உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, February 18, 2015

அமெரிக்க சேல்ஸ்மேனின் பல முகங்கள் (2)அமெரிக்க சேல்ஸ்மேனின்  பல முகங்கள் (2)விற்பனை செய்வதை நாலு பகுதியாக பிரித்து கொள்வோம் 1. Greet 2. Discover 3. solve 4.close அதில் Greet  அதாவது அறிமுகம் செய்வது என்பதை முந்தைய பதிவில் கஸ்டமர்களை எப்படி அணுக வேண்டும் என்று பார்த்தோம் அது விற்பனை முயற்சியில் முதல் பகுதி . ஆமாம் அதில் என்ன பெரிய கஷ்டம் என்று உங்களுக்கு சொல்லத் தோன்றும். அதை கஸ்டமர் வரும் போது எட்டு நொடிகளில் எட்டு அடி தூரத்தில் இருக்கும் போதே அவர்களை அணுக வேண்டும். ஆனால் சொல்லும் போது எளிதாக இருக்கும் ஆனால் அதை செய்வது என்பது கடினம். காரணம் எங்களின் சேல்ஸ் தெருவில் அல்ல பில்டிங்களுக்குள் இருக்கும் ப்ளோரில்தான், ஏதோ ஒருத்தன் அல்லது இரண்டு பேர் இருக்கமாட்டர்கள் 10 க்கும் அதிகம் ஆட்கள் இருப்பார்கள் அதுவே வீக்கென்டாக இருந்தால் அதுக்கும் அதிகமாக இருப்பார்கள்அது எப்படி இருக்கும் என்றால் பம்பாயில் சிவப்பு விளக்கு பகுதியில் நிற்கும்  விபசாரம் செய்யும் பெண்களை போலத்தான் எங்களது நிலமையும். எப்படி அந்த பகுதியில் போகும் ஆண்களை அவர்கள் கவரப் பார்ப்பார்களோ அது மாதிரிதான் எங்களது நிலமையும். இப்படி குருப் குருப்பாக நின்று பேசிக் கொண்டிருக்கும் நாங்கள் கஸ்டமர் வந்தால் யார் அவர்களை முதலில் அணுகுகிறார்களோ அவர்களுக்குதான் அந்த கஸ்டமர். அதனால் நாங்கள் ப்ளோரில் நின்று ஜாலியாக பேசிக் கொண்டிருந்தாலும் மனமோ அலை பாயும் கண்களோ கழுகு கண்களாக சுற்றி நடப்பதை பார்த்து கொண்டிருக்கும். இப்படி பார்த்து நாங்கள் கஸ்டமர்களை அணுகும் போது அந்த கஸ்டமர் பொருளை வாங்குகிறாறோ அல்லது சும்மா டைம் வேஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தாலும் அந்த கஸ்டமர் அந்த இடத்தை விட்டு அகலும் வரை வேறு எந்த கஸ்டம்ர்களையும் அணுக கூடாது என்பது விதி.

சில சமயங்களில் நமக்கு கிடைக்கும் கஸ்டமர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக டைம் வேஸ்ட் பண்ணி வாங்காமல் சென்று விடுவார்கள் அதே சமயத்தில் இன்னொரு சேல்ஸ்மேனுக்கு கிடைக்கும் கஸ்டமர் பத்தே 10 நிமிடங்களில் பொருளை வாங்கி கொண்டு சென்று விடுவார்கள் அதன் பின் அந்த சேல்ஸ்மேன் வேறு கஸ்டமரை அணுகிவிடுவான்.அப்படி நடக்கும் போது நமது கண்களில் இருந்து ரத்தம்தான் வரும் அது வேறு யாருக்கும் தெரியாது கூட இருக்கும் மற்ற சேல்ஸ்மேனுக்கு மட்டும் அந்த வேதனை புரியும். எங்களுக்கு சம்பளம் என்று  ஒரு பைசா கூட தரமாட்டார்கள். பொருளை விற்றால் மட்டும் தான் எங்களுக்கு கமிஷன் உண்டு  அதனால்தான் நான் இங்கே  ரத்தம் என்று உபயோகித்து இருக்கிறேன் .

