Wednesday, February 11, 2015



படித்து ரசிக்க பேஸ்புக்கில் வந்த ஸ்டேடஸ் 
ஆண்கள்  அழகை பார்த்து மயங்கி காதல் கொள்வார்கள். பெண்கள் அழகிய வார்த்தைகளே கேட்டு அதில் மயங்கி காதல் கொள்வார்கள். அதனால்தான் என்னவோ பெண்கள் அதிகம் தங்களை அழகு படுத்தி கொள்கின்றனர். ஆண்கள் அதிகம் பொய் சொல்ல ஆரம்பிக்கின்றனர்
 


பெண்கள் அழகான டிரெஸ் அணிவது  அவர்களை அழகுபடுத்தி கொள்ளவும் மற்ற பெண்களை பொறாமை கொள்ள வைப்பதற்காகவும்தானே அன்றி ஆண்களை கவருவதற்காக அல்ல. 
ஆண்களை கவர வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆடைகளே தேவையில்லையே



ஸ்கூலுக்கு போகமால் ஆபிஸூக்கு போகாமல் கிச்சனுக்கு போகாமல் கட் அடிச்சாலும் அடிப்பாங்களே தவிர
பேஸ்புக்குக்கு போகாமல் யாரும் இருக்க மாட்டார்கள்
# என்ன நான் சொல்லுறது


ஒரு பெண் மிட் நைட்ல ஷுவை தொலைச்சுட்டு வந்தா அவளை Fairy tale என்று அழைக்கும் சமுகம் ஒரு ஆண் அதே மாதிரி  மிட் நைட்ல ஷுவை தொலைச்சுட்டு வந்தா குடிகாரப் பயல் என்று அழைக்குது # என்ன மாதிரியான சமுகத்தில் நாம் வாழ்கிறோம்


இந்த காலத்துல பெண்களுக்கு நல்லா சமைக்க தெரியுதோ இல்லையோ ஆனால்  எப்படி சமைக்கிறது என்று  சமையல் குறிப்பு (recipe) போட நல்லாவே தெரிஞ்சிருக்குது


குடியரசு தினம் ஜனவரி 26 சுதந்திர தினம் எப்ப தெரியுமா?
ஆகஸ்ட் 15
அதுதான் தப்பு பொண்டாட்டி வீட்ல இல்லாத நேரம் அதாவது அவ அவங்க அம்மா வீட்டிற்கு போன நேரம்தான் சுதந்திர தினம்.... ஹும்ம் நான் கடந்த 3 வருஷ்மா சுதந்திர தினம் கொண்டாடலை ஹும்ம்

அரசியல் ஸ்டேடஸ் :

அணு ஆயுத ஒப்பந்ததில் மன்மோகன்சிங்க் கையெழுத்து போடக் கூடாது என்று போராட்டம் நடத்திய பிஜேபியினர் ஆனால் அதே ஒப்பந்ததில் மோடி கையெழுத்து இட்டுள்ளார். ஒரு வேளை அழிவு வேலைகளுக்கு இவர்தான் சிறந்தவர் என்பதால்தான் மன்மோகன் சிங்க் ஆட்சியில் பிஜேபியினர் எதிர்ப்பு தெரிவித்தார்களோ என்னவோ

ஒரு வேளை ஒபாமா பார்க்க விரும்பியது பிஜேபியினர் இடித்த அயோத்தி மசூதியாக இருந்திருக்கும் ஆனால் பிஜேபியினர் காட்ட விரும்பியது மொகலாயர் கட்டிய தாஜ்மகஹாலை அதை அறிந்த ஒபாமா ஆக்ரா டிரிப்பை கேன்சல் பண்ணிட்டு அரேபியாவீற்கு போயிட்டாரோ என்னவோ?

மோடி துடப்பம் எடுத்து சுத்தம் செய்தால் அந்த இடம்தான் க்ளின் ஆகும்.
ஆனால் எங்க தலைவன் ஒபாமா வருகிறார் என்றால் ஊரே சுத்தமாகும்
#அவர்தாண்டா தலைவன்

///டில்லி தேர்தலில் தோல்வியடைந்தால் மோடி காரணமல்ல-அமித்ஷா.///
அமித்ஷா சொல்வதில் என்ன தப்பு?டில்லி தேர்தலில் தோல்வியடைந்தால் மோடி காரணமல்ல. அதற்கு முக்கிய காரணம் டில்லி மக்கள்தான். இதை மறைத்துவிட்டு டில்லி தோல்விக்கு மோடிதான் காரணம் என்று சொல்லப் போவது மோடி மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால்தான்


ஆம் ஆத்மி கட்சியை டில்லியில் தோற்கடிக்க மோடியிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயூதம் கேஜ்ரிவாலின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே இதை செய்தால் ஆம் ஆத்மி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் # என்ன நான் சொல்லுறது சரிதானே?


திருமங்கலத்தில் பணம் கொடுத்த போது இனித்தது அதே மாதிரி ஆளும் கட்சி ஸ்ரீரங்கத்தில் தரும் போது கசக்குதாம் நம்ம கலைஞருக்கு... இதுக்குதான் சொல்லுறது நல்லதை நாலு பேருக்கு கற்றுதரணும் அப்பதான் அது நாலா பெருகி நம்மை வந்து அடையும் கெட்டதை கற்று கொடுத்தால் அதுவும் உங்களைத்தான் வந்து சேரும்...

பாஜக கூட்டணியில் இருந்த விஜயகாந்த் டில்லி பிரச்சாரத்திற்கு போகததால்தான் பாஜகவுக்கு டில்லியில் இந்த அளவு தோல்வி ஏற்பட்டு இருக்கிறது. இல்லையென்றால் நடப்பதே வேற



துணிந்தவர் தோற்றதில்லை கேஜ்ரிவால்
தயங்கியவர் வென்றதில்லை! மோடி

டியர் கெஜ்ரிவால்
உன் வெற்றிக்கு துணை நிற்பவன் - நண்பன்.
உன் வெற்றிக்கு காரணமானவன் - உன் எதிரி..
அதனால் நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி.


டிஸ்கி :  இவை அனைத்தும் எனது பேஸ்புக்கில் நான் இட்ட  பதிவுகள். படிக்காதவர்கள் படிப்பதற்காக இங்கே வெளியிடப்படுகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்
எனது பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/avargal.unmaigal

6 comments:

  1. ஏன் பாவம் பூரிக்கட்டையால அடி வாங்கறீங்கன்ற உண்மை இப்ப தெரியுது.... அடி வாங்கியே இப்படின்னா....

    ReplyDelete
  2. மதுரைத் தமிழரே! நீங்கள் இந்தியாவுக்கு வரப்போவதே இல்லன்னு நினைக்கிறேன்.
    மதுரையில் திருமங்கலம் ஆட்டோ ரெடியா நிக்குதாம்.
    அப்பறம் அ்ப்படியே வந்தாலும் மும்பை வழியா வந்திடாதீங்க... அங்க மும்பை தாதாக்கள் உங்கள் போட்டோ(?)வை வைத்துக் கொண்டு பார் பாராக விசாரிப்பதாகக் கேள்வி.
    உங்கள் வலைப்பக்க சுயஓவியத்தில் மண்டை வீங்கித் தெரியக் காரணம் பூரிக்கட்டையா, மூளைவளர்ச்சியா? சரி சாமி நா ஒன்னும் கேக்கல.. நீங்க கலக்குங்க.

    ReplyDelete
  3. நீங்க சுதந்திர தினம் கொண்டாடவே வேண்டாம்....பாவம் உங்க மனைவி....

    மலர்

    ReplyDelete
  4. முதல் பாராவில் அனைத்தும் அடங்கிவிட்டது. நன்றி.

    ReplyDelete
  5. இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  6. அனைத்தையும் ரசித்தேன்.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.