Monday, February 9, 2015



அண்ணே மோடி நம்மை ஏமாற்றிவிட்டாரா அண்ணே? (அமெரிக்காவுடன் கே(மோ)டி போட்ட அணு உலை டீல்)


அண்ணே மதுரைத்தமிழ் அண்ணே எனக்கொரு சந்தேகம்?
கேளுப்பா உனக்கு என்ன சந்தேகம்.
அண்ணே அணு உலைகளை சப்ளை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களிடம், விபத்தால் பாதிக்கப்பட்டோர், இழப்பீடு கோரி வழக்கு தொடுக்க முடியாது என, மோடி அரசு தெரிவித்துள்ளது.
ஆமாம் அதற்கு என்ன?
அது போல நம் நாட்டில் வீடு கட்டி தரும் நிறுவனங்களிடம் வீடு இடிந்து விழுந்தால் பாதிக்கப்பட்டோர், இழப்பீடு கோரி வழக்கு தொடுக்க முடியாது என்று சொல்ல முடியுமா அண்ணே

தம்பி  ஒரு வேளை நம் அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டி தரும் வீடுகளுக்கு மட்டும் இது செல்லும் என்று அறிவிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
அப்படியா அண்ணே ஏன் அப்படி?
வெளிநாட்டுகாரன் ஏதும் செய்தால் தப்பு இல்லை ஆனால் உள்நாட்டுகாரன் ஏதும் செய்தால் அது தப்பு தம்பி. இதுதான் இந்தியாவின் எழுதாத சட்டம் தம்பி
அண்ணே எனக்கு இன்னொரு சந்தேகம்?
கேளுப்பா கேளு .
இப்படி நம்ம நாட்டில் அணு உலைகள் கட்டினால் தடையில்லா மின்சாரம் நமக்கு கிடைக்கும்தானே அது நல்லதுதானே?
தம்பி இந்த அணு உலை கட்டுவது உங்களுக்காக அல்ல
அப்படின்னா அது யாருக்காக அண்ணே
தம்பி அது  இந்தியாவில் வந்து நிறுவனங்களை தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே தம்பி அப்படி செய்தால்தான் அவர்கள் நம்ம நாட்டிற்கு வந்து கம்பெனிகளை ஆரம்பிப்பாங்க
அப்படி அவர்கள் ஆரம்பித்தால் நல்லதுதானே நிறைய வேலை வாய்ப்பு பெருகும் நாம் நிறைய பொருட்களை வெளிநாட்டிற்கு சப்பளை செய்து அந்நிய செலவாணி அதிகம் ஈட்டி நாட்டின் வளர்ச்சிக்கு செலவிடலாமே?
தம்பி நீ உலகம் தெரியாத அப்பிராணியாக இருக்கிறாயே. வேலை வாய்ப்பு பெருகும் என்று சொல்வதைவிட அடிமைகள் அதிகம் பெருகுவார்கள் என்பதுதான் உண்மை. காரணம் தொழிலாளிகளுக்கு தகுதியான ஊதியத்தை இந்த நிறுவனங்கள் தருவதில்லை அதுமட்டுமல்லாமல் அதிகமாக உழைக்க செய்து தொழிலாளிகளின் இரத்ததை உறிஞ்சிவிடுவார்கள். மேலும் இவர்கள் இந்திய மூலப் பொருகளை உபயோகித்து அதில் இருந்து தாயாரித்த பொருட்களை தங்கள் நாட்டிற்கு அனுப்பாமல் நம் நாட்டிலேயே அதிக அளவு விலைக்கு விற்று அதில் இருந்து வரும் லாபத்தை தங்கள் நாட்டிற்கு எடுத்து சென்றுவிடுவார்கள் கிடைக்கும் லாபத்தில் நாய்களுக்கு போடும் எச்சில் எலும்பை போண்று நம் தலைவர்களுக்கு சிறு தொகையை எறிந்துவிடுவார்கள் அதைப் பெற்ற நாய்களும் தங்கள் வாலை ஆட்டி நன்றிக்கடனை செலுத்தி விடுவார்கள் இந்த வெளிநாட்டு கம்பெனிகள் தங்கள் வந்த வேலை முடிந்ததும் நோக்கியா கம்பெனி போல தொழிலாளிகளை நடுதெருவில் அம்போ என்று விட்டு விட்டு போய்விடுவார்கள். நமக்கு நல்ல தலைவர்கள் கிடைத்து இருந்தால் அரசாங்கமே  நம் நாட்டு சிறு தொழில் அதிபர்கள் முதல் பெறும் தொழில் அதிபர்கள் வரை இருப்பவர்களை ஊக்குவித்து அவர்களின் தொழில் வளர உதவி செய்தால் நாம் உலக அளவில் உயரலாம். சீனாவின் வளர்ச்சிக்கு அரசாங்கம் அந்த நாட்டு மக்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதுதான் காரணம்.அதனால்தான் அது தொழில் வளர்ச்சியில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது

ஓ இதுல இவ்வளவு விஷயம் இருக்கா அது தெரியாமல்  மோடி ஆட்சி பிரமாதம்... 65  ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 6 மாதங்களில் செய்வதாகச் சொன்னது இந்தியாவை முழுவதும் விற்றுவிடுவதைப்பற்றிதானோ.... இதை புரிந்துகொள்ள நமக்குத் தான்  அறிவில்லாமல் போய்விட்டது போல

அண்ணே இந்த பாகிஸ்தாங்காரன் சீனாக்காரன் இவங்கிட்ட இருந்து நம்ம மோடி சாப் இந்தியாவையும் இந்துக்களையும் காப்பாற்றுவார் என்று நினைத்தால் இவர் அவங்களை விட மிக மோசமாக இருப்பார் போலிருக்குதே. அண்ணே இவரிடம் இருந்து எப்படி அண்ணே இந்தியாவை காப்பாற்றுவது?

தம்பி இலங்கையை ராஜபக்சா உருவத்தில் பிடித்திருந்த சனி இப்போ இலங்கையைவிட்டுவுச்சு அந்த சனி இந்தியாவை நோக்கி மோடி உருவத்தில் வந்து இருக்கிறது இது 5 ஆண்டுகள் முழுவதும் மக்களை வாட்டி வதக்கி அழிக்கும் அதன் பின் ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலமை இவருக்கும் ஏற்படும். அதன் பின் இந்தியா சுபிட்ச நிலமைக்கு திரும்பிவிடும்.

அது வரை நீ பொறுத்து இருக்கதான் வேண்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நச்சின்னு சொல்லிட்டீங்க..

    ReplyDelete
  2. பொறுத்துத்தான் ஆக வேண்டிய நிலையில் உள்ளோம். வேறு வழியில்லை.

    ReplyDelete
  3. மோடியின் சுயரூபம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்துள்ளது! டில்லியில் அவர் வித்தை பலிக்க வில்லை பார்த்தீங்களா?

    ReplyDelete
  4. Truly said. Same like Rajapakse we have to throw him.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.