Wednesday, January 21, 2015



காந்தியை மேலும் கேவலப்படுத்தும் தமிழக வக்கீல் (காந்தி பீருக்கு பதிலடியாக ஜார்ஜ் வாஷிங்டன் செருப்பு)


தினமலரில் வந்த செய்தி

கோவை: கடந்த சிலநாட்களுக்கு முன் அமெரிக்காவின் பீர் கம்பெனி ஒன்று, மகாத்மா காந்தி படத்துடன் பீர் டின்னை விற்பனை செய்தது. இதற்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மகாத்மா படத்தை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது. ஆனால் படத்தை அகற்றவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் படத்துடன் செருப்பை கோவையை சேர்ந்த வழக்கறிஞர், ராமசுப்ரமணியம் தயாரித்துள்ளார். இந்த செருப்பை அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி என அமெரிக்க முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ள அவர், வரும் 26ம் தேதியன்று டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.




இந்த செய்தி படித்தவுடன் வந்த சிரிப்பிற்கு அளவே இல்லை. காரணம் கோவையை சேர்ந்த வழக்கறிஞர், ராமசுப்ரமணியம்தான். இவர் கஞ்சா கேஸுகூட கிடைக்காத காஞ்ச  வக்கிலாகத்தான் இருக்கனும். இவரின் செய்கையை பார்க்கும் போது தன்னைப் பற்றி பரபரப்பாக செய்திகள் வர வேண்டும் என்ற நோக்கில்தான் இதை அவர் செய்திருக்க வேண்டும்,


இவர் இப்படி செய்தால் அமெரிக்காவே பொங்கி எழும் என்று நினைத்திருப்பார் போல இருக்கிறது. அவரைப்பற்றி நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவருக்கு இது தெரியாது போல அமெரிக்க தேசிய கொடியைவே மக்கள் டாய்லெட் பேப்பராகவும்  மற்றும் காலணிகளிலும், உள்ளாடையிலும் அணிந்து வருகிறார்கள். ஏன் ஜார்ஜ் வாஷிங்கடன் படத்தை கொண்ட பெண்களின் உள்ளாடைகளே அதுவும் அமெரிக்கன் தயாரிப்பே வருகிறது. அப்படி இருக்க இங்கே. வாஷிங்டன் படத்தை செருப்பினால் போடுவதால், அமெரிக்க அரசோ அல்லது மக்களோ எந்த சலனமும் அடையபோவதில்லை வெட்டி வேலை, நேரமும் பொருளும்தான் விரயம்.


காந்தியின் படத்தை போட்டு பீர் உற்பத்தி செய்யும் new england brewing company ஒரு சிறிய நிறுவனம். இது நிறுவனம் நம்ம ஊரின் குடிசைதொழிலுக்கு  இணையாணவையே அதில் வேலை பார்பவர்கள் 10 பேருக்கும் மேல் இருக்க மாட்டார்கள். இவர்களின் செயலுக்காக பொங்கி எழுவது வீண் வேலை. இவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நல்லது. இந்திய பத்திரிக்கைகள் இதை பற்றி எழுதி இருக்காவிட்டால் அந்த டவுனில் உள்ளவர்களை தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்காது, அந்த கம்பெனி கேவலப்படுத்தியது என்று சொல்வதைவிட இதை செய்திகளாக வெளியிட்டு உலக அளவில் புகழ் சேர்த்த இந்திய ஊடகங்களைதான் இந்த வக்கில் கண்டித்து இருக்க வேண்டும் . அல்லது இதை விட காந்தி போதித்த கருத்துகளில் ஒன்றையாவது அவர் தன் தினசரி வாழ்வில் கடைபிடிக்க முயல்வது எவ்வளவோ மேல்


இங்குள்ள படித்த சிலரைதவிர பல பேருக்கு காந்தி யார் என்று கூட தெரியாது அவர்கள் ஜெனரல்நாவ்லெட்ஜில் ஜீரோ..

அதனால காந்தியை மேலும் கேவலப்படுத்தாமல் அவர் சொன்ன அஹிம்சா வழியை கடைபிடிங்க அதுதாஅன் காந்திக்கு நாம் செலுத்தும் மரியாதை.
avargal unmaigal


http://www.newenglandbrewing.com/brews.php  இன்னும் அந்த காந்தி பீர் விற்பனையில்தான் இருக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. வணக்கம்

    காலம் மாறி விட்டது... யார் இடந்தான் பதில் சொல்வோம்.....த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. முட்டா பையன் எதோ சொல்றான்னு, இந்த வக்கீலுக்கு வரலாறு தெரியவில்லை. இத படிக்க சொல்லுங்க...
    http://www.osho.com/iosho/library/read-book/online-library-silence-lincoln-president-8de67417-e4c?p=4a214008c79d4bf5ce2ed47f02f7a53e

    ReplyDelete
  3. தமிழக வழக்கறிஞரின் செயல் வெட்டியான ஒன்றாகவே எனக்கும் தோன்றுகிறது! விரிவான தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  4. நம்ம ஊர்ல எதுக்கு எல்லாம் எதிர்க்கணும்னு விவஸ்தையே கிடையாது தமிழா....அன்றாடம் கஷ்டப்படுற விலைவாசி, பெட்ரோல் விலை இதுக்கெல்லாம் எதிர்ப்பு கிடையாது....சும்மா எல்லாமே வெத்து வேட்டுக்காரங்க....நானும் ரௌடி ரௌடினு வடிவேலு சொல்றாமாதிரி பெயர் வரதுக்காகக் காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க...

    உங்கள் கடைசி வரிகள் அஹிம்சா வழி மிகவும் சரியே....

    ReplyDelete
  5. இந்த செண்டிமென்ட்.... என்பதெல்லாம் இங்கே கிடையாது.
    பாவம்.
    அந்த வக்கில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு காரி உமிழ்கிறார்.

    ReplyDelete
  6. கொச்சைப்படுத்துவதற்கு இப்படியும் ஒரு வழி. என்ன செய்வது?

    ReplyDelete
  7. தலைப்பை படித்தவுடன் என்னடா னு யோசித்தேன். PRESIDENT'S LOVE STORY என்றொரு படம். ஏழெட்டு வருடங்களுக்கு முன் பார்த்தது நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட அறுபது வயதை நெருங்கும் அமெரிக்க அதிபர் , முப்பது வயதை நெருங்கும் ஒரு பெண்ணை நேசிப்பார். அவள் ஒருமுறை கால்பந்தாட்டம் பார்க்கும் போது அரங்கில் அமெரிக்கக்கொடியை எரித்துவிடுவாள். எனவே அவளை அதிபர் மணந்து கொள்ள கூடாது என பத்திரிகைகள் எதிர்ப்பு கிளப்ப, நீ வணக்கம் செலுத்தும் கொடியை, ஒரு குடிமகளாக எரிக்கும் உரிமை அவளுக்கும் இருக்கிறது என பிரஸ் மீட் வைத்து அறிவிப்பார் அதிபர். அவ்வாறு நிறைவுபெறும் படம்:))))))))))))))))))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.