உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, January 5, 2015

பேஸ்புக்கில் / ஸ்மார்ட் போனில் பெண்களிடம் சாட் செய்வது எப்படி?பேஸ்புக்கில் / ஸ்மார்ட் போனில் பெண்களிடம் சாட் செய்வது எப்படி?

பேஸ்புக்கில் ஒரு பெண் என்னிடம் Whats Up? என்று செய்தி அனுப்பியது.
அதற்கு நான் சீலிங்க்,லைட், பேன் இருக்கு என்று பதில் அனுப்பினேன்
உடனே அந்த பெண் என்னை ப்ளாக் பண்ணிவிட்டது.

இன்னொரு நாள் ஒரு பெண் செளக்கியமா என்று கேட்டது.
நான் செளக்கியம் நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்டு பதில் மெசேஜ் அனுப்பினேன்

அதற்கு அந்த பெண் ஒரு புகைப்படத்தை அனுப்பி, இதை பார்த்துவிட்டு நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டு அனுப்பியது.
அதற்கு நான்  ஏங்க உங்ககிட்ட போட்டோ ஷாப் மென் பொருள் இல்லையா என்று கேட்டேன் அவ்வளவுதாங்க உடனே அந்த பெண் என்னை ப்ளாக் பண்ணிவிட்டது.


இன்னொரு நாள் ஒரு பெண் செளக்கியமா என்று கேட்டு அதன் கூடவே ஒரு நல்ல கருத்தையும் சேர்த்து அனுப்பியது
அதைபடித்த நான் கருத்து நல்லா இருக்கு ஆனால் அதை ஏன் ஒரே வரியில் சொல்லாமல் உடைத்து உடைத்து உடைத்து எழுதி இருக்கீங்க என்று கேட்டேன்
அதற்கு அவள் உனக்கெல்லாம் கவிதை அனுப்பி கருத்தை கேட்டேன் பாரு என்னனை செருப்பாலா அடிக்கனும் என்று சொல்லி என்னை உடனே ப்ளாக் செய்துவிட்டதுங்க.

இன்னொரு நாள் சாட்டில் ஒரு பெண் அழகாக சேலை கட்டி அதை போட்டோ எடுத்து அனுப்பி எப்படி இருக்கிறது என்று கேட்டாங்க?
அதற்கு இந்த சேலையை எந்த  அசிங்கமான பொண்ணு கட்டினாலும் அழகாக இருப்பாங்க என்று சொல்லி நீங்களும் அழகாக இருக்கிறீங்க என்றுதான் சொன்னேன் அதுக்கு அப்புறம் அவுங்க அக்கவுண்டையே டீஅக்டிவ் பண்ணிவிட்டு போயிருக்காங்க

இன்னொரு பெண் ஹாய் என்று மெசேஜ் அனுப்பியது
நான் பதிலுக்கு ஹாய் ஆண்டி என்று அழைத்தேன்(புரோபைல் போட்டோவை பார்த்துதான் அப்படி அழைத்தேன் என் நேரம் அவங்க வயதை பார்க்கவில்லை அவங்களுக்கு 25 வயதுதான் ஆகுதாமுங்க)
அவ்வளவுதாங்க உடனே அவங்களும் ப்ளாக் செய்து போயிட்டாங்க

நான் சரியான மாங்க மடையனாக இருக்கிறேனே
ப்ளீஸ் பேஸ்புக்கில் பெண்களிடம் சாட் செய்வது எப்படி என்று யாராவது எனக்கு சொல்லிதாங்களேன்.


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : பேஸ்புக்கில் பெண்களிடம் சாட் செய்வது எப்படி? என்ற தலைப்பை பார்த்து நான் ஏதாவது நல்ல ஐடியா சொல்லி இருப்பேன் என்று நீங்கள் நினைத்து வந்து ஏமாந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல


11 comments :

 1. வணக்கம்
  கலக்கி விட்டீங்கள்..... பரம இரகசியம் தனியாக மின்னஞ்சல் அனுப்புங்கள் சொல்லித்தருகிறேன்.. தகவலை பார்த்தவுடன் சிரிப்பு வந்தது... பகிர்வுக்கு நன்றி த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. ஹஹஹஹ்ஹஹ் செம. அதுவும் அந்த டாய்லட்..அஹ்ஹாஹ்இவ்வளவு நாள் உங்க ப்ளாக் வாசிச்சு ரசிச்சுட்டு இது கூட விளங்கலைனா...அதான் நீங்க இந்தத் தலைப்பைக் கொடுத்து ஐடியா கொடுக்க போறது இல்ல கேப்பீங்கனு தெரியாதா என்ன...

  இப்படி எல்லாம் சாட் பண்ணினா பொண்ணுங்க ப்ளாக் பண்ணாம வேற என்ன செய்வாங்களாம்...அதுக்கெல்லாம் தனி மச்சம் வேணுங்க....ஹஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. நம்ம மதுரைத் தமிழனுக்கு தனி மச்சம் இருக்கு,ஆனா அது அடி வாங்குறதுக்காக மட்டும் தான்

   Delete
 3. வெறும் ப்ளாக் மட்டும் செய்தார்களே,வீடு தேடி வந்து நம்மளை அடிக்கவில்லையே என்று சந்தோஷப்படுங்கள்.
  உங்களைப் பற்றி தான் தெரியுமே, நீங்க ஐடியா எல்லாம் கொடுக்க மாட்டீங்களே.

  அப்புறம் அந்த டாய்லெட் சூப்பர்.சூப்பர்.சூப்பர். .

  ReplyDelete
 4. ஹாஹாஹா! நல்லாவே சாட் பண்றீங்க! நடக்கட்டும்!

  ReplyDelete
 5. புதிது புதிதான ஐடியாக்களெல்லாம் உங்களுக்கு கைவந்த கலை... :)

  ReplyDelete

 6. அந்தக் காமெடி பீசு நீங்க தானா..... ஹா ஹா ஹா......

  அங்கே பெண்கள் எல்லோரும் சேர்ந்து உங்களைச் சுற்றித் தான் கும்மி அடிக்கிறார்களா...?

  ReplyDelete
 7. டாய்லட் ஜோக்... தாங்க முடியலை போங்க....

  அவ்வளவு வயிற்று வலிப்பா....

  ReplyDelete
 8. ஹா... ஹா...
  நீங்க பகிர்ந்திருக்கும் சாட்டிங் படங்களே அருமையா சாட் பண்ணதை பறை சாற்றுதே..
  டாய்லெட் ஜோக் .. அருமை...

  ReplyDelete
 9. எப்படியோ பெண்களுடன் சாட் செய்ததைத் போட்டு பெண்களை நல்லா காலை வாரி விட்டிருக்கீங்க... வீட்ல பூரிக்கட்டைல வாங்கினது பத்தலை என்ன செய்யறது?

  ReplyDelete
 10. காலையில் மதுரை தமிழனின் வலைப்பக்கத்துக்கு வந்தால் அன்றைய பொழுது சிறப்புடன் தொடங்கும் என்பது உண்மை.
  எவ்வளோ பூரிக் கட்டை அடி வாங்க வாங்க நகைஹ்சு உணர்வு கூடிக் கொண்டே போகிறது மதுரைத் தமிழனுக்கு

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog