சித் தலைவரின் கையைப் பிடிப்பான். நேற்று வரை இவங்க நாட்டைக் கெடுத்துட்டாங்க என்று கத்தினவன், இன்று அதே கட்சியின் மேடையில் நின்று என் உயிர் தலைவர் என்று முழங்குவான். இதெல்லாம் ஏன் மக்கள் நலனுக்காகவா இல்லவே இல்லை.
தன் பதவியைப் பாதுகாக்கவும், குடும்பத்தை வளப்படுத்தவும், அதிகாரத்தை கைப்பற்றவும் தான். தன்மானம், வெட்கம், ரோஷம் எல்லாவற்றையும் பதவிக்காக நாய்க்கு வீசி எறிந்துவிட்டு, மக்களிடம் மட்டும் நாங்கள் உங்களுக்காக உழைக்கிறோம் என்று நாடகம் ஆடுகிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா?
ஐந்தாண்டு காலம் மக்களை கண்டுகொள்ள மாட்டார்கள். எந்த பிரச்சனை என்றாலும் மனு கொடு. சாலை உடைந்தால் காத்திரு. அரசு மருத்துவமனையில் வசதி இல்லை என்றால் தனியார் மருத்துவமனைகள்தான் இருக்கிறதே அங்கே போ ,வேறு வழி பார்த்துக்கொள். வேலை இல்லை என்றால் வீட்டிலேயே உட்காரு.
ஆனால் தேர்தல் தேதி அறிவித்த உடனே மட்டும் இந்தக் கூட்டத்துக்கு மக்கள் நினைவுக்கு வந்துவிடுவார்கள்.
வீடு வீடாக வருவார்கள். கையைப் பிடிப்பார்கள். குழந்தையைத் தூக்குவார்கள். பெரியவர்களின் காலில் விழுவார்கள். இந்த முறை நிச்சயம் மாற்றம் என்று சத்தியம் செய்வார்கள். மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள் நமக்கு ஏமாறத்தையே தொடர்ந்து தருகிறார்கள்
பராமரிப்பே இல்லாத பொதுக் கழிப்பறையில் ஒரு நாள் பினாயில் ஊற்றிவிட்டால் அது அரண்மனை ஆகிவிடுமா அதேபோல, ஐந்தாண்டு கால அலட்சியத்தை தேர்தல் நேரத்து பேனர், போஸ்டர், சினிமாப் பாடல், மேடை, வாக்குறுதி, விளம்பரம் எல்லாம் சேர்ந்து மறைத்துவிட முடியாது. தேர்தல் முடிந்ததும் அந்தப் பாசம் எங்கே போகும்?
வாக்காளரின் விரலில் போட்ட மை காய்வதற்குள், மக்கள் மீண்டும் அலுவலக வாசலில் மனுவோடு நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
இது அரசியல் இல்லை மக்களை ஏமாற்றும் வியாபாரம் திறமையாக ஏமாற்றுபவன் ஆட்சிக் கட்டிலில் உட்காருகிறான்
மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கென்று திட்டம் அறிவிப்பார்கள். அதற்கு விழா எடுப்பார்கள். விளம்பரப் பலகை வைப்பார்கள். புகைப்படம் எடுப்பார்கள். சமூக ஊடகத்தில் சாதனை என்று பதிவிடுவார்கள். ஆனால் திட்டம் எப்போது முடியும் மக்கள் பிரச்சினை எப்போது தீரும் என்று கேட்டால் மட்டும் பதில் இருக்காது. அல்லது கஜானா காலி மக்கள் திட்டங்களுக்கு தேவையான அளவிற்கு கஜானாவில் பணம் இல்லை என்று சொல்லுபவர்கள் தங்கள் வசதிக்கான திட்டங்களுக்கு லட்சக் கணக்கில் அளவே இல்லாமல் ஒதுக்கீடு செய்வார்கள். நதி நீரை திறந்துவிட வீணாக ஏழு கோடிக்கு மேல் செலவிடுவார்கள்.. சட்டசபைக்கு வந்து மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு பதிலாக அங்கு தலைவர்கள் செய்யும் ஆக்ஷனுக்கு மேஜையை தட்ட வரபவர்களுக்கு கார் வாங்கி கொடுக்க பணம் இருக்கும். மாற்றம் வரும் என்பார்கள். ஆனால் அந்த மாற்றம் மக்களின் வாழ்க்கையில் வராது வாக்குறுதி சொன்னவர்களின் வாழ்க்கையில்தான் வசதியாக வந்து உட்காரும். மக்களுக்கு மட்டும் ஏமாற்றம் பழையபடியே தொடரும்.
