Monday, January 26, 2015



படிக்க ரசிக்க நகைக்க  

தமிழிசையை அழுக விட்ட மோடி

இந்த மோடிக்காக என்ன உழைப்பு உழைக்கிறோம் ஒரு சேலை வாங்கி தந்து இருப்பாரா இந்த மோடி? :தமிழிசை

தான் பொண்டாடிக்கு ஒரு சேலை எடுத்து கொடுக்கு துப்பு இல்லாதவன் ஊரான் பொண்டாடிக்கு 100 சேலை எடுத்து கொடுத்தாராம் ஒருத்தர்



இனிமே பிஜேபிகாரன் அடுத்தவன் பொண்டாடிக்கு சேலை எடுத்து கொடுத்தா தப்பா நினைக்காதீங்க அவர்கள் தலைவன் வழியைதான் பின் பற்றுவார்கள்


என்ன மிச்சலுக்கு கொடுத்த சேலைகள் அன்பளிப்பு இல்லையாம் அது மிச்சல் ஒபாமா சிக்ககோவில் ஆரம்பிக்க இருக்கு சேலை கடைக்கு கொடுத்த சாம்பிளாம்

மோடி ரொம்ப கெட்டிக்காரய்யா யாரை எப்படி கவனிச்சா காரியம் நடக்கும் என்று தெரிஞ்சு வைச்சிருக்கிறார் # மிச்சல் ஒபாமாவுக்கு 100 சேலை அன்பளிப்பு

பட்டு சேலை என்றால் காஞ்சிபுரம் சேலைதான் ஆனால் அது தமிழர்கள் நெய்தது என்பதால் அதை கொடுக்காமல் பனாராஸ் சேலைகளை மோடி வாங்கி கொடுக்கிறார். இங்க கூட தமிழ் வஞ்சிக்கப்படுகிறது

மிச்சல் ஒபாமாவுக்கு சேலை அன்பளிப்பு கொடுத்த மோடி ஒபாமவுக்கு வேஷ்டியை ஏன் அன்பளிப்பாக கொடுக்கவில்லை

மோடி சரியான கஞ்சர் 100 சேலை கொடுப்பதற்கு பதிலாக 100 பவுன் தங்க நகை கொடுத்திருக்கலாமே

இது டிவிட்டரில் நா.குமரேசன் என்பவர் பதிந்தது படித்ததில் பிடித்தது


நா.குமரேசன் @kumaresann45 7h7 hours ago

ஒபாமா: மிஸ்டர் மோடி! பார்டர்ல ஏதோ பிரச்சனை இருக்கும் போல தெரியுதே?! மோடி: சான்சே இல்லை! அந்த 100 புடவையும் நானே செலக்ட் பண்ணியது! ஓபாமா:..??



டிஸ்கி: எனது பதிவுகள் படித்து ரசித்து சிரித்து கலாய்க்கமட்டுமே எழுதப்படுகிறது யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அல்ல அது ஒபாமாவாக, மோடியாக , கலைஞராக, ஜெயலலிதாவாக,ஸ்டாலினாக, சாருவாக, விஜயகாந்தாக, தமிழிசையாக , எனது உறவினர்களாக, நண்பர்களாக ஏன் தமிழ் பதிவர்களாக  இருந்தாலும் சரி எல்லோரும் ஒன்றுதான்..ஆஆ ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் என்னை பூரிக்கட்டையால் அடிக்கும் மனைவியாக இருந்தாலும் சரி



அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. ஹஹஹஹஹஹ் மோடி ஏன் வேஷ்டி கொடுக்கல....? அதுவும் சவுத்துப்பா....சவுத்துனாலே வடக்க உள்ளவங்களுக்கு மதராசிதான்....அதனாலதான் வேஷ்டி கொடுக்கலை...

    ReplyDelete
  2. பார்டர் :)))))) பிரச்சனை:))))) சும்மா சொல்ல:)))) கூடாது:))) செம காமெடி:)))
    வானதி ஸ்ரீனிவாசனை யை விட்டுடீங்க?? அவங்களும் புலம்பினதா கேள்வி!! தமிழிசையை விட தேர்தல் பணியில் நொந்து நூடில்ஸ் ஆனது மேடம் தானே. :)))

    ReplyDelete
  3. அந்த 100 சேலையில் ஒரு சேலையையாவது
    மிச்சேல் கட்டுவாரா என்பது தான் என் கவலை.... ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. அருணா!
      கட்டவே மூடியாது! அவர்கள் உயரம் அப்படி! எனக்கு எப்படி புடவை உயரம் தெரியும், என் பெண்ணுக்கு சேலை கட்டிக்க ஆசை; புடவை உயரம் சரி வரவில்லை--இத்தனைக்கும் என் பெண் ஐந்து அடி எட்டு அல்லது எட்டரை அங்குலம் தான் உயரம். Mrs. ஒபாமா ஆறு அடி இரண்டு அங்குலம் உயரம் என்று நினைக்கிறேன். நம் ஆட்கள் கொஞ்சம் களிமண் மண்டையன்கள்! இதில் கோட்டை விட்டு இருப்பார்கள்.

      Delete
    2. மன்னிக்கவும் அருணா!
      என் சகோ சொன்னது..Mrs. ஒபாமா உயரம் ஆறு அடி இரண்டு அங்குலம் இல்லை-அது தவறு!

      ====.>>அவர்கள் உயரம் 5 அடி 11 to 11.5 அங்குலம் தான்!!
      நன்றி!

      Delete
    3. ரொம்ப முக்கியம், நம்பள்கி!
      எவனோ எவன் பொண்டாட்டிக்கோ புடவை வாங்கி கொடுத்தால்....
      எல்லோருக்கும் வயித்தெரிச்சல்போல! டேக் ஜெலுசில் மை பாய்ஸ் & கேர்ள்ஸ்

      Delete
  4. மோடி இருக்கும் வரை பார்டர் பிரச்சனை வராது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.