தேன் குழல் செய்து மனைவியை மகிழ்விப்பது எப்படி?
கடந்த வாரத்தில் ஒரு நாள் என் மனைவியின் பிறந்த நாள். அவளுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்பதை விட அவளை சந்தோஷ பட வைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். எதுவாது செய்ய வேணும் என்று நினைத்த நான். என்ன செய்யலாம் என்று குழம்பிதான் போனேன். வழக்கம் போல அவள் ஆபிஸுக்கு போய் இருந்தாள் .நானும் என் குழந்தையை ஸ்விமிங்க் க்ளாஸ்க்கு கூப்பிட்டு போய்விட்டு வரும் வழியில் ,அம்மா பிறந்த நாளுக்கு என்ன பண்ணலாம் என்று நாங்கள் இருவரும் பேசிக் கொண்டே வந்தோம்.
அப்போது என் பொண்ணு டாடி, அம்மாவிற்கு பிடித்த நல்ல கேக்கை வாங்குவோமா என்றாள் . நான் கிறிஸ்துமஸ் & புத்தாண்டுக்கு வாங்கிய கேக்கே இன்னும் வீட்டு ப்ரிஜில் இருக்கு .அதனால் அது வேண்டாம் என்றேன் .அப்ப நாம ஹோட்டலுக்கு போகலாமா என்றால் அதுவும் வேண்டாம் ஏனென்றால் அம்மா வந்து அவளை அழைத்து போவதற்குள் நேரம் ஆகிவிடும் என்றேன்.
அப்ப மைசூர் பாகு அல்லது கேசரி பண்ணிக் கொடு அது அம்மாவிற்கு பிடிக்கும் எனக்கும் பிடிக்கும் என்றாள் அது நல்ல ஐடியாதான் ஆனால் ஸ்வீட்டா என்று முகம் சுளிப்பாளே அம்மா என்றேன்.
அப்பதான் நம்ம பதிவர் மைதிலி தன் பதிவில் தேன்குழல் பற்றி சொல்லி இருந்தது நினைவுக்கு வரவே அதையே செய்ய முடிவு எடுத்து அம்மா வருவதற்குள் செய்துவிடுவோம் என்று சொல்லி செய்ய ஆரம்பித்தோம்.
நம்ம பெண்கள் தேன்குழலை செய்வதை பெரிய கம்ப சூத்திரம் போல படம் காட்டுவார்கள் , அதை எப்படி செய்வது என்று இங்கே சொல்கிறேன் அது மிகவும் எளிதுதான்.
தேன்குழல் செய்ய தேவையானவை
4 கப் அரிசி மாவு
1/4 கப் உளுந்து மாவு
தேவையான அளவு உப்பு
1 டீஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் மிளகுத்தூள் ( உரப்புக்காக நான் சேர்ப்பேன் ஆனால் பலர் இதை சேர்க்கமாட்டார்கள்)
வெண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு, கொஞ்சம் அதிகம் சேர்த்தால் டேஸ்ட் அருமையாக இருக்கும்
இதையெல்லாம் சேர்த்து மிருதுவாக பிசைந்து, முறுக்கு சுடும் உழக்கில் போட்டு நன்றாக காய்ந்த எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்
பல பேருக்கு முறுக்கு வெந்துவிட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பது தெரியாமல் அதை முறுக்கி விடுவதும் உண்டு.
அதை எப்படி என்று தெரிந்து கொள்ள நாம் எண்ணெய்யில் இட்ட முறுக்கை , கரண்டியால் தட்டி பார்க்க வேண்டும் அப்படி தட்டி பார்க்கும் போது தட் தட் என்று சத்தம் வந்தால் முறுக்கு வெந்து விட்டது என்று அர்த்தம்.
இப்படிதானுங்க நான் என் மனைவிக்கு தேன் குழல் செய்து வைத்து அன்று இரவு டின்னரையும் ரெடி பண்ணி வைத்தேன்
வீட்டிற்கு வந்த என் மனைவி தேன் குழலை பார்த்தது உண்மையிலே சந்தோஷம் அடைந்து அதை மகிழ்வுடன் சாப்பிட்டாள்.
மக்களே இப்ப நீங்க கேட்க நினைப்பது இதுதானே? இப்படி எல்லாம் நீங்க பண்ணுவது பூரிக்கட்டையில் அடி வாங்காமல் இருக்க வழி செய்கிறீர்களா என்றுதானே?
அது சரிதான் நானும் அப்படிதான் நினைத்தேன்.
