தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பலர் தமிழக அரசியலை மட்டும் பேசிக் கொண்டே, டெல்லி 'பெருசை' மறந்துவிட்டார்கள். ஆனால் யார் மறந்தாலும் நான் மறப்பதில்லை என்பதால்தான் இந்தப் பதிவு
மக்களாட்சி என்கிற பெயரில் இன்னைக்கு டெல்லியில நடந்துட்டிருக்கிறது சுத்தமான கார்ப்பரேட் நாடகம் தான் அப்படிங்கிறது விபரம் தெரிந்த எல்லாருக்குமே புரியும். 2014-ல 'அச்சே தின்' அதாவது நல்ல நாட்கள் வரும்னு ஆரம்பிச்ச கதை, இன்னைக்கு 2026-ல 'விக்சித் பாரத்' அதாவது வளர்ந்த இந்தியா வரைக்கும் வந்து நிற்குது. ஆனா நிஜத்துல பார்த்தா இது எல்லாமே பளபளப்பான ரேப்பர் பேப்பருக்குள்ளே சுத்தி வைக்கப்பட்ட வெறும் வெற்று மிட்டாய்கள் தான். ஆனா தங்களை ஏதோ இந்து தர்மத்தோட மொத்த குத்தகைக்காரங்க போலக் காட்டிக்கிட்டு, நாடாளுமன்றத்துல செங்கோல் ஏந்தி பந்தா காட்டுற டெல்லிப் பெருசுகளுக்கு, அதே தர்மத்தோட உச்ச நூலான பகவத் கீதை எந்த இடத்துல சவுக்கடி கொடுக்குதுன்னு கொஞ்சம் ஆழமாத் தோண்டிப் பார்ப்போம்.
மகாபாரதப் போர்க்களத்துல கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்ன கர்ம யோகத்தோட மூணாவது அத்தியாயம் ஆறாவது ஸ்லோகம், இன்னைக்கு இருக்கிற இந்த 5G காலத்து கேமரா ஆன்மீகத்துக்கு அப்படியே பொருந்துது. கர்ம நெறியில கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரன் அப்படின்னு ஒரு வரிகளைச் சொல்றார். அதாவது எவன் ஒருவன் வெளியில புலன்களை அடக்கின தியாகி போல வேஷம் போட்டுக்கிட்டு, உள்ளுக்குள்ளே பேராசையையும், சுயநலத்தையும், அதிகார வெறியையும் ஒளிச்சு வெச்சிருக்கானோ அவன் சாதாரண ஏமாற்றுக்காரன் இல்லை, கீதையோட பாஷையில சொன்னா அவன் தான் 'மித்யாசாரன்' அதாவது போலி வேடதாரி.
நம்ம பிரதமரோட ஆன்மீகம் முழுக்க முழுக்க கேமரா லென்ஸ்கள் வழியா மட்டும்தான் பிறக்குது. விவேகானந்தர் பாறையிலயோ இல்லை கேதார்நாத் குகையிலயோ அவர் தவம் செய்ய உட்காரும்போது அங்கே இருக்கிற அமைதியை விட ட்ரோன் கேமராக்களோட சத்தம் தான் அதிகமா கேட்குது. வெளியில மேடைக்கு வந்தா நானோ ஒரு ஃபகீர், பையைத் தூக்கிட்டு ஓடிடுவேன்னு வசனம் பேசுறது, ஆனா உள்ளுக்குள்ளே பல்லாயிரக் கோடி ரூபாய் செலவுல தனக்குன்னு பிரத்யேக விமானம், புது நாடாளுமன்றம், சொகுசு பங்களாக்கள்னு அதிகாரப் பேராசையோட உச்சத்துல திளைக்கிறது. இதைத்தான் கீதை மித்யாசாரம்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லுது.
அடுத்ததா கீதையோட பதினாறாவது அத்தியாயமான தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகத்துல அசுர குணங்களோட பட்டியலை கிருஷ்ணர் அடுக்கிக்கிட்டே போகும்போது அதுல வர்ற முதல் வார்த்தையே 'தம்பம்' தான். தம்பம் அப்படின்னா தான் செய்யாத நல்ல காரியங்களை எல்லாம் தானே செஞ்சது போலக் காட்டி, மக்கள் மத்தியில ஒரு போலியான உன்னத பிம்பத்தை உருவாக்குறது. கொரோனா சான்றிதழ்ல ஆரம்பிச்சு இன்னைக்கு ஏழைங்களுக்குக் கொடுக்கிற இலவச அரிசிப் பை வரைக்கும் தனிநபரோட முகத்தை அச்சிட்டு விளம்பரம் தேடுறதுதான் இந்த தம்பம். இதுமட்டும் இல்லாம 'தர்ப்பம்' அதாவது அதிகாரத் திமிரோடு எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை மூலமாவும் சிபிஐ மூலமாவும் நசுக்குறது, நாடாளுமன்றத்துல எந்த விவாதமும் இல்லாம சட்டங்களை நிறைவேத்துறது எல்லாமே இந்த ரகம் தான். இதோட உச்சமா 'அபிமானம்' என்கிற தற்பெருமையில, நான் ஒன்னும் பயாலஜிக்கலாப் பிறக்கலை, கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டவன்னு பகிரங்கமாப் பேசுறதெல்லாம் அசுர குணத்தோட வெளிப்பாடு இல்லாம வேற என்ன.
