உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, January 19, 2015

பரபரப்புக்காக மக்களின் மனதில் நஞ்சை விதைக்கும் விகடன் (ஆ... அமெரிக்க மாப்பிள்ளை! ’ அக்கரையிலிருந்து ஓர் அலறல் )பரபரப்புக்காக  மக்களின்  மனதில் நஞ்சை விதைக்கும் விகடன் (ஆ... அமெரிக்க மாப்பிள்ளை! ’ அக்கரையிலிருந்து ஓர் அலறல் )

விகடன் குழுமம் பத்திரிக்கைகள் என்றாலே ஒரு காலத்தில் மக்களிடையே மதிப்பு உண்டு காரணம் அவர்கள் செய்தியை ஆராய்ந்து உண்மையை மட்டும் தருவார்கள். அதிலும் பெண்கள் படிக்கும் பத்திரிக்கையான அவள்விகடனில்  அதன் தரமும்  உண்மையும் அதிகமாக இருக்கும் ஆனால் இப்போதோ அதன் நிலை தலை கீழ். உதாரணத்திற்கு ஆ... அமெரிக்க மாப்பிள்ளை! ’ அக்கரையிலிருந்து ஓர் அலறல் என்ற ம.பிரியதர்ஷினி எழுதிய கட்டுரையை சொல்லாம்.


அமெரிக்கவில் இருந்து ஒரு பெண்மணி இந்த கட்டுரையாரை போனில் தொடர்பு கொண்டு பேசியதன் விளைவால் எழுதியது என்று இந்த கட்டுரையாளர் ம.பிரியதர்ஷினி கட்டுரையின் ஆரம்பித்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி யாரோ அமெரிக்காவில் இருந்து பேசுகிறேன் என்று சொன்னாலே (ஒரு வேளை அந்த நபர் தமிழகத்திக் குக்கிராமத்தில் இருந்து போன் பண்ணினாலும் அதை நம்பி விடும் போலிருக்கிறது )விகடன் குழு அதை உண்மை என்று எதையும் ஆராயமலே எழுதி தவறான விஷயத்தை மக்கள் மனதில் நஞ்சை ஊற்றிவிடும் போலிருக்கிறது.

அதுமட்டுமல்ல தமிழகத்தின் மிகப் பெரிய பழமையான விகடன் குழுமத்தில் பொறுப்பாசிரியாரக செயல்படுபவர்களுக்கு கூட கொஞ்சம் கூட அமெரிக்க பேசிக் சட்டதிட்டங்கள் தெரியவில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது. இதை சொல்ல காரணம் கட்டுரையாளருக்குதான் ஒன்றும் தெரியவில்லை என்றால் ஒகே ஆனால் அதை பார்த்து படித்து வெளியிட  அனுமதி கொடுத்த பொறுப்பு ஆசிரியருக்கும் ஒன்றும் தெரியவில்லை அதை விட வெட்க கேடு வேறு என்ன இருக்க முடியும்.

இந்த கட்டுரையை படித்த வெளிநாடுகளில் வசிக்கும் விகடன் வாசகர்கள் வரிந்து கட்டி அங்கு நடப்பதை எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதை ஆன்லைனில் படிக்கும் வாசகர்களுக்கு மட்டும் போய் சேரும். ஆனால் அந்த கருத்துக்கள் புக்கை வாங்கி படிப்புவர்களுக்கு போய் சேரவே வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் அந்த கட்டுரையை படித்து அமெரிக்க மாப்பிள்ளைகள் என்றாலே ஏதோ கொடுமை படுத்துவதாகவே நினைத்து கொள்வார்கள். இப்படி தவறான கருத்தை வெளியிடுவது விகடன் குழுமத்திற்கு அழகாக என்ன?

தவறுகள் ஏற்படுவது இயற்கை இனிமேலாவது விகடன் குழுமம் பொறுப்போடு செயல்படுமா  என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்


கிழே அந்த கட்டுரையாளர் எழுதிய கட்டுரை இடது பக்கமும் அதற்கு வந்த கருத்துக்களை வலது பக்கமும் தந்து இருக்கிறேன். அதை படித்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லவும். முடிந்தால் பலருக்கும் பகிரவும்


'கயமையே உருவாக ஒரு கணவன்’ என்ற தலைப்பில், கடந்த இதழின் 'என் டைரி' பகுதியில் ஒரு கடிதம் இடம்பிடித்திருந்தது. அது, கணவனால் தான் படும் துன்பம் பற்றி வாசகி ஒருவர் எழுதியிருந்த கடிதம். அதைப் படித்த அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வாசகி (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) நம்மை போனில் தொடர்புகொண்டார். திருமணமாகி கணவனுடன் அமெரிக்கா செல்லும் நம் பெண்கள், அங்கே படும்பாடுகளை ஒவ்வொன்றாக அவர் எடுத்துவைக்க... நம் கண்கள் குளமாகின!

''இப்போவெல்லாம், 'அமெரிக்க மாப்பிள்ளைங்க, இன்ஜினீயரிங் படிச்ச பொண்ணுதான் கேட்கிறாங்க’ என்ற காரணத்துக்காகவே, பெண்களை எல்லாம் பொறியியல் படிக்க வைக்கிறாங்க பெற்றோர்கள் பலர். ஆனா, படிச்ச பொண்ணை, பெரும்பாலான அமெரிக்க மாப்பிள்ளைங்க தேடிக் கல்யாணம் பண்றதுக்குக் காரணமே அங்க மனைவியை வேலைக்கு அனுப்பினா காசு கொட்டும், வீட்டு வேலைகளைப் பார்க்கவும் அடிமை கிடைச்ச மாதிரி இருக்கும்ங்கிற நினைப்புலதான். ஆக, ரெட்டை வேலைச்சுமையால வாடி, வதங்கதான் பல பொண்ணுங்களும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு கல்யாணமாகி இங்க வர்றாங்க.

என் கணவரோட சித்தப்பா பொண்ணையும், அமெரிக்கா மாப்பிள்ளை மோகத்துலதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்து இங்க அனுப்பி வெச்சாங்க. அவ எவ்வளவோ கெஞ்சியும், 'குழந்தை பிறந்தா வேலைக்குப் போக முடியாது'னு, குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடச் சொல்லிட்டான் கணவன். 'இப்படி மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கிற பொண்ணு வேணுங்கிறதாலதான், வரதட்சணை எல்லாம் வேண்டாம்னு அவர் என்னைக் கட்டிக்கிட்டாருனு இப்பதான் புரியுது’னு வெறுமையா புலம்புறா அந்தப் பொண்ணு.

சரி, அப்படி சம்பாதிச்சு போடுற மனைவிக்கு அதுக்கு ஈடான அன்பும், சுதந்திரமும் கொடுக்கிறாங்களானா, அதுவும் கிடையாது. எங்க அவ தன் கை மீறிப் போயிடுவாளோனு, அந்த நாட்டோட லைஃப் ஸ்டைல் எதையுமே அவளைக் கத்துக்க விடாம, தன்னைச் சார்ந்திருக்கும் அடிமையாவேதான் வெச்சிருக்க நினைக்கிறாங்க. டிரைவிங் கத்துக்க அனுமதிக்கிறதில்ல, அவங்க கையில கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு கொடுக்கிறதில்ல, நாலு பேரோட பழகும் சந்தர்ப்பங்களைத் தர்றது இல்ல. சம்பாதிச்சிக் கொடுக்கும் அடிமையாத்தான் மனைவி அவங்களுக்கு இருக்கணும்'' என்று விரக்தியோடு சொன்னவர், அடுத்து சொன்னது, பேரதிர்ச்சி ரகம்!

''என் அக்கா தோழியின் கணவர், கிட்டத்தட்ட எட்டு வருஷம் அவளை இப்படி டார்ச்சர் பண்ணிட்டு, ரெண்டு பெண் குழந்தைகளையும் பெத்த நிலையில, மனைவிக்குத் தெரியாம தனக்கு மட்டும் கிரீன் கார்டு வாங்கிட்டார். 'வா... இந்தியா போயிட்டு வரலாம்’னு ஒரு டிரிப் மாதிரி கூட்டிட்டுப் போய், மனைவியையும் பெண்களையும் அங்கயே விட்டுட்டு, அமெரிக்கா வுக்கு திரும்பி வந்துட்டார்.

இந்தியாவுல இருக்கிற கணவனைப் பத்தி, இந்தியாவுல புகார் செஞ்சாலே, வாய்தா மேல வாய்தா போகும். இதுல அமெரிக்காவுல இருக்கிற கணவன் மேல புகார் செஞ்சா, அவனை இந்தியாவுக்கு வர வைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்படியே கேஸ் போட்டாலும், அது சம்பந்தப்பட்ட பொண்ணுக்கு ஒரு கட்டத்துக்கு மேல தாங்க முடியாத மனச்சோர்வையும், பணக் கஷ்டத்தையும் தரும். அதுக்குப் பயந்தே ஏமாற்றுக் கணவன், சைக்கோ கணவன், டார்ச்சர் கணவன் மேலயெல்லாம் பல பெண்கள் கேஸ் போடுறதில்ல.

இந்திய நிறுவனத்துக்காக, அமெரிக்காவில் இருந்தபடி வேலை பார்க்கிற ஆண் (ஆன் சைட்) மேல, இந்தியாவில் இருக்கும் அவனோட நிறுவனத்தில் புகார் செய்தா, அவனை வேலையை விட்டு நீக்கறதுக்கு கொஞ்சமாச்சும் வாய்ப்பிருக்கு. ஆனா, இங்கிருந்தபடி இந்திய கம்பெனிக்காக 'ஆன் சைட்’ல வேலைக்குப் போயிட்டு, அப்படியே அமெரிக்க கம்பெனியில வேறு வேலைக்கு மாறிட்டா, அமெரிக்க சட்டத்துக்குள்ள அவன் வந்துடுவான். அப்புறம் சட்டம் ரொம்ப சிக்கலாயிடும்.

அதேசமயம், இங்க விவாகரத்து சுலபமா கிடைக்கும். ஆனா, அந்த இந்திய தம்பதியின் குழந்தை அமெரிக்காவுல பிறந்திருந்தா, சட்டப்படி அது அமெரிக்காவோட சொத்து. இந்தியாவுக்கு தன்னோட அம்மாவால நிரந்தரமா அழைச்சுட்டு போக முடியாது. அப்பா, அமெரிக்க அரசாங்கத்துகிட்ட புகார் (ஆம்பர் அலர்ட்) கொடுத்தா, அமெரிக்க போலீஸ் நேரா இந்தியாவுக்கே வந்து குழந்தையைத் தூக்கிட்டு போயிடுவாங்க. ஆக, தன் மனைவியை குழந்தையை வெச்சு பழிவாங்க கணவன் நினைச்சுட்டா, அது அவனுக்கு சாதகமாத்தான் இருக்கும்.

ஒருவேளை குழந்தையோட அமெரிக்காவிலேயே இருந்தாலும், 'விசிட்டேஷன் மெயின்டெனன்ஸ் ரைட்ஸ்’ அப்படிங்கற சட்டப்படி அப்பாங்கற உரிமையோட அந்தக் குழந்தையைப் பார்க்க வரும் கணவன், அதுகிட்ட அதன் அம்மாவைப் பற்றி தப்பா சொல்லிக் கொடுத்து, மனசைக் கரைச்சு, அம்மாவுக்கு எதிரா திருப்பின சம்பவங்கள் நிறையவே எனக்குத் தெரியும்.