ஆனால் நடந்தது என்னவோ அதற்கு எதிர் மாறாகத்தான். சந்தோஷமாக நன்றாக இருக்கு என்று சாப்பிட ஆரம்பித்த அவள் சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் பூரிக்கட்டையை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதுக்குடி இப்ப என்னை அடிக்கிற நான் ஏதும் தப்பா ஏதும் சொல்லவில்லையே அல்லது செய்யவில்லயே என்று வலி தாங்கமுடியாமல் அலறிக் கொண்டே கேட்டேன்
அதற்கு அவள் சொன்னாள் நான் டயட்டில் இருப்பதுதான் உனக்கு தெரியுமே அப்ப எதுக்கு இவ்வளவு டேஸ்டாக பண்ணினாய் நீ அப்படி பண்ணியதால்தான் நான் அதிகம் தின்றேன் என்று சொல்லி மேலும் 2 அடி அடித்தாள்
மக்களே நியாயத்தை நீங்களே சொல்லுங்களேன்....அவனவன் மனையின் பிறந்த நாளை மறந்துவிடுவான் ஆனால் நான் ஞாபகம் வைச்சு இப்படி செய்தால் எனக்கு பூரிக்கட்டையால் ரிட்டன் கிப்ட் தருவது சரியா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ReplyDeleteஹஹஹஹஹஹ்ஹ்ஹ்! வாசித்துக் கொண்டே வந்த போது முதலில் "ஆஹா மதுரைத் தமிழன் இன்று பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பிவிட்டார்" என்று நினைத்துக் கொண்டோம்....அவங்க சொல்றதும் நியாயம் தானே அவங்க டயட்ல இருக்கும் போது.....ஆனாலும் ஏதோ ஒரு குறையிருப்பது போலத் தோன்றியது...ஹஹஹஹ் நீங்கள் அடிவாங்கியதைச் சொன்னதும் ...புரிந்தது அந்தக் குறை அதுதான் என்று....ஆமாங்க அவங்க சொல்றதும் சரிதானே....டயட்ல இருக்கறவங்களுக்கு இப்படி டேஸ்டியா எல்லாம் செய்தால்....டயட் மீல் செய்திருக்கலாம்ல.....சரி சரி யாரப்பா அங்கே இங்க இருக்கற நண்பர்களுக்கு அந்தத் தேன்குழல் பார்சல்.....ரிசிப்பிக்கு நன்றி
ReplyDeleteசகோதரிக்கு எங்கள் பிலேட்டட் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDelete(எல்லா நாளும் பிறந்தநாள் தானே!! அடுத்த நாளைப் பார்ப்போமா என்று நமக்கே தெரியாததால் நாம் ஒவ்வொரு நாளும் புதிதாய்தானே பிறக்கின்றோம்!)
உங்களைப் பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அடிவாங்கியதை கேட்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லையே... என்ன செய்ய ?
ReplyDeleteதேன் குழல் இனிக்க தானே செய்யும்...ஆனால் நீங்கள் சுகர் போட்டது சொல்லவே இல்லையே...
ReplyDeleteமலர்
முன்னே போனாலும் இடிக்கிறாங்க! பின்னால போனாலும் இடிக்கிறாங்க! பாவங்க நீங்க! ஹாஹா! தேன்குழல் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅட நல்லது செஞ்சாலும் அடிதானா! த்ஸொ த்ஸொ..... :(
ReplyDeleteப்பா இப்ப தான் நிம்மதி...
ReplyDeleteஎன்ன செஞ்சாலும் அடி விழுவது கன்பார்ம் ஆகிவிட்டது...
ReplyDeleteசரி விடுங்க... பிறந்த நாள் அன்று சந்தோஷமா கொண்டாடி இருக்காங்க...
பின்னே.... டயட்டில் இருக்கும் மாமிக்குச் சாப்பிட்டது செரிக்க வேண்டாமா....
ReplyDeleteதமிழரே.... இதுவும் ஓர் எக்ஸசையிஸ் தான்....
உண்மையாவே ரொம்ப சர்பரைஸ் தான் சகா! உங்களுக்கு வாய்யாடவும், photoshop பண்ணவும் தான் தெரியும்னு நினைத்தேன். மன்னிச்சு:(((( எல்லாம் சரி இப்படி கோணல் மாணலாக சுடுவார்கள். தேன்குழலை வட்டமாக பிழிவது கூட ஒரு கலைதான் அப்டின்னு நான் சொன்ன அதை அப்படியேவா சாப்பிட போறோம் , ஒடைச்சு சாப்பிடுவோம், என நான் முறுக்கு சுத்த கற்றுக்கொள்ளும் போதே என் அம்மாவிடம் சொன்ன அதே டயலாக உங்க கிட்ட கேட்கவேண்டி வரும். எப்படியோ முறுக்கு கட்டையும் , பூரிக்கட்டையுமா சந்தோசமா இருங்க:)
ReplyDelete\\\\மக்களே நியாயத்தை சொல்லுங்கள் /// என்னத்தை சொல்லி என்ன ஆகப் போகிறது. இது விதிச்ச விதி என்று ஆன பிறகு எப்பிடி பார்த்தாலும் அடி கென்போம். இதுக்குத் தான் சொல்வார்கள் நடுக்கடலுக்கு போனாலும் நக்குத் தண்ணி தான் என்று ம்..ம்..ம் சரி சரி உங்களுக்கு உடம்பெல்லாம் வலி எங்களுக்கு வயித்தில மட்டும் தான் ஏனா? சிரிச்சு சிரிச்சு தான் sorry முடியல ....ஆனாலும் தங்கள் முயற்சி மட்டும் பிரமாதம் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் ஏதாவது ஒன்று பலிக்கமலா விடப்போகிறது. நன்றி !
ReplyDeleteஎன்னத்த சொல்ல!!! ஒரு ஆணின் வேதனை ஒரு ஆணுக்கு புரிகிறது
ReplyDeletesame blood.....
ReplyDelete