Monday, February 23, 2015



avargal unmaigal
தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் சொதப்பலாக முடிந்ததன் காரணம் என்ன?


பலருக்கு திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காததால் திரை உலகில் ஜொலிக்க முடியாமல் போய்விடுகிறது. ஒரு காலத்தில் இசை அமைப்பாளர்களாக இருக்கட்டும்  அல்லது பாடகர்களாக ஆகட்டும் அது ஒரு குறிப்பிட்ட ஜாதியினரிடம் மட்டுமே இருந்து வந்தது. அதனால் திறமை சாலிகள் பலர் இருந்தும் ஜொலிக்க முடியாமல் போய்விட்டார்கள். அப்படி ஒரு ஜாதியனரால் மட்டும் அமுக்கப்பட்ட நிலையிலும் கூட இளையராஜா போன்றவர்கள் அதை உடைத்து திறமையை வெளி உலகுக்கு காட்டி ஜொலிக்க ஆரம்பித்தார் இந்த வாய்ப்புக்கள் முயற்சிகள் பலருக்கும் கிடைக்காமல் போய் இருந்த வேலையில் டிவிக்கள் மூலம் சின்ன திரையில் பலர் தோன்றி தங்கள் திறமைகளை வெளிகாட்டி பலரும் ஜொலிக்க ஆரம்பித்தனர்.


இதற்கான முயற்சிகளில் சன் டிவியும் விஜய் டிவியும் போட்டி போட்டுக் கொண்டு இப்படி திறமைகளை வெளிக் கொணரும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இப்படிபட்ட முயற்சியின் ஒரு பகுதியான விஜய்டிவியின் சூப்பர் சிங்கர்ஷோ மூலம் தமிழகத்தின் செல்லக் குரலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். பல தடவை இந்த தேடலை நடத்தி நல்ல பெயர் பெற்ற இவர்கள் இந்த ஆண்டில் நடத்திய நிகழ்ச்சியை மிகவும் சொதப்பி சமுக வலைத்தளங்களில் மிகவும் பேசப்படும் பொருளாகி விமர்சனத்திற்குள்ளாகி கேலிகுரியவர்களாகி விட்டனர்..

எதற்கும் ஒரு வரைமுறை உண்டு ஆனால் தமிழகத்தின் செல்லக்குரல் தேடலில் ஒரு வரை முறை இல்லாததால் இப்படி ஒரு அசிங்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது தமிழகத்தின் செல்லக் குரல் என்று சொல்லும் போது தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் மட்டும் பங்கு பெறும் போட்டி என்று வரையறுத்து இருக்கலாம் அல்லது தமிழ் பேச பாடத் தெரிந்த மக்கள் உலகெங்கிலும் இருந்து பங்கு பெறலாம் என்று மட்டுமாவது அறிவித்து இருக்கலாம் ஆனால் அப்படி ஏதும் அறிவிக்காமல் தமிழ்பாட்டு படிக்க தெரிந்தவர்கள் எந்த மாநிலத்தவர்களாக இருந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பங்கு ஏற்க வாய்ப்புக்கள் கொடுத்துவிட்டு தமிழகத்தின் செல்லக்குரல் தேடல் என்று சொல்வது தவறுதானே அப்படிதான் அவர்கள் செய்வதாக இருந்தால் தமிழகத்தின் செல்லக்குரல் தேடல் என்று சொல்லுவதற்கு பதிலாக  தமிழ் பாடும் அழகு குரல் தேடல் என்று அறிவித்து போட்டிகள் நடத்தி இருக்கலாம் .ஆனால் அதை அவர்கள் செய்வில்லை.

இப்படி பல குறைகளுடன் கடந்த காலத்தில் ஆரம்பித்த நிகழ்ச்சி இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது அதில் இறுதி போட்டிக்கு ஆறு குழந்தைகள் தேர்வாகி வந்தனர். இவர்கள் ஆறு பேரும் மிக அருமையாக பாடுபவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று கூட சொல்லாம். ஆனால் இறுதிப் போட்டியில்  இந்த ஆறு பேர்களில் மிக திறமையானவருக்கு வெற்றி கிடைப்பதற்கு பதிலாக மற்றவர்களுக்கு வெற்றி கிடைத்தது இதன் பிண்ணணியில் ஒரு பெரும் வியாபார, ,சாதிய மற்றும் திறைபட துறை சார்ந்த பாலிடிக்சே நடந்து இருக்கிறது என்றுதான் நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் கருதுகின்றனர்.


திறமைக்கு விருது கொடுப்பதாக இருந்தால் முதல் இரண்டு இடங்களில் ஸ்ரீஷா அல்லது பரத்துதான் வந்து இருக்க வேண்டும் அதன் பின் தான் இப்போது வெற்றி பெற்றவர்களில் யாரவது ஒருத்தர்தான் மூன்றாவது இடத்தை பெற்று இருக்க வேண்டும். இதை வெளியில் இருந்து பார்க்கும் பொதுவான மக்கள் இப்படிதான் கருதுவார்கள். ஆனால் நடந்து என்னவோ எப்போதும் விஜய்டிவியினர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் திறமைக்கு மட்டும் மிக முக்கியத்துவம் கொடுப்பதால் அதற்காக அந்த ஜாதியை சார்ந்த ஒருவருக்கும் ஈழத்தமிழர்களை வைத்துதான் தங்கள் வியாபாரமே என்பதால் அதற்க்காக ஒருவரும், இசை துறையை சார்ந்த மறைந்த ஒருவரின் பெண்ணிற்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்ற இசை துறையை சாரந்த ஏகோபித்த ஜட்ஜுக்களின் குரலுக்காகவும் கொடுக்கப்பட்டதாகவே  தெரிகிறது.

