Tuesday, January 13, 2015




கேள்வியும் நானே பதிலும் நானே (மோடி அரசு ஒரு கேடி அரசுதாங்க)

திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று கலைஞர் பேசியது பற்றி?
மதுரைத்தமிழன் : என்னதான் தன் பிள்ளைகள் மீது கோபம் இருந்தாலும் இப்படி தன் பிள்ளைகள் அழிந்து போவார்கள் என்று எந்த தந்தையாவது மீட்டிங்கில் பேசுவார்களா என்ன


மோடி அரசு தமிழை வளர்க்க பாடுபடுகிறதாமே?
மதுரைத்தமிழன் : மோடி அரசு தமிழ் மொழியை வளர்க்க (தேர்தலுக்காக) பிரச்சாரமும் அதே நேரத்தில் ஹிந்தி சமஸ்கிருத மொழியை வளர்க்க சட்டம் போடுகிறது. மோடி அரசு ஒரு கேடி அரசுதாங்க

எழுத்தாளர் சாருவை பற்றி ஏதாவது கூற முடியுமா?
மதுரைத்தமிழன் : சாருவின் எழுத்துக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் சாருவின் கோமாளித்தனத்தை ரசிக்க ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால சாரு எழுதுவதை நிறுத்திவிட்டு கோமாளிதனத்தில் இன்னும் அதிகம் கவனம் செலுத்தினால் வடிவேலின் நடிப்பையும் மிஞ்சலாம் # என்ன நான் சொல்லுறது

ஸ்ரீரங்கத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் பற்றி?
மதுரைத்தமிழன் : திமுக கட்சியினருக்காக நேர்ந்து விடப்பட்ட பலிக்கடா

ஸ்டாலினுக்கு தலைவர் பதவி கொடுக்கலாமா?
மதுரைத்தமிழன் : ஸ்ரீரங்கத்தில் திமுக வேட்பாளர் ஜெயித்து வந்தால் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி கொடுக்க தயார் என்று கலைஞர் அறிவிக்க வேண்டும் .ஜெயித்தால் தலைவர் பதவி இல்லையென்றால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை என்றால் பதவி எத்றகு என்று கேட்டு விடலாம்.

திருக்குறளை தமிழகத்துக்கு வெளியே எடுத்து சென்றது மோடி அரசாங்கம் என்று பாஜக தமிழக தலிவர்களில் ஒருவரான வானதி  சொன்னது பற்றி?
மதுரைத்தமிழன் : அவரின் அறிவு ஞானம் நம்மை வியக்க வைக்கிறது .ஒரு வேளை மோடிக்கு இப்போதுதான் திருக்குறள் பாறி அறிந்து அதை அவர் தமிழ்நாட்டில் இருந்து வாங்கி சென்றதைத்தான் வானதி இப்படி சொல்லி இருக்கிறாறோ என்னவோ.அவருக்காக இந்த தகவல் உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் அதுவும் 107 மொழிகளில் வெளி வந்த புத்தகம் திருக்குறள்தான்

மதுரைத்தமிழன் : ஒவ்வொரு இந்து குடும்பத்தில் உள்ளவர்களும்  நாலு அல்லது ஐந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று பாஜகவினர் சொல்லுகிறார்களே?.
முதலில் பாஜக தலைவர்கள் முதலில் இதை நிறைவேற்றட்டும் அதன் பின் மற்றவர்களும் அதைப் பின்பற்றலாம்

பொங்கல் வாழ்த்து அட்டைகள் நமக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தன அது இப்போது இல்லையே அது பற்றி?
மதுரைத்தமிழன் : நம் காலத்தில் வாழ்த்து அட்டைகள், நம் குழந்தைகள் காலத்தில் வாட்ஸ் அப். நாம் வாழ்த்து அட்டைகளை புகழ்ந்து பேசுவது போல நம் குழந்தைகள் எதிர்காலத்தில் வாட்ஸ் அப் பற்றி, அந்த காலத்தில் நாங்கள் வாட்ஸ் அப்பில் வாழ்த்தை அனுப்பி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தோம் என்று பழம் பெருமை பேசிக் கொள்ளலாம்

Q: What do you call a man with half a brain?
A: Gifted.

அன்புடன்
மதுரைத்தமிழன்




13 comments:

  1. 'நல்லாத்தான் வார்ரீன்ங்க. அதை ஏன் எழுத்தாளர் குடும்பத்துக்குள்ளேயே செய்ரீன்ங்க (சாருவை வாரியதைத்தான் சொல்கிறேன்).

    ReplyDelete
  2. சுவையான பதில்கள்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கேள்வியின் நாயகன் அளித்த பதில்கள் செம நையாண்டி! கலைஞரின் பதில், சாரு...அஹஹஹஹ்ஹ...

    பொங்கல் வாழ்த்து அட்டைகள் ம்ம்ம்ம் சரிதானுங்க.....வாட்ஸப்புக்கு அப்புறம் என்ன வருதோ அது அப்புறம் பேசப்படும்....கடைசி ....சூப்பர்....ரசித்தோம் அனைத்தையும்

    தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மறுமொழிகளை ரசித்தேன். ஒரு பக்கம் நகைச்சுவை, மற்றொரு பக்கம் உண்மை. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. சாரு ஒரு என்டர்டைன்மென்ட் . மனுஷ்யபுத்திரன் கூட அவர கலாய்க்கிறாரே

    ReplyDelete
  7. ஹாஹா :) ரசித்தேன் கேள்வி மற்றும் பதில் ...இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  8. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கள் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  10. ஹா ஹா ஹா.... ரசித்தேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
    சூப்பர் பதில்கள். அதுவும் அந்த பலிக்கடா உண்மை தான்

    ReplyDelete
  12. இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  13. கேள்வி-பதில் ரசித்தேன்.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.