Thursday, February 19, 2015



அமெரிக்க சேல்ஸ்மேனின் பல முகங்கள் (3)


கஸ்டமர்கள் பலவிதம் என்பதால் நாம் அவர்களை Greet செய்ய முயலும் போது பலவிதமான அனுபவங்கள்   கிடைக்கும் சில கஸ்டர்மர்களை நாம் அணுக முயற்சிக்கும் போதே சிக்னலில் உள்ள போலீஸ்காரர்  கையை நீட்டி ஸ்டாப் என்று சொல்வது போல கையை நீட்டி ஸ்டாப் என்று சொல்லாமல் நம்மை அப்படியே நிறுத்திவிடுவார்கள். சிலரோ நம்மை அறிமுகப்படுத்தும் அவர்களுக்கு நம் உதவி தேவையில்லை என்கிற பொழுது நாகரீகமாக நோ தேங்க்யூ என்று சொல்லுவார்கள் வேறு சிலரோ நோ என்று சிங்கம் போல உறுமுவார்கள். வேறு சிலரோ நோ இண்டியன் அல்லது ஏசியன் என்று மூஞ்சில் அடித்தபடி சொல்லுவார்கள் அது போல சில இந்தியர்கள் நோ வொயிட் ப்யூப்பில் என்று சொல்லுவார்கள் ஆனால் அநேக இந்திய கஸ்டமர்கள் இந்திய அல்லது ஏசிய சேல்ஸ்மேனை கண்டுக்கவே மாட்டார்கள் அவர்களை பொருத்தவரையில் இந்தியர்கள் ஸ்டுபிட்டுகள்..அதனால் அவர்கள் வெள்ளை தோலை பார்த்து செல்லுவார்கள் ஆனால் பிரச்சனை என்று வந்த பின் எங்களை நோக்கி வருவார்கள். இதை பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்


இப்போது நாம் அறிமுகப்பகுதியை விட்டு விட்டு டிஸ்கவர் பகுதிக்கு செல்வோம். இந்த பகுதியில் கஸ்டமரின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவைகளை விற்பது. ஆனால்  நடப்பது என்னவோ கஸ்டர்மர் தேவையை அறிந்து  அவர்கள் விரும்புவது நமக்கு லாபமாக இல்லாத பட்சத்தில் லாபம் கிடைக்கும் பொருட்களை அவர்களுக்கு காண்பித்து அதை வாங்க செய்வேண்டும்


இதற்கு இரண்டு காரணம் ஒன்று  கம்பெனியின் லாபம் இரண்டு எங்களுக்கு கிடைக்கும் கமிஷன். அதுமட்டுமல்லாமல் கம்பெனி கொடுத்த விளம்பரத்தில் கொடுத்த பொருட்களை விற்றால் மேனேஜ்மெண்டிடம் இருந்து அர்ச்சனை கிடைக்கும் அதையையே திரும்பவும் செய்தால் மெமோ கிடைக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை கம்பெனி அதிக அளவு தள்ளுபடி விலையில் விற்பதாக விளம்பரம் செய்வார்கள். அதை பார்த்த மக்கள் அந்த பொருளை வாங்க வருவார்கள் அந்த பொருளை விற்றால் கம்பெனிக்கு அதிக லாபம் கிடைக்காது. அப்படி விளம்பரம் செய்வது மக்களை கவர்ந்து இழுக்கவே. அப்படி வரும் மக்களிடம் அந்த பொருளை விற்காமல் ஸ்டெப் அப் பொருளை விற்க வேண்டும்.. அப்படி செய்யவில்லையென்றால் நீ எல்லாம் ஏன்னய்யா சேல்ஸ்மென் வேலைக்கு வருகிறாய். இப்படி நாங்க விளம்பரம்  செய்த பொருளை விற்க சேல்ஸ்மேனே எங்களுக்கு தேவை இல்லை ஒரு கேசியரை போட்டு அதை நாங்களே செய்து விடுவோமே என்று வறுத்து எடுப்பார்கள் நல்ல மேனேஜராக நமக்கு கிடைத்தால் இந்த வறுவலில் இருந்து விடுதலை கிடைக்கும்


இந்த மாதிரி விலை குறைந்த பொருட்களை (400 முதல் 500 டாலர் வரை உள்ள பொருட்களை) வாங்கவருபவர்களை கண்டால் விலகியோடுவோம். சில சமயங்களில் அவர்களிடம் மாட்டும்போது அந்த பொருட்களை அவர்கள் வாங்காமல் இருப்பதற்கான நெகட்டிவ் விஷயங்களை எடுத்து கூறி மாற்று பொருளை வாங்க செய்வோம் சில சமயங்களில் அது தோல்வியில் முடியும்.

சரி இப்படி கஸ்டமர்கள் விரும்பு பொருளையோ அல்லது நாம் விரும்பும் பொருளையோ விற்றுவிட்டால் காரியம் முடிந்துவிடுமா என்ன? அப்படி நீங்கள் நினைத்தால் அதற்கு பதில் இல்லையென்றுதான் சொல்ல முடியும் இதுவரை வந்தது கஷ்டம் அல்ல இனிமேல் வருவதுதான் கஷ்டம் அந்த கஷ்டம் மிகவும் கொடுமையானது.... அதைப்பற்றி அடுத்தபதிவில் பார்ப்போம்

avargal unmaigal


அதுவரை விற்பனை தொடரும்......

அன்புடன்
மதுரைத்தமிழன்





7 comments:

  1. அமெரிக்கர்கள் தமது பொருட்களின் சாதக குணங்களை விட்டு போட்டியாளரின் பாதக குணங்களைக் கூறு வது கேட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  2. கடைசியா ஒரு தத்துவம் சொன்னீங்க பாருங்க!!! செம்ம செம!! வெற்றி!! தோல்வி:)

    ReplyDelete
  3. பொன்மொழியில் அசத்திட்டீங்க தமிழா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. மொத்த வெற்றி தோல்வியையும் பெண்ணுல அடக்கிட்டீங்க...
    அருமை...

    ReplyDelete
  5. பதிவின் இறுதியில் உள்ள முத்தாய்ப்பான வரிகளை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  6. கடைசி வரிகள் அருமை தமிழா! அருமையான பதிவு! தொடர்ந்து எழுதுங்களேன்....இதைப் பற்றி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. //அனேக இந்திய வாடிக்கையாளர்கள், இந்திய அல்லது ஆசிய விற்பனைப் பிரதிநிதியை கண்டுக்கவே மாட்டார்கள்.//
    அடடா உலகம் பூரா இதுதான் பொது விதியா?
    பொன்மொழி மூலம் ஆவது அழிவதெல்லாம் அங்கே தான் என்பதை நாசூக்காக உருட்டுக்கட்டைக்குப் பயந்து மொழிந்துள்ளீர்கள். கலக்கல்!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.