இதுதான் இன்றைய அரசியலின் உண்மை முகம். மேடையில் மக்கள் எஜமானர்கள். தேர்தலுக்குப் பிறகு அதே மக்கள் மனு எண், டோக்கன் எண், புகார் எண்!
நாம் கைதட்டிக் கொண்டிருக்கும் வரை இவர்கள் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். நாம் கேள்வி கேட்க ஆரம்பித்தால் மட்டும்தான் இவர்களுக்குப் பயம் வரும். ஆனால் நாம் எங்கே கேள்விகள் கேட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து கொண்டு நம்மை மறைமுகமாக அதில் ஆழ்த்திவிடுவார்கள். இப்பொது தமிழகத்தில் நடப்பது அப்படித்தான் இருக்கிறது. மக்களுக்கான பிரச்சனைகளை ஆள்பவர்கள் மட்டுமின்றி எதிர்கட்சிகளும் பேசாமல் ஒருவருக்கொருவர் தரக் குறையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் வீசும் அந்தச் சேற்றுக்குள் நாம் இறங்கிவிடக் கூடாது. யார் யாரை திட்டினார்கள் என்பதைப் பார்த்து கைதட்டாமல், நம் ஊரின் பிரச்சினைக்கு யார் பதில் சொல்கிறார் என்று தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.
எங்கள் தெருவுக்கு தண்ணீர் எப்போது வரும்? சொன்ன சாலை எப்போது போடப்படும்? அறிவித்த வேலைவாய்ப்புகள் எங்கே?
எங்கள் வரிப்பணத்துக்கு கணக்கு எங்கே?
இந்தக் கேள்விகளை ஒவ்வொரு மக்களும் கேட்க வேண்டும். தலைவரின் பேச்சுக்கு கைதட்டுவது எளிது. ஆனால் நம் பகுதி பிரச்சினைக்குப் பதில் கேட்பதுதான் உண்மையான அரசியல்.
அரசியல் ஒரு சாக்கடை என்று இதற்கு முன்பு பெரியவர்கள் சொன்னார்கள். ஆனால், அதைவிடக் கேவலமான, அருவருப்பான ஒரு நிலைக்கு இன்று அரசியல் களம் தரம் தாழ்ந்துவிட்டது. எதைப் பார்த்தாலும் வெறுப்பும் கோபமும் தான் மிஞ்சுகிறது.
இந்தத் தரம் கெட்ட, நாற்றம் பிடித்த அரசியலை மாற்ற வேண்டிய கடமை வாக்களிக்கும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆனால், மாறப்போவது எப்போது விளம்பர மோகத்திலும், இலவச வாக்குறுதிகளிலும் மயங்கித் தொலைக்கும் வரை இந்த நாற்றம் நம்மைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கும்!
அன்புடன்
மதுரைத்தமிழன்
(பொதுக் கழிப்பறையில் சிக்கிக் கொண்ட ஒரு சாமான்யதமிழனின் குரல் இது )
#TamilNaduPolitics #TamilPolitics #தமிழகஅரசியல் #தமிழ்நாடுஅரசியல் #TamilPoliticalSatire #PoliticalSatire #TamilSatire #TamilContentCreator #TamilWriter #TamilBlog #TamilInstagram #தமிழ்சமூகம் #மக்களின்குரல் #வாக்காளரின்குரல் #கேள்விகேட்போம் #PublicVoice #ElectionPromises #Accountability #TamilReels #TamilPost

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.