என் இன்பாக்ஸில் வந்து உதயநிதி பேச்சு பற்றி இன்னும் ஏன் எழுதவில்லை என்று கேட்டவர்களுக்கான என் பதில் இது .எனக்கு முதலில் என் சொந்த வாழ்வாதாரமும் வேலைகளும்தான் முக்கியம். அதற்கான உழைப்பை நான் கொடுத்துவிட்டு, மீதமிருக்கும் நேரத்தில்தான் இங்கே வந்து பொழுதுபோக்காகவும், என் கருத்தை பகிர்வதற்காகவும் எழுதுகிறேன். எல்லாவற்றுக்கும் உடனே கருத்து சொல்ல நான் எந்த அரசியல் கட்சித் தலைவனும் அல்ல. சமூக ஆர்வலனும் அல்ல.
அப்படியிருந்தும், இப்போதுதான் எனக்கு நேரம் கிடைத்திருப்பதால் இந்த விவகாரத்தில் என் நிலையை சொல்லிவிடுகின்றேன்.
உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பேசினாலும் சரி, ஒற்றை அர்த்தத்தில் பேசினாலும் சரி ஒரு பெண்ணைப் பற்றி பொதுவெளியில் இழிவாகப் பேசியிருந்தால், அது எந்தத் தரப்பிலிருந்து வந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியதுதான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவரின் பேச்சில் குறைந்தபட்சக் கண்ணியம் இருக்க வேண்டும். அவரும் நம்மைப் போல ஒரு மனிதர்தான் கோபமும் உணர்ச்சியும் வரத்தான் செய்யும். ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்திப் கண்ணியமாகப் பேசுவதுதான் ஒரு தலைவருக்கான அடையாளம்.
கட்சிக்காரர்கள் கூட்டத்தில் திரிஷா... திரிஷா... என்று கோஷம் எழுப்பத் தொடங்கிய உடனே இது திரிஷாவுக்கு எதிரான கூட்டமல்ல ஆளும் அரசிற்க்கு எதிரான கூட்டம் என்று அவர் அங்கேயே நிறுத்தியிருக்க வேண்டும். அதுதான் சரியான இடைமறிப்பு. அதைத்தான் பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை செய்யாமல், பிறர் செய்த தவறை காட்டி தன் பக்கத் தவறை நியாயப்படுத்த முயல்வது சரியல்ல.
அப்படி நான் சொல்வதால் அவர்கள் அசிங்கமாகப் பேசவில்லையா அதைக் கண்டிக்காமல் இப்போது எங்களைக் கண்டிக்க வருகிறீர்களா என்று கேட்பவர்களுக்கு நான் சொல்வது இதுதான். மாற்றுக் கட்சிக்காரன் தவறு செய்தான் என்பதற்காக நீங்களும் அதே தவறைச் செய்யலாமா அதுதான் இன்று அரசியலை சின்னதாக்கும் விஷயம். அதுதான் மக்களையும் சோர்வடைய வைக்கும் விஷயம்.
இன்றைக்கு இந்த மாதிரி விஷயங்களில் ஒரு பழக்கம் வந்துவிட்டது யார் தவறு செய்தாலும், அவன் செய்தான், இவன் செய்தான்”என்று திருப்பித் திருப்பி பேசுவது. ஆனால் அந்த வாதம் தவறைச் சரி ஆக்கிவிடாது. தவறு தவறுதான். அதைத் தடுக்க வேண்டிய இடத்தில் தடுக்க வேண்டும். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்க வேண்டும்.
தற்காலிக அரசியல் லாபத்துக்காகவும், கூட்டத்தை கவர்வதற்காகவும், இப்படிப் பட்ட அடிப்படை கண்ணியமே புறக்கணிக்கப்படுவது கவலைக்குரியது. அரசியல் வெற்றியை விட மனிதக் கண்ணியம் மேலே இருக்கணும். அந்த அளவுக்குக் கூட நம்மிடம் கட்டுப்பாடு இல்லையென்றால், பிறகு பொதுவாழ்வில் மீதமிருப்பது சத்தம்தான் மரியாதை அல்ல.
கட்சிப் பாகுபாடுகளைத் தாண்டி, கண்ணியம் எப்போது திரும்ப வரும் என்பதுதான் இன்றைய உண்மையான கேள்வி.
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : பேசியது தவறா இல்லையா என்பதற்காக வழக்கைப் போட்டு , அதில் தவறு இருந்தால் தண்டிக்காலமே தவிர கைது செய்து அலைக் கழித்தது அதைவிட மிக தவறு
முப்பதுகளைத் தாண்டிய என் பிரியமானவளே & பிரியமானவர்களே... https://avargal-unmaigal.blogspot.com/2026/08/thirtyplus-liferealities.html
#UdhayanidhiStalin ,#Trisha ,#PoliticalDecency ,#TamilNaduPolitics, #HumanDignity, #TNPolitics ,#Whataboutism ,#PoliticalCommentary ,#TamilPolitics, #உதயநிதிஸ்டாலின் #திரிஷா #அரசியல்கண்ணியம் #தமிழ்அரசியல் #மனிதக்கண்ணியம் #அரசியல்செய்திகள் #தமிழகஅரசியல் #சமூகவலைத்தளம்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.