உலக நாடுகளுக்கெல்லாம் பறந்து பறந்து கட்டிப்பிடிச்சு விஸ்வகுரு பிம்பத்தை உருவாக்கப் பார்த்தாங்க. ஆனா 2026-ல அமெரிக்காவில இருந்து நம்ம இந்தியக் குடிமக்களை சங்கிலியால பிணைச்சு, கிரிமினல்கள் போலத் தாயகம் திருப்பி அனுப்பினப்போ இந்த விஸ்வகுருவோட விஸ்வரூபம் எங்கே போச்சுன்னு தெரியல. உள்நாட்டுல மணிப்பூர் எரியும்போதும் சரி, வேலைவாய்ப்பு இல்லாம இளைஞர்கள் தவிக்கும்போதும் சரி மௌன குருவா இருந்துட்டு, தேர்தல் மேடைகள்ல மட்டும் மதப் பிரிவினையைத் தூண்டுற மாதிரி பேசுறதுதான் கீதை சொல்லும் அசுரத்தனமான குணம்.
இதைப்பத்தி கீதையோட பதினாறாவது அத்தியாயம் பதினேழாவது ஸ்லோகத்துல இன்னும் தெளிவாச் சொல்லியிருக்கு. ஆத்மஸம்பாவிதா ஸ்தப்தா தனமானமதான்விதா, யஜந்தே நாமயஞைஸ்தே தம்பேனாவிதிபூர்வகம் அப்படின்னு சொல்றாங்க. அதாவது தங்களை மிக உயர்ந்தவங்களா நினைச்சுக்கிட்டு, அதிகாரப் போதையில இருக்கிறவங்க சாஸ்திர நெறிமுறைகளை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு வெறும் சுய விளம்பரத்துக்காகவும் போலிப் பெருமைக்காகவும் வழிபாடுகளை நடத்துவாங்கன்னு எழுதியிருக்கு.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை எடுத்துக்கிட்டாலே இது நல்லா புரியும். ஆகம விதிகளின்படி முழுமையா கட்டி முடிக்கப்படாத கோவில்ல கும்பாபிஷேகம் செய்யக் கூடாதுன்னு சங்கராச்சாரியார்களே எதிர்த்தாங்க. ஆனா தேர்தல் அரசியலுக்காக, நானே முன்னின்று நடத்தினேன்னு ஒற்றை நபர் பிம்ப விளம்பரம் தேடணும்ங்கிறதுக்காக சாஸ்திர விதிகள் அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டாங்க. சாதாரணமா இறைவனைத் தரிசிக்கத்தான் மக்கள் கோவிலுக்குப் போவாங்க, ஆனா இங்க இருக்கிற டெல்லித் தலைவரோ கேமராக்கள் தன்னைத் தரிசிக்கணும்ன்றதுக்காகவே கோவிலுக்குப் போறார். இதுக்கு பேரு பக்தி கிடையாது, ஆன்மீக வியாபாரம்.
பகவத் கீதை தனிமனித துதியைச் சொல்லிக் கொடுக்கல. அது பலனை எதிர்பார்க்காம விளம்பரமே இல்லாம கடமை செய்யுற 'நிஷ்காம கர்மா'வை மட்டும்தான் வலியுறுத்துது. அதை விட்டுட்டு நான்தான் செஞ்சேன், என்னால்தான் இந்தியா உலக அரங்கில் நிமிருதுன்னு மார்தட்டிக்கொள்ளும் போதே அங்கே கிருஷ்ணரோட போதனை தோத்துப் போயிடுது. கேமரா வெளிச்சத்துல கட்டப்படுற எந்தவொரு போலியான பிம்பமும் தர்மத்துக்கு முன்னாடி நிக்க முடியாது. காலத்தோட சக்கரம் சுழலும் போது இந்த மித்யாசார வேடங்கள் எல்லாம் கலைஞ்சு, நிஜமான தர்மம் சாமானிய மக்களோட வடிவுல நிச்சயம் வெல்லும்.
எச்.ராஜாவின் ‘ஆண்டனி’ அபிஷேகம் முதல் திமுக-வின் ‘தாத்தா ஜெனரேஷன்’ செல்ஃபி வரை: இன்றைய டாப் அரசியல் நையாண்டிகள்! https://avargal-unmaigal.blogspot.com/2026/06/blog-post_06.html
அன்புடன்
மதுரைத்தமிழன்

அதுவரை என் பதிவுகள் தொடரும்......
இந்த பதிவை பார்க்க தவறி இருந்தால் கண்டிப்பாக பார்க்கவும்
எச்.ராஜாவின் ‘ஆண்டனி’ அபிஷேகம் முதல் திமுக-வின் ‘தாத்தா ஜெனரேஷன்’ செல்ஃபி வரை: இன்றைய டாப் அரசியல் நையாண்டிகள்! https://avargal-unmaigal.blogspot.com/2026/06/blog-post_06.html
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.