வெற்றி பெற்ற குழந்தைகளின் திறமையில் எனக்கு சந்தேகம் இல்லை. அனைவர்களும் மிக திறமையானவர்கள்தான் இவர்களுக்கும் விஜய் டிவியினர் நடத்திய வியாபார பாலிடிக்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை.

இதை தவிர ஜெஸிக்காவின் வெற்றி பற்றி இணையத்தில் அதிலும் சமுக வலைத்தளமான பேஸ்புக்கில் பெரும் அக்க போரே நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது ஜெஸிக்கா வெற்றி பெற்றதற்கு காரணம் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் ஒட்டு போட்டதுதான் என்றும் அதற்காக அவர் ஈழத்தமிழ் பாட்டுகளை பாடி மக்களின் உணர்ச்சியை வைத்து  வெற்றி பெற்றதுதான் என்று பேசப்படுகிறது. இந்த பேச்சு மிகவும் கிழ்தரமானது. இது ஜெஸிக்காவின் திறமையையே கேலிக்குரியதாக்குகிறது. இது மிகவும் தவறான எண்ணமாகும். உலகெங்கும் உள்ள மக்கள் போட்ட ஒட்டினால்தான் அவர் வெற்றி பெற்றார் என்ற வாதத்தை எடுத்துக் கொண்டால் அப்போது அவர் நம்பர் ஒன் என்ற இடத்தைதான் அவர் பெற்று இருக்க வேண்டும்.(நான் எனக்கு பிடித்த ஜெஸிக்காவிற்கு 200க்கும் அதிகமான ஒட்டுகளை இணையம் மூலம் பதிந்து இருக்கிறேன்) ஆனால் அவர் பெற்றதோ நம்பர் இரண்டாம் இடத்தைதான். இதிலிருந்தே விஜய்டிவியினர் நடத்திய நாடகம் என்னவென்று எல்லோருக்கும் புரிந்து இருக்கும்


விஜய் டிவியினருக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் உங்களுக்கு நல்ல வியாபாரமும் லாபமும் முக்கியம்தான் அதானல் நியாம் தர்மம் என்பதை அழித்து  இளம் குழந்தைகளைகளின் திறமைகளை மழுங்கடிக்காதீர்கள்.

ஈழத் தமிழர்களே உங்களுக்காக நான் சொல்லும் செய்திதான் இந்த படம்


இந்த பதிவை முடிக்கும் முன்பு சூப்பர் சிங்கரில் ஜட்ஜாக வந்த ஜெயந்த் வசந்தன் தனது பேஸ்புக் தளத்தில் மனம்விட்டு உண்மையை  சொன்னதையும் மற்றும் பாத்திமா பாபு அவர்கள் சொன்னதையும் இங்கு பதிந்து செல்கிறேன்
avargal unmaigal

avargal unmaigal


மக்கள் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்த ஜெஸிக்காவின் தந்தை...


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. விஜய் டீவி நிகழ்ச்சிகளில் போட்டி முடிவுகள் பிக்ஸ் செய்யப்படுகிறது என்று சிலவருடங்களுக்கு முன்னரே தெரிந்துவிட்டது. நம் பொழுது போக்கிற்காகவும் ரசனைக்காக மட்டுமே நிகழ்ச்சிகளை பார்க்கலாம்! ஓட்டளிப்பது எல்லாம் வீண் தான்! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. தளிர் சுரேஷின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன். இதை வெறும் பொழுதுபோக்காகவும் குழந்தைகளின் இசைத்திறனையும் ரசிக்கவே இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. எல்லாம் நாடகம்,..வாழ்க்கை ஒரு நாடக மேடை .. :)
    இதில் சிறு பிள்ளைகளையும் நுழைத்து விடுகிறார்களே என்று வருத்தமாய் இருக்கிறது..இப்படி அரசியலும் நாடகமும் செய்கிறார்கள் என்று பார்க்கும் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்களோ!!!

    ReplyDelete
  4. குழந்தைகள் அழகாக பாடுகிறார்கள்... என்பதை மட்டுமே சொல்லலாம்.

    மற்றபடி இந்த நிகழ்ச்சி.... குழந்தைகளுக்கான குழந்தை தனம் இல்லாமலேயே போக்க வைக்கிறதே
    என்ற மனக்குறை என் மனத்தில் உண்டு.
    பாவம்... இதில் பங்குபெரும் குழந்தைகளும்.... இதில் பங்குபெற முடியாமல் போய் ஏங்கும் குழந்தைகளும்.
    அர்த்தம் என்வென்றே விளங்கிக் கொள்ளாமல் பாடும் சினிமா பாடல்கள், அதை ரசிக்கும் பெற்றோர்கள்.... வருங்காலத்தில் குழந்தைகளுக்குறிய சேட்டைகள் என்ற எதுவுமே இருக்காது. பிறக்கும் பொழுதே பெரியவர்களாகப் பிறந்து விடுவார்களோ என்ற பயம் தான் உள்ளது.

    ReplyDelete
  5. பொதுவாக குழந்தைகளை போட்டியில் தள்ளி பந்தயக் குதிரைகள் ஆக்குவதை தவிர்த்தல் நலம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.