Saturday, February 14, 2026

 தமிழிசையின் அரசியல் அரிதாரம்

   



 
அன்று பகைவன் ஒருவன்
பெண்ணைப்  பற்றி தவறாகப் பேசினால்...
மேடை போட்டு முழங்குவீர்!
அது உங்கள் அறச்சீற்றம்!

ஆனால் இன்றோ
நயினார் நாவிலிருந்து
நாராசம் வழிகிறது...
#த்ரிஷாவின் கண்ணியம்
தெருவில் எறியப்படுகிறது!


ஏன் இந்த முரண்..
நிருபரைக் கண்டதும்
நவ துவாரங்களையும் அடைத்துக்கொண்டு
ஓடுகிறார் தமிழிசை!


பேசியது #திமுக என்றால்
வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பீர்கள்!
இன்று சொந்தக் கட்சி என்பதால்
பொந்துக்குள் ஒளிகிறீர்கள்!


#பெண் சக்தி" என்பது..
பகைவனை வீழ்த்த நீங்கள் வைத்திருக்கும் 'ஆயுதம்'!
ஆனால்,
சொந்தக் கட்சியின் அசிங்கத்தை மறைக்க
நீங்கள் போர்த்திக்கொண்டிருக்கும் 'போலித் திரையல்ல'!


குறிப்பு : #குஷ்பு சுந்தர், #கஸ்தூரி சங்கர்,  #ராதிகா சரத்குமார், #கவுதமி எல்லாம்  நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஏன் ஈடுபடவில்லை? இந்த பெண் சக்திகள் எங்கே ஒழிந்து கொண்டனர்?


நீங்க என்ன ஆளுங்க?" - அட்லாண்டா குளிர்ச்சியிலும் பற்றியெரியும் பட்டிமன்ற ராஜாவின் ஜாதிச் சர்ச்சையும்!


அன்புடன்
மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.