மொத்தத்துல, தன் மனைவி கஷ்டப்படணும்னு அமெரிக்க மாப்பிள்ளை நினைச்சுட்டா, அது சுலபம். அவன்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நம்ம இந்தியப் பொண்ணு நினைச்சா, அது ரொம்ப கஷ்டம்.

இப்படிப்பட்ட சிக்கல்களுக்கெல்லாம் பயந்துதான், 'இவன் கூடவே குப்பை கொட்டிடலாம்'னு சகிச்சுட்டு பல பெண்கள் அவதிப்படறாங்க. இந்த எண்ணம் இப்ப இருக்கிற யங்க்ஸ்டர்ஸ்கிட்ட நிறையவே இருக்கு. ஒருவேளை, பொண்ணுக்கு அமெரிக்காவுல டிவோர்ஸ் கிடைச்சுட்டாகூட, அந்தப் பொண்ணை இந்தியாவுக்கு வரவிடாம பார்த்துக்கிறதுலதான் மும்முரமா இருக்காங்க பெத்தவங்க. காரணம்... ஊர் பேச்சு கொல்லுமேங்கற பயம்தான். அதனாலேயே 'என் பொண்ணு ரொம்ப பிஸியா இருக்கா'னு மெயின்டெயின் பண்ணுவாங்க. அப்படியே தனியா இந்தியா வந்தாலும், 'அவ ஹஸ்பண்ட் ரொம்ப பிஸி'னு சமாளிப்பாங்க.

இதையெல்லாம் சொன்னதுமே, அமெரிக்காவுல இருக்கற இந்திய மாப்பிள்ளைகள் எல்லாருமே இப்படித்தான்னு பெற்றோர்கள் பயப்படத் தேவையில்லை. ஆனா, அமெரிக்க மாப்பிள்ளை, வெளிநாட்டு வேலையில இருக்கிற மாப்பிள்ளைனு சந்தோஷமா பொண்ணைக் கொடுக்கிறதுக்கு முன்ன... அந்த சந்தோஷத்துக்கு கியாரன்டி இருக்கானு ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிக்க மறக்காதீங்க''

- கனத்த மனதுடன் பேசி முடித்தார் அந்த வாசகி.

சொந்தமில்லை... பந்தமில்லை!

தன் பேச்சினூடே அந்த வாசகி சொன்ன ஒரு விஷயம், கல்லையும் கரைப்பதாக இருந்தது. அது -

''இந்தியாவைச் சேர்ந்த 55 வயசான பெரும் பணக்காரப் பெண்மணியை எனக்கு நல்லா தெரியும். முப்பது வருஷத்துக்கு முன்ன கணவரோட டார்ச்சர் காரணமா பிரிஞ்சு வாழ ஆரம்பிச்சாங்க. சின்னச் சின்ன வேலைகளுக்குப் போய், நைட் ஷிப்ட் பார்த்துனு குழந்தையை ஆளாக்கினாங்க. ஆனா, சட்டரீதியான உரிமையைப் பயன்படுத்திக்கிட்டு, குழந்தையைப் பார்க்க வர்றப்ப எல்லாம் மனசை கரைச்சு அவங்ககிட்ட இருந்து குழந்தையைப் பிரிச்சுட்டார் கணவர். இன்னிக்கு பேரு, பணம் எல்லாம் இருந்தும்கூட, மகன் இல்லாம தனியா தவிச்சுட்டிருக்காங்க அந்தப் பெண்மணி.

கல்யாணமாகி, நிறைஞ்ச முகத்தோடதான் அமெரிக்கா போறாங்க. ஆனா, கணவன் - மனைவிக்கு இடையில பிரச்னை வந்துட்டா, வயசான காலத்துல ஊர் திரும்பறப்ப... சொந்தம்னு யாருமே இல்லாம, குழந்தையும்கூட இல்லாம தனிச்சு வர்ற நிலைமையிலதான் பல பெண்கள் வாழ்ந்துட்டிருக்காங்க''.
அது என்னங்க அமெரிக்க மாப்பிள்ளைகள் மேல் இவ்வளவு கோபம் இந்த கட்டுரையில். நானும் ரொம்ப வருஷமா இங்கே இருக்கிறேன், ஒரு ஆண் கூட தன் மனைவியை அடித்து கொடுமை படுத்தி பார்த்ததில்லை. இங்கேயும் குடிக்காத ஆணை குடிக்க வைத்த நம்மூர் பொண்ணுங்க இருக்கிறாங்க. பார்ட்டி , பார்ட்டி நு பிள்ளைகளை படிக்க வைக்காத தாய்மாரும் உண்டு. சண்டையே போட்டுக்காத கணவன் மனைவி இந்த உலகம் முழுக்க தேடினாலும் கிடைக்காதுங்க.சின்ன சண்டைகளை பெரிதாக்காமல் இருந்தாலே போதும். உண்மையை சொல்லனும்னா நிறைய பொண்ணுங்களுக்கு இந்தியாவில் மாமியார் மாமனார் சண்டை பெரிதாகி, கூட இருக்க பிடிக்காமல் கணவனை ரொம்ப வற்புறுத்தி அமெரிக்க மற்றும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். நான் பார்த்து நிறைய வீடுகளில் ஆண்கள் பெண்களுக்கு நிகரா சமையல், வீட்டு வேலை செய்து, உதவராங்க. பெண்ணை வேலைக்கு அனுப்பி துன்பபடுதுவதும் ரொம்ப குறைவு தான்.அதுவும் கூட பெண்களே விரும்பி தான் வேலை செய்கிறார்கள். இல்லேன்னா பெரிய வீடு, கடன் , சேமிப்பு இவற்றை மனதில் கொண்டு இருவரும் உழைக்கிறார்கள். தவறு இல்லை. தேவைகள் குறைவாக உள்ளவர்கள் கணவன் மட்டுமே வேலை செய்கிறார், இதுவும் இங்கே சகஜம். நம் தமிழ் ஆண்களின் முதல் கோரிக்கையே முழு நேர ஹவுஸ் wife வேண்டும் என்பது தான் இங்கே. அமெரிக்க என்று இல்லை, எந்த மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுத்தாலும் விசாரித்து கட்டி கொடுக்கணும். ####### , பெண் விஷயம் மோசடி என்பதெல்லாம் நண்பர்களையும் உறவினரையும் தெருகாரர்களையும் விசாரித்தால் அப்பட்டமா தெரிந்து விடும். பொண்ணுங்க வீட்டு சைடு ம் இப்போல்லாம் எதிர்பார்ப்பு அதிகம். கிரீன் கார்டு இருக்கா, சம்பளம் எவ்வளவு என்று விசாரிப்பது போல மற்ற விஷயத்திலும் உஷாரா இருக்கணும். கல்யாணம் என்பது ஒரு பிசினஸ் என்று தானே பெண் வீட்டாரும் பையன் வீட்டாரும் நினைகிறார்கள். இவ்வளவு சம்பாதிக்கிறா#, நான் இவ்வளவு வரதட்சனை தருகிறேன் என்று தானே கல்யாண பேச்சுக்கள் ஆரம்பிக்கின்றன. அனேகமா நான் சந்தித்த தமிழக , இந்தய பெண்கள் அனைவருமே ரொம்ப சமத்து. மற்றவர்களிடம் திருஷ்டி பட கூடாதுன்னு இப்படி புலம்புராகளோ என்னவோ. ஒழுங்கா நிம்மதியா ஆசைகளை குறைத்து வாழ தெரிந்தால் அமெரிக்கா என்ன , அமிஞ்சிகரை என்ன, எல்லாமே ஒண்ணு தான்.
Mangai      Like (226)

