Friday, February 13, 2015



அமெரிக்க போலீஸாரால் தாக்கப்பட்ட இந்தியர்  (இது வரை எந்த இந்திய ஊடகங்களிலும் வராத சம்பவ வீடியோ லிங்க்  இங்கே  இணைக்கப்பட்டுள்ளது )


அமெரிக்காவில் வயதான இந்தியர் ஒருவர், போலீஸ் தாக்குதலால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர், சுரேஷ்பாய் படேல், 57. இவர், இருவாரங்களுக்கு முன், அலபாமா மாகாணம், ஹன்ஸ்வில்லி நகரில் வசிக்கும் தன் மகன் சிராக் படேல் வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு நாள், வீட்டருகே வாக்கிங்க் சென்ற போது அவரை போலீசார் சந்தேகத்தின் காரணமாக அவரை நிறுத்தி  விசாரித்துள்ளனர். ஆங்கிலம் தெரியாத படேல், திக்கித் திணறி, இந்தி கலந்த ஆங்கிலத்தில்பேசி இருக்கிறார். 


மேலும் போலீஸ் விசாரித்து கொண்டிருக்கையில் அவர் போலிஸாரை விட்டு சிறிது விலகி நடக்க ஆரம்பித்தவுடன். ஆனால், போலீசார், குற்றவாளியை பிடிப்பது போல், திடீரென்று படேல் மேல் பாய்ந்து, அவரது கையை பின்பக்கம் மடக்கி, தரையில் குப்புறப் போட்டு அமுக்கியுள்ளனர். இதனால் ரத்த காயத்துடன், முதுகுத் தண்டின் ஒரு பகுதி செயலிழந்து மீண்டும் நிமிர முடியாத பரிதாப நிலைக்கு படேல் ஆளானார்.


இவர் குஜராத்தை சாரந்தவர் என்பதால் இந்த சம்பவம், வெளிச்சத்திற்கு வந்து அமெரிக்காவில்  இந்தியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சந்தேக நபர் ஒருவர் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், சுரேஷ்பாய் படேல் விசாரிக்கப்பட்டுள்ளார். அவரை விசாரித்த விதம் தவறு என்பதால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை அர்ஸ்ட் செய்து விசாரணையை ஆரம்பித்து இருக்கின்றனர், FBI யையும் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்து இருக்கின்றனர்


A spokesman for the FBI said that the agency became involved shortly after the Feb. 6 incident, and it is being treated as a civil rights investigation. The findings will be turned over to the Justice Department for review.

வீடியோ காண  இங்கே க்ளிக் செய்யவும்


Madison Police Department released dashboard camera footage of a police officer throwing a 57-year-old man to the floor in Alabama.


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : நேரமிருந்தால் ஏன் இப்படி நடந்தது இது ஒரு இன்வெறியா என்பதை அடுத்த பதிவில் காண்போம்


2 comments:

  1. இனவெறி காரணமாக இருக்காது என்று நினைக்கறேன் அமெரிக்காவுக்கு யாரைக் கண்டாலும் பயம்
    போலீசார் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளலாம்

    ReplyDelete
  2. சில ஆங்கில செய்தி ஊடகங்களில் பார்த்தேன். தேவையில்லாத தாக்குதல் போலத் தான் இருக்கிறது. என்ன சமாளிப்பு சொல்லப் போகிறார்கள் என்று பார்க்கலாம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.