Thursday, January 15, 2015




திருவல்லிகேணி முதல் வெளிநாட்டில் வசிக்கும் பேச்சிலர்களுக்கான வரை உள்ளவர்களுக்கான பதிவு

ஆண்களுக்கான பதிவு ( பெண்கள் விரும்பினால் எட்டிப் பார்க்காலாம் )

பேச்சிலர்களும் கல்யாணம் ஆகியும் மனைவியை பிரிந்து தொலை தூர நகரங்களிலும் நாடுகளிலும் வசிப்பவர்களும் பொங்கல் திருநாள் அன்று பொங்கல் கொண்டாடமல் இருந்திருப்பீர்கள்



கல்யாணம் ஆகாத ஆண்களாக இருக்கலாம அல்லது கல்யாணம் ஆகியும் மனைவியை பிரிந்து வெளிநாட்டில் வசிக்கும் ஆணகளாகவும் இருக்கலாம். ஆனால் இந்த பொங்கல் திரு நாளில் நீங்கள் தனியாக வீட்டில் சோகத்துடன் இருப்பீர்கள்.

ஆனால் உங்க பக்கத்து வீட்டுகாரங்க, எதிர்த்த வீட்டு காரங்க மாடி வீட்டுகாரங்க பின்பக்க வீட்டுகாரங்க இப்படி எல்லார் வீட்டுகாரங்களும் பொங்கல் வைத்து பொங்க வைத்து மகிழ்ந்திருப்பாங்க ஆனால் அதை பார்த்தும் கேட்டும் இருந்த நீங்க பொங்களுக்காக தவித்து இருப்ப்பீங்க (இங்க ஒரு நண்பர் பொங்கலுக்காக தவித்த கதையை  இங்கே சென்று நீங்க பார்க்கலாம் அப்பப்பா அவர் பட்ட கஷ்டம் கண்ணில் கண்ணிரை வர வைக்கிறது )

இப்படி நீங்க வருத்தபடுகிறதை நினைச்ச நான் உங்களை சந்தோஷப்படுத்த ஒரு சிறுமுயற்சியின் விளைவாக நான் இந்த படத்தை வெளியிட்டு உங்களை சந்தோஷப்படுத்துகிறேன்.



நிச்சயம் இந்த படத்தை பார்த்ததும் பொங்கலை போல உங்க மனசும் பொங்கி வழியும். 

எத்தனை வீட்டீல் பொங்கல் பொங்குச்சோன்னு தெரியாது ஆனா இதை பார்த்து உங்க மனசு கண்டிப்பா பொங்கும் அப்படி பொங்கவில்லை என்றால் நீங்கள் கண்டிப்பாக டாக்டரை பார்க்க வேண்டும்

என்ன வழிஞ்சிச்சா இல்லையா? வழிஞ்சிச்சி என்பவர்கள் சந்தோஷமாக  மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்.

இல்லை நாங்க  சந்தோஷம் அடையவில்லை என்று சொல்பவர்கள் மட்டும் கொஞ்சம் தனியாக ஒதுங்குங்கள் உங்களிடம் ஒரு செய்தி சொல்லானும்.

இதை பார்த்தும் உங்களுக்கு மனசு பொங்கலைன்னா உங்க உடலில் ஏதோ கோளாறு இருக்குங்க . அதனால் நீங்க கூடிய சிக்கிரம் டாக்டர்.காமராஜை சந்தியுங்கள் அல்லது இரவு நேர டிவிகளில் வரும் டாக்டரிடம் உங்கள் கோளாரை சொல்லி அறிவுறை கேட்கவும்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

பொங்கலை ஒட்டி நான் பேஸ்புக்கில் இட்ட சில ஸ்டேடஸுக்கள் உங்களுக்காக கிழே :


பொங்கலுக்கு எல்லோர் வீட்டிலும் பொங்கல் பொங்குதோ இல்லையோ ஆனால் இங்க பேஸ்புக்கில் பொங்கல் வாழ்த்துக்கள்  அளவிற்கு அதிகமாகவே பொங்கி வழிகிறது

வீட்டும்மா செய்த பொங்கலை சாப்பிட பயந்தே பல ஆண்கள் அம்மா எனக்கு சுகர் இருக்கும்மா டாக்டர் கண்டிப்பா ஸ்வீட் ஏதும் சாப்பிடக் கூடாது என்று தப்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


மாட்டு பொங்கல் அன்று "மாட்டு பெண்கள்" எல்லாம் ஜாக்கிரதையாக இருக்கவும் இல்லையென்றால் உங்க மாமியார் உங்களை அலங்கரிச்சு ஜல்லிகட்டுக்கு அனுப்பி வைச்சுட போறாங்க

பொங்கல் அன்று  மதியம் டேபிளில் பொங்கல் சாப்பிட அமர்ந்தேன். என் மனைவி பொங்கல் கொண்டு வந்து வைத்தாள் சாப்பிட்டது என்னடி பொங்கல் பண்ணி இருக்க கொஞ்சம் கூட இனிப்பாக இல்லையே இது என்ன பொங்கலா வெள்ளை சாதமா என்று கேட்டேன்.

அதற்கு அவள் இது பொங்கல் தானுங்க என்ன உங்களுக்கு சுகர் அதிகமாக இருப்பதால் சுகரே போடாமல் சமைச்சி இருக்கேன் என்றாள்

அடப்பாவி வெள்ளை சாதத்திற்கு பொங்கல் என்றா சொல்லிகிறாய் என்றேன் அதற்கு அவள் பதில் சொல்லவில்லை ஒரு முறை  முறைததுவிட்டு கிச்சன் பக்கம் போய்ருக்கிறாள். அவள் பூரிக்கட்டையை எடுக்கும் முன் நான் ஜுட் விட்டுகிறேன் மக்களே









7 comments:

  1. அருமையான பதிவு. நம்ம நண்பர் பொங்கலுக்காக பட்ட பாட நான் பார்த்து அறிந்தேன். அதையே நீங்கள் இங்கே இட்டு இருப்பது உங்கள் இருவரின் நட்ப்பிற்கு பெருமை சேர்க்கும்.

    தங்கள் ஸ்டேடஸ் அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அதானே,என்னடா உங்களுடைய ஸ்பெஷல் பொங்கல் போட்டோவை காணோமே,சரி ரொம்ப நல்ல பிள்ளையாக மாறிட்டீங்க போலன்னு நினைச்சு கொஞ்சம் ஏமாந்துட்டேன். சூப்பர் போட்டோவைத்தான் எடுத்து போட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. பொங்கலை விட தங்கள்பதிவு சுவைதான்!

    ReplyDelete
  5. வழக்கம் போல பொங்கலிலும் அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ஹஹஹஹ் மிகவும் ரசித்தோம்...அதுவும் மாட்டுப் பொங்கல்-மாட்டுப் பெண்கள்..ஜல்லிக்கட்டு...அஹஹஹஹ் செம....

    பொங்கலன்றும் பூரிக்கட்டையா!! ஹஹாஹ் பொங்கல பூரிக்கட்டையால செய்யறது மதுரைத் தமிழன் வீட்டுலதானோ?!!!!..

    ஆன் மறந்து போச்சு படம் சூப்பரு.....அதுல அந்த வார்த்தைகள்....சர்க்கரை இல்லாத பொங்கல் வைச்சதுக்கு இப்படியா...அஹ்ஹஹ்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.