நான் அமெரிக்காவில் வாழ்ந்து கிரீன் கார்டு வங்கி இருக்கிறேன். அதை திரும்ப கொடுத்து விட்டு இங்கிலாந்து வந்து இங்கே செட்டில் ஆகி விட்டேன். என் நண்பர்கள் வட்டம் பெரிது. எனக்கு தெரிந்து, இங்கு குறிப்பிட பட்டிருக்கும் பாதிக்க பட்ட பெண்ணை போல் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், ஒரு சாடிஸ்ட் கணவனிடம் வாக்கப்பட்டு விட்டால், அமெரிக்க போகும் பெண் என்று இல்லை, எந்த நாட்டிலும் பிரியதர்ஷினி குறிப்பிடும் பெண்களை போல் பலர் இருப்பார்கள். இது நாட்டை பொறுத்த விஷயம் இல்லை, குணம் பற்றிய விஷயம். அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்தால் போதும் என்று எதையும் விசாரிக்காமல் தாலி கட்டி கொண்டு விமானம் ஏறினால் இப்படி தான் ஆகும். அமெரிக்க மாப்பிள்ளை குறை சொல்லாமல் உங்கள் பெற்றோரை குறை சொல்லுங்கள், அவர்கள் மாப்பிள்ளை பார்த்த லட்சணத்தை பற்றி தெரிந்து கொள்ளட்டும்.
Ebinezer Rajaram

Hmmm... I am an Indian female who came here on a job assignment so I was independent financially right from the beginning. Women can be abused - I agree. But why should the woman put up with it for years?! The woman has the liberty to call 911 and complain; she can walk out of her marriage; seek free counseling services; or end the marriage. HOWEVER, if she is WILLING to put up with the marriage to: a) stay in the USA at all costs; b) because of her 'traditional views'; and c) because she cannot end the marriage, it is entirely her fault.
Sukanya

2 வருஷமா இங்க இருக்கேன் எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. நான் அமெரிக்க வரும் பொழுது H4 விசா ல தன் வந்தேன் நான் வந்த ஒரு மாதம் ல என் கணவர் எனக்கு கிரெடிட் கார்டு வாங்கி தந்துவிட்டார். ஒரு சமயம் ஒரு கார் விபத்துல அவர் license purse எல்லாம் வீட்லே மறந்து வெச்சிட்டு போனதால என் கணவர் காவல் நிலையம் செல்ல வேண்டி நிலைமையில் நான் மட்டும் கையில் காசு கூட இல்லாம தனிய இருக்க வேண்டிய நிலைமைல கூட என் கணவர் எனக்கு வங்கி கொடுத்த கிரெடிட் கார்டு தான் என்னை 300 மைல் தள்ளி இருக்கற எங்க வீட்டுக்கு பத்திரமா கொண்டு வந்து சேர்த்தது. எப்பவும் என் கைபெசில் எங்க அம்மா வீடு லேன்ட் லைன் ல இலவசமா பேசற வசதியும் பண்ணி கொடுதிருகரு இதோ இன்னைக்கு வரை ஒரு நாளைக்கு நன் ஒரு வேலை மட்டுமே சமைப்பேன் ஒரு குறை சொன்னது இல்ல உடம்பு முடியல ஹோட்டல் போகலாம் இல்ல அவரே சமைச்சு கொடுக்கற சுகம் நிச்சயம் நன் இந்தியாவில் இருந்திருந்த கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை
Radhika Balamurugan

நல்ல மாப்பிள்ளை அமைவது கஷ்டம். நல்ல பெண் கிடைப்பது அதை விட கஷ்டம் ( ஆண் பெண் ratio அப்படி). டிகிரி முடித்த பெண்களின் (அல்லது பெற்றோரின்) எதிர்பார்ப்பு அமெரிக்காவில் IT துறையில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை தான். அப்படி அமையாத பட்சத்தில் தான் உள்ளூர் மாப்பிள்ளைகளுக்கு சம்மதம் சொல்கின்றார்கள் (love marriage தவிர்த்து). என் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பெண் தேடும் பொழுது கிடைத்த அனுபவங்கள் பல.