avargal unmaigal

இப்படி பொருளை மட்டும் விற்றுவிட்டால் போதாது அந்த பொருளை டெலிவரி டீம் ஒழுங்காக சேர்க்க வேண்டும் .அதன் பின் இன்ஸ்டாலேசன் டீம் ஒழுங்காக இன்ஸ்டால் செய்ய வேண்டும். அவர்கள் அஜாக்கிரதையாக இருந்துவிட்டால் அதன் பாதிப்பு எங்களுக்குதான் .அதுமட்டுமல்ல பொருட்களை வாங்கிய கஸ்டமர்கள் அதை  ஒரு வருடத்திற்குள் எந்த காரணத்திலாவது ரிட்டன் பண்ணிவிட்டால் எங்களுக்கு கொடுத்த கமிஷனை திரும்ப எடுத்து கொள்வார்கள். அதனால் நாங்கள் (Keep Selling )கீப் செல்லீங்க் கீப் செல்லீங்க் என்று நினைத்து விற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படிதான் ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரம் நின்று கொண்டே சிரித்து கொண்டே மனதிற்குள் அழுது கொண்டே விற்பணை செய்வோம் எங்களுக்கு லஞ் டைம் அரை மணிநேரம்மட்டுமே வேண்டுமென்றால் நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அன் அபிஸியலாக எடுத்து கொள்ளலாம் ஆனால் நாங்கள் லஞ் டைம் என்று எடுத்து கொள்வது 5 நிமடங்கள் மட்டுமே காரணம் எந்த நேரம் கஸ்டமர் வருவார்கள் என்பது தெரியாது அல்லவா. அதனால்தான் என் கூட வேலை பார்க்கும் சில பேர் சிறுநீர் கழிக்க கூட போகமாட்டார்கள். ( இப்படிபட்ட கஷ்டத்தில் கூட ஐபேட் மூலம் நான் பதிவுகளை படித்து அப்டேட் பண்ணி கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தேன் அதனால் சில கஸ்டமர்களை கவனிக்க தவறிவிடுவேன் அதுமட்டுமல்ல இப்படி சந்தோஷமாக வேலையில் பதிவிகள் பார்த்து கருத்து சொன்ன எனக்கு எங்கள் கம்பெனி தலைமையகத்தில் உள்ளவர்கள் நான் பதிவுகளை அப்டேட் கருத்துகளை அப்டேட் பண்ண முடியாதபடி செய்துவிட்டார்கள் என்னால் பதிவுகளை படிக்க முடியும் ஆனால் அப்டேட் அல்லது கருத்து ஏதும் சொல்ல முடியாதபடி தடை செய்துவிட்டார்கள் அதானால்தான் வேலையில் இருந்து அப்டேட் பண்ண முடிவதில்லை)


விற்பனை தொடரும்
டிஸ்கி:  நிறைய பேசலாம்  கஸ்டமர்களின் ரேஸிசம், கஸ்டமர்களிண் குணாஅதியசங்கள்,  கம்பெணி பாலிஸிகள், எந்த நேரத்தில் விலை குறைவாக பொருளை வாங்கலாம் இன்னும் பல விஷயங்களை நேரம் கிடைக்கும் போது தெரிவிக்கிறேன்

7 comments :

 1. என்ன பண்ணுவது எப்படியாவது முன்னேற வேண்டுமே...அதுக்கு பட்டு தான் ஆக வேண்டும்...

  மலர்

  ReplyDelete
 2. கஸ்டமரா இல்ல கஷ்டமரா?

  ReplyDelete
 3. உங்க ஸ்டைல ஒரு அனுபவக்கட்டுரை படிக்க நல்ல இருக்கு!! பயனுள்ளதாவும் இருக்கு! தொடருங்க பாஸ்! வருணை பார்த்தீங்களா ? ஆளையே காணோம்.

  ReplyDelete
 4. உலகின் மிகக் கொடுமையான வேலை என்று நான் நினைப்பது சேல்ஸ்மேன் வேலை தான்....

  ReplyDelete
 5. தனியாக இது தொடர்பாக நீங்கள் ஒரு நூலே எழுதலாம் போலுள்ளது.

  ReplyDelete
 6. ஐயோ.... இவ்வளவு கஷ்டமா....?

  ReplyDelete
 7. மிக மிகக் கஷ்டமான வேலை ....இது....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog