சென்னைக்கு புதிய விமான நிலையம் தேவையா என்றால் இல்லை என்பேன். காரணம் பெங்களுர், ஹைதராபாத் போன்ற இடங்களில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப நிலையங்கள் இருக்கும் போது நமக்கு எதற்கு வீண் செலவு. செலவை குறைப்போம் வரவை பெருக்குவோம் என்று விஜய்யின் அம்மா கற்று தந்த பாடம் .அம்மா சொல் தட்டாத பிள்ளைதான் விஜய்.
பரந்தூரில் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டதால் தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்படுகிறது. அப்ப காவிரி நீர் பிரச்சனையால் பாதிக்கப்படும் விவசாய நிலமை? அது முந்தைய அரசின் செயல்பாட்டு திட்டத்தின் குறை அவ்வளவுதான்
மின்சார கட்டண உயர்வால் மின்சார துறை வளர்ச்சி அடைகின்றன. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மின்சார துறையில் நல்ல வளர்ச்சியை செய்தது தவெக அரசு. # கட்சியின் சாதனை
மக்கள் மின்சார கட்டணம் உயர்ந்திருக்கிறது என்று குற்றம் சொல்லக் கூடாது. கட்டணம் உயரும் போது அதற்கு ஏற்றவாறு உழைத்து தங்களின் வருமானத்தை உயர்த்தி கொண்டால் கட்டண சுமைகள் தெரியாது.
விலைவாசி உயர்வுக்கு நாங்கள்தான் காரணம் என்று மக்கள் குற்றம் சொல்கிறார்கள். ஆனால் மக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை அவர்கள் யோசிப்பதே இல்லை.
அன்றாடப் பொருட்களின் விலை உயர்ந்தால், மக்கள் வாங்கும் அளவு குறையும். உணவின் அளவும் குறையும். உடல் எடையும் குறையும்.
பெட்ரோல் விலை உயர்ந்தால் வாகனச் செலவு அதிகரிக்கும். மக்கள் அவசியமான இடங்களுக்கு மட்டும் வாகனத்தைப் பயன்படுத்துவார்கள். மற்ற இடங்களுக்கு நடந்து செல்வார்கள். அதனால் உடல் நலமும் மேம்படும்.
இவ்வளவு நன்மைகள் இருக்கும்போது, விலைவாசி உயர்வை மட்டும் ஏன் குறையாகப் பார்க்க வேண்டும்?
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்பள உயர்வு வேண்டுமா நண்பா, நண்பிகளே அரசு கொடுக்கும் சம்பளம் என்பது நீங்கள் செய்யும் வேலையின் அளவிற்கு மற்றும் தகுதிக்கு மட்டும்தானே தவிர உங்களின் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்வதற்கு அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
கடைசியாக தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
அரசின் வேலை மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது இல்லை. பிரச்சினையோடு வாழும் திறனை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதுதான்.
அதுதான் புதிய அரசியல். தவெக அரசியல் !
அதுதான் “மக்களே உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்” ஆட்சி.
ஜெய் த்ரிஷா!! ஜெய ஜெய த்ரிஷா !!
அதிக View பெற்ற பதிவு
குஜராத்துக்கு மறு ஆய்வு; அமெரிக்காவுக்கு விஜய் ஆய்வு!
இது ஜோதிடம் அல்ல வருங்கால வரலாறு! https://avargal-unmaigal.blogspot.com/2026/08/vijay-tvk-tamilnadupolitics.html
இதை படித்தீர்களா?? படிக்காதவர்கள் படிக்க:

ஈரானை மிரட்டுவது எளிது. ஆனால் மடக்குவது அவ்வளவு எளிதல்ல. https://avargal-unmaigal.blogspot.com/2026/08/america-iran-war-analysis.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
#TVK #TamilNaduPolitics #ThalapathyVijay #PoliticalSatire #தவெக #தமிழகவெற்றிகழகம் #விஜய் #அரசியல்நையாண்டி #TamilSatire #TNPolitics #ViralPost #அவர்கள்உண்மைகள்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.