மனைவியை சித்ரவதை செய்யும் கணவன் எந்த ஊரில் இருந்தாலும் அதைத்தான் செய்ய போகின்றான். பின் ஏன் அமெரிக்க மாப்பிள்ளை என தலைப்பில் போட்டு நன்றாக வாழும் அமெரிக்க குடும்பங்களை மன வருத்தப்பட வைக்கின்றீர்கள்.

மனைவியால் பிரச்சினை என்றாலும் ஆண் சட்ட ரீதியாக விலகுவது இந்தியாவிலும் கூட அவ்வளவு சுலபம் இல்லை. பெண் தொல்லை கொடுக்க முடிவு செய்தால், சட்டம் பெண்களுக்கு சாதகமாகத்தான் இருக்கின்றது.
kannan

I have spent more than six years in USA, really that's the Golden period of my life time, I came from village though I was able to survival there alone.Learned many things(Driving, good English etc) in short period.

PLEAR VIKATAN DON'T PUBLISH THESE KIND OF ARTICLES
Mohanram

 I am living in Australia and many of friends are in U.S. I don't think we follow like this. Vikatan must not publish these type of article based on one persons view, they should ask several overseas Indian residents. My wife is having debit card on her own and I initiated my wife to learn driving where she refused to learn in the beginning. Most of husbands are doing housework in overseas and they are treated as slave and not wife.

Govind

நல்லவர்ககளும் கெட்டவர்களும் இரு பாலரிலும் எல்லா நாடுகளில் உள்ளனர் என்பது தான் நிஜம். ஆண்கள் அனைவரும் அல்லது பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று சொல்வது ###########. அனால் இந்த கட்டுரையில் ஆராயாமல் எழுதபட்டிருக்கும் ஒரு விஷயம் என்னவெனில், அமெரிகாவில், நம் நாட்டு பெண்களுக்கு இந்தியாவை விட பாதுகாப்பும் உரிமையும் அதிகம். இந்தியாவை போன்று பெண்களை அடைத்து வைத்து கொடுமை படுத்தினால், அமெரிக்க சட்டம் கண்டிப்பாக வாழ்நாள் முழுதும் களி சாப்பிட வைத்து விடும், அதுவும் இந்தியாவை போன்று சட்டம் இழுதடிகபடுவதில்லை. அதுபோல் வேலை பார்க்கும் பெண்களுக்கு க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட் எல்லாம் வாங்க கணவனின் எந்த தயவும் இங்கு தேவை படுவதில்லை. அப்படியே மனைவியின் பொருளை அனுமதியின்டி எடுத்தால் ...அதுவே இங்கு பெரிய குற்றம்.
Alex
மனைவியை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் அமரிக்காவில் இருந்தாலும் இதை செய்வான் ஆப்பிரிக்க காட்டில் வாழ்ந்தாலும் இப்படித்தான் இருப்பான். எனக்கு தெரிந்து நான் வசிக்கும் இடத்தில் ஒரு குடும்பத்தை கூட கட்டுரையில் உள்ளது போல் பார்த்ததில்லை. இங்கு வாழ்க்கை நடத்த வேண்டும் வேண்டும் என்று ஆண்களை விட பெண்களே அதிகம் விரும்புகிறார்கள். இங்கு தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துவிட்டால் இவர்களுக்கு குழந்தை தவிர எந்த சிந்தனையும் இல்லை என்றே சொல்லலாம்.
கட்டுரையில் உள்ளது பொல 2% சதவிகிதம் இருக்கலாம்.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்காரத்தை வைத்து ஒட்டு மொத்த தமிழகத்தை அப்படித்தான் என்று யாராவது கூறுவார்களா? அது போல இது யாரோ ஒருவருக்கு நடக்கும் பிரச்சனைகள்.
இந்த மாதிரி பிரச்சனைகள் தைரியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே நடக்கும்.

Baskaran

Full of ####### statements and contradictions.. Not all educated ladies that enter US after marriage will end up in a job.. there are visa restrictions (only L2 can work, H4 cannot). It is very very difficult to get a job nowadays without a genuine experience, so even if the husband tries to get, it may still be difficult..Also medical law account professionals cannot practice without going through the local qualifying examinations.. Inspite of all these,if they get into a job, husband cannot stop them from having a credit card and maintain their bank accounts..and if ladies cannot drive or have credit card, the husband will have to run all the errands.. so most husbands prefer to have their wives be independent, know driving..I have been in US for several years and never seen heard a single Indian family where a lady had to suffer this extremity..
Srikrishnan

In today's world only male are facing more problems then female. Most of the girls who get married to american boy, don't want to even visit India since they need to serve couple of days for their mother in law and father in law. I knew so many cases where these poor boys are not even allowed to talk to their parents. Look at the way these girls dress. Pl write articles after knowing facts. I do agree one in 100 will have this type of case mentioned in your article. I request the editor not to publish these misleading articles any more and reduce the reputation of your magazine.

Ramakrishnan
இந்திய திரும்பும் எண்ணம் இருந்தாலும் கல்யாணமாகி மனைவியோடு அமெரிக்காவில் குடியேறும் அனைவருக்கும் தெரியும் இந்திய திரும்ப மனைவி அனுமதிக்க மாட்டாலென்று. பொதுவான காரணங்கள் 1) மாமியார் மாமனார், நாத்தனார், கொழுந்தனார் ஆகிய உறவுகளிடமிருந்து தொந்திரவு இல்லை 2) கணவனின் முழு கவனமும் குடும்பத்தின் மேலே 3) எளிதான ஆனால் சௌகரியமான வாழ்கை முறை, 4) தேவையான சுதந்திரம் 5) எல்லாவற்றிலும் பங்கேடுத்துகொள்ளும் கணவன் 6) வேலைக்கு போகும் பெண்ணென்றால் தன் பிறந்த குடும்பத்தின் நிதி சுமைக்கு உதவ வாய்ப்பு... இப்படி பல காரணங்கள். இந்த கட்டுரையில் சொல்லிய மாதிரி ஆண்கள் இருக்கிறார்கள் ஆனால் அது 10% கீழே தான். அப்படியே கொடுமை படுத்தினாலும் அவனுக்கு தண்டனை வாங்கித்தர அமெரிக்காவில் தான் சுலபம் இந்தியாவில் மிகவும் கடினம். இந்த 911ஐ வைத்து சில பெண்கள் கணவனை டார்சர் செய்யும் கதைகளுமுண்டு. கதை இப்படியிருக்க இந்த கட்டுரை ஒரு தலை பட்சமாகவும் அதுவும் தவாறான தகவல்கள் கொடுப்பாதாகவும் உள்ளது.
Ramesh

