அமெரிக்கா போனால் வாழ்க்கை செட்டில் - 1.75 லட்சம் விசாக்கள் ரத்து .உறைந்துபோன கனவுகள்!
அமெரிக்கா போனால் வாழ்க்கை செட்டில் இந்த ஒரு வரிக்காகத்தான் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்கின. எத்தனை பெற்றோர் நகை அடமானம் வைத்தார்கள். எத்தனை இளைஞர்கள் தூக்கமில்லாமல் TOEFL மற்றும் IELTS படிப்பு, விசா இண்டர்வ்யூ , Consultancy என்று ஓடினார்கள்.
ஆனால் இன்று அந்த அமெரிக்கக் கனவின் பின்னால் ஒரு புதிய பயம் நின்றிருக்கிறது. 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து.
இங்கு கவனிக்க வேண்டியது டிரம்பின் zero tolerance கொள்கைதான். சகிப்புத்தன்மைக்கே இடமில்லை என்ற இந்தச் சட்டத்தின் கீழ், விசா வைத்திருப்பவர்களின் பின்னணிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது முதல், சாதாரண மோதல்கள், சமூக வலைதளங்களில் வெளிப்படும் வன்முறைப் பதிவுகள் வரை அனைத்துமே இப்போது நுண்ணிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
ஒரு தவறு
ஒரு சட்டப் பிரச்சினை
ஒரு careless social media post
சில நேரங்களில் ஒரு drunken driving case கூட
பல ஆண்டுகள் கட்டிய வாழ்க்கையை ஒரே நொடியில் கீழே தள்ளிவிடக் கூடிய நிலை.
அமெரிக்கா இன்னும் வாய்ப்புகளின் நாடாக இருக்கலாம். ஆனால் இன்று அது Rules First என்ற கொள்கையில் இயங்கும் நாடாக மாறிவிட்டது.
வெளிநாடு என்பது Instagram reels-ல் தெரியும் luxury life மட்டும் இல்லை. ஒவ்வொரு நாளும் கண்காணிக்கப்படும், சட்டங்களால் கட்டுப்படுத்தப்படும் வாழ்க்கை.
ஒருகாலத்தில் அமெரிக்கா போனால் வாழ்க்கை மாறும் என்றார்கள். ஆனால் இப்போது ஒரு தவறு செய்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதே பலரின் அமைதியான பயமாக மாறியுள்ளது.
முக்கியமாக, எந்த நாட்டவர் என்ற புள்ளிவிவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல், ஒட்டுமொத்தமாக இந்த நடவடிக்கையை அமெரிக்கா அரசு கையாள்வது ஒருவித அமைதியான எச்சரிக்கையை உலகிற்குச் சொல்கிறது
கடன் தந்தவன் கண் விழிக்கையில்... செத்துச் செத்துப் பிழைக்கும் சாமானியனின் கதை! https://avargal-unmaigal.blogspot.com/2026/08/debtstruggles-lifereality-mentalstress.html
இந்த பதிவை படிக்கும் போகும் உங்களில் பலருக்கு இந்த வலி நிச்சயம் பரிச்சயமானதாக இருக்கும். ஆனால், யாருமே இதை வெளிப்படையாகப் பேசுவதில்லை. அமைதியாக யோசித்துச் சொல்லுங்கள்... இந்த வலியில் இருந்து வெளியே வர உங்களுக்கு எது பலமாக இருந்தது? அப்படிப்பட்ட அனுபவங்கள் இருந்தால் தயங்காமல் கீழே பகிருங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

#USVisaCancellation #AmericaDream #TrumpAdministration #USImmigration #ZeroTolerance #GlobalNews #RulesFirst #ImmigrationNews #AvargalUnmaigal #MaduraiTamilan #TamilBlog #TamilArticles #SocialCommentary#TamilNews

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.