Please understand US laws before you put up a article like this. Men are in much worse condition. If wife reports her husband is putting her thru domestic violence or mentally torturing her he will end up in jail. I am not denying that there could be exceptions and you need to understand that those are really exceptions. Women who move to US get all the freedom in the world and do learn to drive, move into the social setup very well and are quite independent.################### Please do not generalize and make up such articles. Please visit US talk to at least 100 women there from different backgrounds (metro brought up, from village, from north south, from different religion, from different economic status). That would make a good article. Just taking the word of some Jane and trying to write up an article as if that reflects the situation in US is totally ridiculous.
Dinakaran

Avalvikatan has a reputation and I am reading this book may be for last 10 years. But not happy with this article. My humble opinion is if Lady is not brave and educated(about human personality) then exploited, well it happens more in our home country than outside. There are charities in west at least to help the vulnerable. Please do not create unnecessary fear in public just because one person's experience is bad. Girls should learn about life and exploiting personalities and be alert wherever they are in the world. Just studying textbook and getting the degree and having a job is not enough to lead a life.
Kas

ஒரு பானை சோற்றுக்கு வேண்டுமானால் ஒரு சோறு பதமாக இருக்கலாம், ஒரு சிலரோட பிரச்சினைகளை வச்சு அமெரிக்க வாழ்க்கையையே பயங்கரமானதாகக் காட்டுறது ரொம்பத் தப்பு. நாங்களும் 15 வருஷமா கலிபோர்னியால இருக்கோம். நூத்துக் கணக்கான தமிழ்க் குடும்பங்களைத் தெரியும். பொதுவா நம்ம ஊரை விட பெண்கள் அதிக உரிமையோடயும், சுதந்திரத்தோடயும் இருக்கிறாங்க. எத்தனை சதவீத குடும்பங்கள்ல பெண்கள் கொடுமைப் படுத்தப் படறாங்கண்ணு பாத்தா, நம்ம ஊரை விட அமெரிக்கால ரொம்ப ரொம்ப கம்மி சதவீதம்னு என்னால உறுதியா சொல்ல முடியும். இன்னொண்ணு, கனடா, இங்கிலாந்துனு உலகம் பூரா தமிழர்கள் குடியேறி இருக்காங்க, ஏன் அமெரிக்கால இருக்கற தமிழர்களப் பத்தி மட்டும் எப்பயும்
  
Did you verify at least some of the statements from the reader who told you before publishing this vitriolic article. Also, Indian women prefer to be overseas for one important reason, their better halves help them through with household chores equally unlike the ones in India where even if the better halves are willing, there are other social constraints


அன்புடன்
மதுரைத்தமிழன்

Courtesy : Vikatan
படமும் கட்டுரையும் விகடனில் இருந்து பதிவிற்காக  எடுத்து கையாளபட்டு இருக்கிறது. நன்றி விகடனார்22 comments :

 1. அட பாவிங்களே..

  எங்கேயோ ஒருத்தன் செய்த தவறை வைத்து எங்க எல்லாரையும் ஒட்டு மொத்தமா கரிச்சிகொட்டிடேளே, 'தோ வரேன். நாளைக்கு என் பதிவோட...
  சும்மா இருந்த என்னை தட்டி எழுப்பிடாங்க தமிழா... இவங்கள சும்மா விட போறது இல்லை..

  ReplyDelete
 2. அமெரிக்க மாப்பிள்ளையை குறை சொல்வது இருக்கட்டும் ,இங்கேயும்தான் கொடுமை நடந்துகிட்டிருக்கு ,ஒரு சில விதிவிலக்குகளை வைத்துக் கொண்டு எல்லோரும் அப்படித்தான் என்று முடிவுக்கு வருவது எப்படி சரியாகும் ?
  சிந்திக்கத் தெரியாத பெண் எங்கிருந்தாலும் அடிமைதான் !
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. // சிந்திக்கத் தெரியாத பெண் எங்கிருந்தாலும் அடிமைதான் //

   சூசூசூசூசூசூப்பர் பகவான் ஜி.

   Delete
  2. boss!! சூப்பர் ரா சொன்னீங்க!!

   Delete
 3. தவறுகள் ஏற்படுவது இயற்கை தான். ஆனால் ஒரு பொறுப்புள்ள பத்திரிக்கையாளன் தவறு செய்யக்கூடாது என்று எண்ணுபவன் நான்.
  இந்த கட்டுரைக்கு வந்துள்ள கருத்துக்களைப் பார்த்தாவது, இனி இவ்வாறான ஒரு தவறை நிகழாமல் பார்த்துக்கொள்கிறார்களா என்று பார்ப்போம்.

  இதனை அனைவரும் படிக்குமாறு வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. நூறில் ஒன்றாக நடந்திருக்கலாம் ...
  அதுதான செய்தியாளர்களுக்கு வேண்டும்.

  ReplyDelete
 5. இது உண்மைச் சம்பவம்மாதிரி தெரியவில்லை...
  கட்டுரையாசிரியரின் எண்ணைங்களை ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை வைத்து எழுதப்பட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது...
  அப்படியே சினிமாவுல நடக்குற சில சம்பவங்களும் சொல்லப்பட்டுள்ளது.

  ReplyDelete
 6. இங்கேதான் கள்ளக்காதல் கொலைகள் அதிகம். அங்கே இதெல்லாம் சாத்தியமில்லைன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. மிகப் பெரிய நிறுவனம், செய்திகளை ஆராய்ந்துதான் வெளியிடும்ங்கற பேர் போய் ரொம்ப நாளாச்சே மதுரைத் தமிழா. ஒருசில வரிகள்ல பெண்களையே இழிவு பண்ணிட்டார்னு ஒரு எழுத்தாளருக்கு எதிரா பொங்கறவங்க இந்த மாதிரி ஒரு கேஸ் தெரிய வந்ததால அமெரிக்க மாப்பிள்ளைங்களையே பொங்கல் வெக்கறதை எதித்து பொங்க வேணாமோ...? (என் அண்ணன் மகளை அமெரிக்க மாப்பிளைக்குத்தான் கொடுத்திருக்கோம். அவர் தங்கம்ல...)

  ReplyDelete
 8. நம் நாட்டில் இல்லாத கொடுமையா!

  மலர்

  ReplyDelete
 9. மிகவும் கேவலம், சென்சேஷனலுக்காகச் சொல்லப்படும் ஒன்று, நடு நிலைமையானக் கட்டுரை அல்ல....அப்படிப் பார்த்தால் ஆண்கள் படும் வேதனைகளை ஏன் எந்தப் பத்திரிகையும் எழுதுவதில்லை? பெண்களுக்குத்தான் ஆதரவாகச் சட்டம் இருக்கின்றது என்பதனாலா?! நான் பெண்கள் பத்திரிகை எதுவுமே வாசிப்பதில்லை. அதில் வரும் பெரும்பான்மையானக் கட்டுரைகள் ஆதாரமற்றவை, மட்டுமல்ல ஆரோக்கியமான சூழலை உருவாக்கவில்லை. விஷ விதைகளைத்தான் தூவுகின்றன. - கீதா

  ReplyDelete
 10. இண்டர்வியூ செய்தவர் அமேரிக்கா போய் கள ஆய்வு செய்தாரா ? ஒன்றிண்டு பேர் இருக்கலாம் அதற்கு கைக்கு வந்தபடி எழுதக்கூடாது ..இனியாச்சும் அவசரப்பட்டு இப்படி வாங்கி கட்டிகாதீங்க விகடன்

  ReplyDelete
 11. விகடனின் தரம் தாழ்ந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது!

  ReplyDelete
 12. ஏதோ ஒருவருக்கு அங்கே இப்படி நடந்திருக்கலாம்.
  அதை குறிப்பிட்டும் கட்டுரை வந்திருக்க வேண்டும்.

  ஆனால் இதுவும் ஒரு விழிப்புணர்வு பதிவு தான்.
  ஒரு சிலர் இன்னமும் இப்படி இருக்கிறார்கள் தான்.

  ReplyDelete
 13. என்னமோ ரேட்டிங் ன்னு சொல்றாங்களே?அதுக்காக,எத வேணும்னாலும் புனைஞ்சு எழுதலாம் னு விகடன் தீர்மானிச்சு,ரொம்ப நாளாச்சு!

  ReplyDelete
 14. தமிழன் சகா மாதிரி ஒரு தங்கத்தை கண்முன்னாடி நாங்க பாத்துகிட்டு இருக்கும் போது, இப்படி அமரிக்க மாப்பிள்ளைனு ஒட்டுமொத்தமா டைட்டில் கொடுப்பாங்க. இது அந்த பூரிக்கட்டைகே அடுக்காது :((( விடுங்க சகா, நாம அவங்ககிட்ட டூ விட்டுருவோம்!

  ReplyDelete
 15. இதுவும் ஒருவகை வியாபார உத்தியாக இருக்கலாம். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இவ்வாறாகப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 16. அடங்கொன்னியா, அமெரிக்க மாப்பிள்ளைக்கு கல்யாணமெல்லாம் நடக்குதா?

  வழக்கமா அமெரிக்க மாப்பிள்ளையுடன் நிச்சயம் மட்டும் நடக்கும், அப்புறம் க்ளைமாக்ஸில் ஹீரோ பொண்ணை கட்டிக்கிடுவார். இப்படி பொண்ணை தனக்கு நிச்சயம் பண்ணிகிட்டு இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேலை மனக்கெட்டு அமெரிக்காவுல இருந்து வருபவர்தான் அமெரிக்க மாப்பிள்ளைன்னு அல்லவா இத்தனை நாள் நம்பிகிட்டிருந்தேன்??

  ReplyDelete
  Replies
  1. ஹா,,,,ஹா...ஹா.. நான் கூட சினிமாக்களில் அமெரிக்க மாப்பிள்ளை என அறிமுகப்படுத்தும்போது இப்படி தான் நினைப்பேன். அந்த காட்சியும் அப்படித்தானே முடியும்:))))))

   Delete
 17. அமெரிக்கா மேல அம்மணிக்கு என்ன கோவமோ தெரியலையே! விசா கிடைக்கலையோ என்னமோ? ஒரு தடவை போய்ட்டு வந்தா அம்ரிக்காவை ஆகா ஓகோன்னு புகழ்வாங்க அங்க எவ்வளோ சுதந்திரம் இருக்குமா தெரியுமான்னு கட்டுரை எழுதுவாங்க
  அமேரிக்கா போய் ஒருத்தன் கெட்டவன் ஆகப்போறதில்ல . கேட்ட புத்தி உள்ளவன் அமேரிக்கா போனா நல்லவனா மாரிடுவானா என்ன? இன்னும் கேட்டா அங்க வாலை சுருட்டித்தானே வச்சுருக்கணும்.

  ReplyDelete
 18. சரியா சொன்னீங்க, இதெல்லாம் பரபரப்புக்கு எழுதுறது.
  http://aarurbass.blogspot.com

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 418 ) அரசியல் ( 276 ) தமிழ்நாடு ( 137 ) இந்தியா ( 117 ) சிந்திக்க ( 93 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 85 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 44 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 34 ) திமுக ( 32 ) வீடியோ ( 31 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 29 ) சமுகம் ( 29 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) பயனுள்ள தகவல்கள் ( 21 ) காதல் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) காங்கிரஸ் ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) வாழ்க்கை அனுபவம் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) ரஜினி ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தமிழக அரசியல் ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) #modi #india #political #satire ( 8 ) oh..america ( 8 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அன்பு ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) சிரிக்க ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) மனம் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) உலகம் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) போலீஸ் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) humour ( 6 ) political satire ( 6 ) rajinikanth ( 6 ) thoughts ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கவிதை ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில்நுட்பம் ( 6 ) நண்பர்கள் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) #india #political #satire ( 5 ) Award ( 5 ) face book ( 5 ) india ( 5 ) satire ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) உறவு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) Today America ( 4 ) corona ( 4 ) postcard thoughts ( 4 ) single postcard ( 4 ) tamil joke ( 4 ) vikatan ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அரசியல் கலாட்டா ( 4 ) அழுகை ( 4 ) இன்று ஒரு பயனுள்ள தகவல் ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உண்மைகள் ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமுக பிரச்சனை ( 4 ) சமுகப் பிரச்சனை ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) சீனா ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) best tamil tweets ( 3 ) health benefits ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) social issue ( 3 ) super singer ( 3 ) wife ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ...அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சமுக சிந்தனை ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மக்கள் ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Phototoon ( 2 ) Social networking danger ( 2 ) Tamilnadu ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) Women's Day ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) dinamalar ( 2 ) facebook ( 2 ) life ( 2 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) modi ( 2 ) satirical news ( 2 ) sexual harassment ( 2 ) sgurumurthy ( 2 ) tamil ( 2 ) tamil memes ( 2 ) tamil nadu ( 2 ) tips ( 2 ) twitter ( 2 ) useful info ( 2 ) | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) ஊடகம் ( 2 ) எதிர்காலம் ( 2 ) என் மனம் பேசுகிறது ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) குஷ்பு ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக விழிப்புணர்வு ( 2 ) சரக்கு ( 2 ) சிரிக்க சிந்திக்க ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தன் நம்பிக்கை ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தீபாவளி மலர் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நாட்டு நடப்புகள் ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பாராட்டுக்கள் ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பேச்சு ( 2 ) பொங்கல் ( 2 ) மதநல்லிணக்கம் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனநிலை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #EIA #EIAACT2020 ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #Justice #RSS #BJP ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #ModiSurrendersToChina ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #farmersProtest #delhi ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #withdraweia2020 ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2020 . ( 1 ) 2021 ( 1 ) 2021 தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) @rihanna #farmersProtest #india ( 1 ) Abortion ( 1 ) Arnab Goswami ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Bhagavad Gita ( 1 ) Books ( 1 ) Caste Discrimination ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) Cho ( 1 ) Coronavirus ( 1 ) Daughter ( 1 ) Deficiencies ( 1 ) EIA Draft 2020 ( 1 ) EPS ( 1 ) Facts verified ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Great leader ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) Jammu and Kashmir ( 1 ) July 9th ( 1 ) Kalaiganr ( 1 ) Khushbu ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Madurai ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NEET ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) OPS ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Punjab farmers’ protest ( 1 ) Rajaji Hospital. Covid ( 1 ) Rare information ( 1 ) Reading ( 1 ) Sanghi ( 1 ) Savarkar ( 1 ) Tamil News Channel 18 ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Think Beyond Politics ( 1 ) Thol. Thirumavalavan ( 1 ) Top 150 World Newspapers ( 1 ) United States ( 1 ) Useful website ( 1 ) WhatsApp ( 1 ) World Leaders ( 1 ) Yogi. memes ( 1 ) YouTube ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) america ( 1 ) american heroes ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black crowd ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) brutality ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) controversial issue ( 1 ) coronavirus pandemic. health ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) drama ( 1 ) earning ( 1 ) emothional ( 1 ) experience ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) film review ( 1 ) first night ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) good people ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) human vs nature ( 1 ) humanity ( 1 ) husband ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) kamala harris ( 1 ) khushboo ( 1 ) late leaders ( 1 ) little girl ( 1 ) lockdown ( 1 ) love ( 1 ) master movie ( 1 ) mobile phone ( 1 ) money ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) new jersey ( 1 ) obama ( 1 ) old age ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) peace. ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) police ( 1 ) politics ( 1 ) polltics ( 1 ) positive thoughts ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) real story ( 1 ) recipe ( 1 ) relationship ( 1 ) sachin tendulkar ( 1 ) saffron crowd ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) satire toon ( 1 ) seeman ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sudha ragunathan ( 1 ) suicide ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) terrorists ( 1 ) thatha patti stories ( 1 ) thuglak ( 1 ) thyroid ( 1 ) tn state ( 1 ) unity ( 1 ) use ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) womans day ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அரிய தகவல்கள் ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உடல் ஆரோக்கியம் ( 1 ) உணவு குறிப்புகள் ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) எக்ஸாம் ( 1 ) எடப்பாடி ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கண்ணோட்டம் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) களநிலவரம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துமஸ் சிறப்பு மலர் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்வி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக நலன் ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுகநலன் ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சரும நன்மைகள் ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக அரசியல். பிஜேபி ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக மக்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்ச் சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் 2021 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல் கலாட்டா ( 1 ) தேர்தல். நையாண்டி ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தைராய்டு ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாதிப்பு ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீகார்.2020 ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெண்கள் நலன் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொருளாதாரம். கொரோனா ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் பதிவு ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனிதம் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மரண ஓலங்கள் ( 1 ) மருத்துவ தகவல் ( 1 ) மருத்துவ பலன்கள் ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரமலான் ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாக்குறுதி ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog